For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவில் இருக்கும் குழந்தைக்கு பாடம் கற்று கொடுப்பது சரியா? அதன் விளைவு எப்படி இருக்கும்?

கருவில் இருக்கும் குழந்தையால் நாம் பேசுவதை கேட்க முடியுமா என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையுடன் பிறப்பதற்கு முன்பே பேச வேண்டும் என நிறைய பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். குழந்தையின் கருவறை 9 மாதத்திலேயே சில சத்தங்களை புரிந்து கொள்ள தொடங்கிவிடுகிறது என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தையால் கருவறையில் இருக்கும் போதே, வித்தியாச வித்தியாசமான ஒலிகள் மற்றும் மனிதர்களின் குரல்களை வேறுப்படுத்தி அறிய முடிகிறதாம்.

ஒவ்வொரு விதமான ஒலிகளை கேட்கும் போதும் குழந்தையின் இதய துடிப்பானது அதற்கேற்ற வகையில் துடிக்கிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேட்கும் திறன்

கேட்கும் திறன்

கருவில் இருக்கும் குழந்தைகளை பற்றிய இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கருவில் இருக்கும் போது குழந்தகளுக்கு கேட்கும் திறன் இருப்பதோடு மட்டுமில்லாமல், மொழிகளின் வித்தியாசமும் தெரிகிறது. பிறந்த சில வருடங்களில் அந்த மொழியில் குழந்தை சிறந்து விளங்குகிறது.

கர்ப்ப கால உணர்வு

கர்ப்ப கால உணர்வு

குழந்தை வயிற்றில் இருக்கும் போது கேட்கும் ஒலிகள் குழந்தையின் கேட்கும் திறனையும் மொழிகளை கற்கும் திறனையும் கர்ப்ப காலத்திலேயே மேம்படுத்துகிறது.

ஆய்வு

ஆய்வு

இது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் எட்டு மாத கர்ப்பிணி பெண்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் வித்தியாசமான நிறைய ஒலிகள் ஒலிக்க விடப்பட்டன. தங்களது குழந்தை ஒலிக்கேற்ப அசைவு கொடுப்பதை அந்த பெண்களால் உணர முடிந்தது.

என்ன சத்தம் கேட்கும்

என்ன சத்தம் கேட்கும்

குழந்தை கருவில் இருக்கும் தாயின் உடலுக்குள் இருந்து வரும் ஒலிகள் குழந்தைக்கு கேட்கும். அதனுடன் சேர்த்து சில வெளிப்புற ஒலிகளும் குழந்தைக்கு கேட்கும்.

மொழிகளை கற்க உதவும்

மொழிகளை கற்க உதவும்

குழந்தையின் கருவறைக்குள் கேட்கும் இந்த ஒலிகள், குழந்தைகள் எதிர் காலத்தில் மொழிகளை எளிதாக கற்க உதவுகிறது. சிலர் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பாடம் கற்பிக்கவும், பாடல்களை ஒலிக்க செய்யவும் முற்படுகின்றனர். இது குழந்தையின் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can An Unborn Baby Hear Your Voice

Can An Unborn Baby Hear Your Voice
Story first published: Monday, July 24, 2017, 11:06 [IST]
Desktop Bottom Promotion