கருவில் வளரும் சிசுவின் எடையை குறைக்க செய்யும் செயல் - கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். உண்ணும் உணவில் இருந்து வாழ்வியல் முறையில் இருந்து அனைத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்க குழந்தை புத்திசாலியா பிறக்கனுமா? இந்த ஒரு விஷயத்த செஞ்சாலே போதும்!

முக்கியமாக மருந்து மாத்திரைகளில். சில வகை மருந்துகள் நீங்கள் சாதாரணமாக என்னலாம். ஆனால், அதன் தாக்கம் உங்களையும், உங்கள் கருவில் வளரும் சிசுவையும் கூட பாதிக்கலாம்.

குழந்தை உதைப்பது பற்றி கர்ப்பிணி பெண்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

லண்டனில் நடந்த சமீபத்திய ஆய்வில், கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தை குறைக்க உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் (SSRIs), சிசுவின் வளர்ச்சியில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்பட காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆண்டி-டிப்ரஷன்ட்

ஆண்டி-டிப்ரஷன்ட்

கர்ப்பமான இருக்கும் பெண்கள் மன அழுத்தம் குறைய உட்கொள்ளும் மாத்திரை மருந்துகள் (SSRIs). கருவில் வளரும் சிசு உடல் எடை குறைவுடன் பிறக்க காரணியாக இருக்கிறது என சமீபத்திய லண்டன் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 205 கிராம்

205 கிராம்

இரண்டு மற்றும் மூன்றாம் மூன்று மாத சுழற்சியின் போது மன அழுத்தம் குறைக்கும் மருந்துகளை (SSRIs) உட்கொண்டால் சிசுவின் உடல் எடை 205 கிராம் அளவு குறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

 முன்னரே பிறக்க வாய்ப்பு

முன்னரே பிறக்க வாய்ப்பு

மேலும், கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் குறைக்க மருந்து மாத்திரைகள் (SSRIs) உட்கொள்வதால், நான்கில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன்னரே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 நார்வே பல்கலைகழகம்

நார்வே பல்கலைகழகம்

நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டன. சிசுவின் உடல் எடை மட்டுமில்லாது நரம்பு சார்ந்த மனவளர்ச்சி குறைப்பாட்டையும் இந்த மன அழுத்த மருந்துகள் (SSRIs) உண்டாக்குகின்றன என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 ஆராய்ச்சி

ஆராய்ச்சி

27,756 உடன் பிறந்த குழந்தைகள் வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், SSRI தாக்கம் ஏற்பட்ட 194 குழந்தைகள் உடல் எடை குறைவாகவும், கர்ப்பகாலம் 4-5 நாட்கள் முன்னப்பின்ன இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வறிக்கை

ஆய்வறிக்கை

இந்த ஆய்வறிக்கை "International Journal of Epidemiology" எனும் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Prenatal Exposure To Anti-depressants May Lower Birth Weight

Prenatal exposure to anti-depressants may lower birth weight, read here in tamil.
Subscribe Newsletter