பிரசவ வலியின் போது பெண்களின் உடலில் ஏற்படும் 8 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுப்பிறவி என்பார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. பொதுவாக அவர்கள் எதிர்க்கொள்ளும் வலியின் அளவு மரணத்திற்கு இணையானது என்றெல்லாம் கூறுவார்கள்.

ஆனால், குழந்தையை ஈன்றெடுக்கும் அந்த தருணத்தில் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் எதிர் கொள்ளும் வலி என்பது உணர்ந்தால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்.

கருப்பையில் குழந்தை இறந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

பெண்ணுறுப்பில் கிழிசல் ஏற்படுவதில் இருந்து, சில தர்மசங்கடமான சூழல்களையும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவை அனைத்தும் இயல்பு தான், இயற்கையால் தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆயினும், இவை வலி மிகுந்தவை என்பதை நாம் மறந்துவிட கூடாது.

யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது?

இனி, பிரசவத்தின் போது பெண்கள் எதிர்க்கொள்ளும் வலி மிகுந்த உண்மைகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உண்மை #1

உண்மை #1

பிரசவத்தின் போது, குழந்தையை வெளியேற்ற பெண்கள் அழுத்தம் தரும் போது, மலம், சிறுநீர் கலந்து வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளன. இதை அவர்களால் கட்டுபடுத்த முடியாது.

 உண்மை #2

உண்மை #2

பிரசவத்தின் போது பெண்ணின் உடலில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. அப்போது "Ecchymosis" ஏற்பட வாய்ப்பிருக்கிறது. Ecchymosis என்பது, கர்ப்பிணி பெண்களின் கண்களை சுற்றி இருக்கும் இரத்த நாளங்கள் வெடிப்பது போன்ற உணர்வை தருவது ஆகும். இதனால் அவர்களுக்கு கண்களை சுற்றி நிறம் கருமையாக மாறும்.

 உண்மை #3

உண்மை #3

இது இயற்கை தான். ஆம், பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்ற தன்மை உடையது. ஆயினும், பிரசவத்தின் போது அவர்களது பிறப்புறுப்பில் கிழிசல் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது குழந்தையின் சுற்றளவை பொருத்தது ஆகும். 95% பெண்களுக்கு இந்த கிழிசல் உண்டாகிறது.

 உண்மை #4

உண்மை #4

பிரசவத்தின் போது பெண்ணுறுப்பு, கருப்பை, கருப்பை வாய், ஆசன வாயு பகுதிகளில் கூட பெண்களுக்கு சேதம் / கிழிசல் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.

 உண்மை #5

உண்மை #5

மேலும், பிரசவத்தின் போது இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், இதனால் அடிக்கடி வாந்தி எடுக்கவும் செய்வார்கள்.

 உண்மை #6

உண்மை #6

பிரசவத்தின் போது அதிகமாக இரத்தம் கசிதல் ஏற்படும். இது இயல்பு தான் என்றாலும். அப்பொது ஏற்படும் வலியை தாங்கிக் கொண்டு, குழந்தையை பெற்றெடுக்க மென்மேலும், அழுத்தம் கொடுப்பது மிகவும் வலி மிகுந்ததாகும்.

 உண்மை #7

உண்மை #7

பிரசவித்த பிறகு சில பெண்களுக்கு இரத்தப்போக்கு நின்றுவிடும். சிலருக்கு நிற்காமல் போகும். இதற்கு 50:50 வாய்ப்புகள் இருக்கின்றன. இதை மருந்துகளின் மூலம் மருத்துவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்.

 உண்மை #8

உண்மை #8

பிரசவத்திற்கு பிறகு ஓரிரு மாதங்கள் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 40 நாளுக்கு ஒருமுறை என மாறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Scary Facts That You Did Not Know About Childbirth

Scary Facts That You Did Not Know About Childbirth, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter