கருச்சிதைவு அபாயத்தை எது அதிகரிக்கிறது என்று தெரியுமா?

By: Srinivasan P M
Subscribe to Boldsky

இன்றைய நாளில் மன அழுத்தம் பலரின் உயிரை பழிவாங்கி வரும் வேளையில் அது கருச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே உங்கள் உணவுப் பழக்கத்தையும், உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் செயலையும் கவனித்துக் கொள்ளுங்கள், குறிப்பாக பெண்களுக்கு இது பொருந்தும்.

சில நேரங்களில் கரு வளர்ச்சியுறும் போது தோன்றும் பிரச்சனைகளாலும் கருச்சிதைவு ஏற்படலாம். கரு வளர்ச்சியின் முதல் காலக்கட்டங்களில் நல்ல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் கர்ப்ப காலத்தின் பிற்பகுதிகளில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

எல்லாமே சரியாக இருக்கும் பொழுது கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது என்ற ஐயம் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக இதைப் படியுங்கள். கருவிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பு குறைதல் உள்ளிட்ட திடீரென ஏற்படும் எதிர்பாராத காரணங்களால் கருச்சிதைவு ஏற்படலாம்.

எனவே கருச்சிதைவிற்கான இந்த காரணங்களை நீங்கள் படித்து அறிந்து வைத்துக் கொண்டால் உங்களை நீங்களே நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயது

வயது

கருச்சிதைவிற்கான காரணிகளில் மிக முக்கியமானது தாயின் வயது. இருபது வயதை ஒட்டிய வயதுகளில் உள்ள தாய்மார்களை ஒப்பிடுகையில் நாற்பது வயதுகளில் உள்ள தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முந்தைய கருச்சிதைவு நிகழ்வுகள்

முந்தைய கருச்சிதைவு நிகழ்வுகள்

முன் நாட்களில் கருச்சிதைவு ஏற்பட்ட அல்லது கருக்கலைப்பு நிகழ்ந்திருந்தால் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுப்போன்ற தருணங்களில் பெண்கள் தங்கள் கருவின் வளர்ச்சி நிலையை ஒவ்வொரு வாரமும் கண்காணித்து வரவேண்டியது அவசியம்.

தீவிர உடல்நலக் குறைபாடுகள்

தீவிர உடல்நலக் குறைபாடுகள்

சர்க்கரை நோய் அல்லது பரம்பரையாக வரும் ரத்தக்கட்டு அல்லது கருவழிப் பாதைகளில் ஏற்படும் கட்டிகள் உள்ளிட்ட காரணிகள் கருச்சிதைவிற்கு உடனடி உந்துதலாக அமைகின்றன. இந்த தீவிர நோய்கள் அல்லது குறைபாடுகள் கருவை பலவீனமடையச் செய்வதால் கருச்சிதைவிற்கான வாய்ப்புகள் அதிகம்.

கருப்பை சார்ந்த பிரச்சனைகள்

கருப்பை சார்ந்த பிரச்சனைகள்

பலவீனமான இனப்பெருக்க வழிப்பாதை (செர்விகல்) திசுக்கள் மற்றும் கருப்பை ஆகியவை கூட கருச்சிதைவு அபாயங்களை அதிகரிக்கின்றன. கருப்பை பலவீனமடைவதுடன் உடலில் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்து கருச்சிதைவிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

முந்தைய பிறப்புக் குறைபாடுகள்

முந்தைய பிறப்புக் குறைபாடுகள்

நீங்களோ அல்லது உங்கள் துணைவரோ அல்லது அவர்கள் குடும்பத்திலோ பிறப்புக் குறைபாடுகள் முன்பு நிகழ்ந்திருந்தாலோ அல்லது வேறு வழிப் பிரச்சனைகள் கொண்டவராக இருந்தாலோ உங்களுக்கு கருச்சிதைவிற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே எப்போதும் உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று கருச்சிதைவைத் தவிருங்கள்.

தந்தைவழிக் காரணங்கள்

தந்தைவழிக் காரணங்கள்

தந்தையின் ஆரோக்கிய நிலையும் கருச்சிதைவிற்கு ஒரு முக்கிய காரணம் என்பது ஒரு அதிர்ச்சி தரும் உண்மை. ஒரு மனிதர் தொடர்ச்சியாக பாதரசம், ஈயம் போன்ற நச்சுப் பொருட்களுடன் தொடர்புக்குள்ளானால் இதுப்போன்று நேரலாம். இந்த காரணிகள் விந்தணுவை சிதைத்து கருக்கலைப்பிற்கு வழிவகுக்கும்

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் அல்லது புகைக்கு அதிகம் ஆட்படுத்தல் உள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதேப்போல் ஊசிமுலம் அல்லது உள்ளிழுப்பு மூலம் செய்யப்படும் எந்த ஒரு போதைப் பொருளும் இதே விளைவுகளையே ஏற்படுத்தும். கருச்சிதைவு ஏற்படவில்லை என்றாலும் பிறக்கும் குழந்தை பலவீனமாகவும் அல்லது குறைபாடுகளுடனும் பிறக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன புதிய தம்பதிகளே! குழந்தைக்கு முயற்சிக்கும் ஜோடிகளே! எல்லாம் வெவரமா புரிஞ்சிகிட்டீங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Increases The Risk For A Miscarriage?

In this article, we are here to share some of the reasons why miscarriages happen. Read on to know about the reasons for miscarriages.
Subscribe Newsletter