ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு கண்ணில் படுவதையெல்லாம் சாப்பிட வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் இக்காலத்தில் உண்ணும் உணவுகளின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Foods For Pregnant Women

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து, சிசுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

முட்டையில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பிணிகள் முட்டையை நன்கு வேக வைத்து தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

அவகேடா

அவகேடா

அவகேடோ பழத்தில் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவும். மேலும் அவகேடோ பழம் காலையில் ஏற்படும் சோர்வைத் தடுக்கும்.

கல் உப்பு

கல் உப்பு

கல் உப்பை கர்ப்பிணிகள் சேர்க்கக் கூடாது என்றும், அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் நிறைய நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் கல் உப்பு கர்ப்பிணிகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் இது சிசுவின் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே கர்ப்பிணிகள் அளவாக கல் உப்பை சேர்த்துக் கொள்வது நல்லது.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் பசலைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இரும்புச்சத்து பசலைக்கீரையில் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால், இரத்த சோகை வருவதைத் தடுக்கலாம்.

நட்ஸ்

நட்ஸ்

கர்ப்ப காலத்தில் பசி அதிகம் இருக்கும். அப்போது ஸ்நாக்ஸாக எதை சாப்பிடுவது நல்லது என்று யோசிக்கலாம். அதற்கு நட்ஸ் மிகவும் சிறந்த உணவுப் பொருள். நட்ஸ்களில் ஜிங்க், காப்பர், மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. இதை அளவாக சாப்பிட்டு வந்தால், குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

கேரட்

கேரட்

வைட்டமின் ஏ சருமம், கண்கள், தலைமுடி, எலும்பு போன்றவற்றிற்கு நல்லது. இச்சத்துக்கள் கேரட்டில் ஏராளமாக உள்ளது. இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மைகள் கிடைக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவதால், கேரட் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

மாம்பழம்

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இவை சிசுவின் வளர்ச்சிக்கும், உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கும் உதவும். மேலும் மாம்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் மாம்பழத்தை சாப்பிட, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைவதுடன், மன அழுத்தமும் குறையும்.

தயிர்

தயிர்

தயிரில் உள்ள ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் டி, சிசுவின் மூளை மற்றும் முழு வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. எனவே கர்ப்பிணிகள் தினமும் தயிரை உணவில் சேர்க்க, தாய் மற்றும் சேயின் உடல்நலம் மேம்படும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் ஃபோலேட் உள்ளது. அதுமட்டுமின்றி, அதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உள்ளது. இச்சத்துக்கள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் செய்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். மேலும் பருப்பு வகைகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களை பெண்கள் கர்ப்ப காலத்தில் எடுப்பது மிகவும் நல்லது. பால் பொருட்களில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கால்சியம் மட்டுமின்றி, கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, டி போன்ற கர்ப்பிணிகளின் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods For Pregnant Women

Are you wondering what pregnant women can eat? Well, there are certain best foods for pregnant women. Read on to know about them.
Story first published: Thursday, November 3, 2016, 13:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter