கர்ப்பிணிகள் தர்பூசணி சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும், வளர்ச்சியும் மேம்படும். அதிலும் தற்போது கோடை என்பதால் எங்கும் தர்பூசணி விலை குறைவில் விற்கப்படுகிறது.

இதனைக் காணும் போது கர்ப்பிணிகளுக்கு இப்பழத்தை சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் எழும். உண்மையில் தர்பூசணியை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இதில் கருவின் வளர்ச்சிக்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

சரி, இப்போது கர்ப்பிணிகள் தர்பூசணியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் வறட்சி அடையாது

உடல் வறட்சி அடையாது

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இருக்க வேண்டும். அதிலும் கோடை என்றால் கர்ப்பிணிகள் அதிக அளவில் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானங்கள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், உடலின் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும்.

வைட்டமின்கள் ஏராளம்

வைட்டமின்கள் ஏராளம்

தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை அனைத்தும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள். எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் கர்ப்பிணிகள் தர்பூசணியை சாப்பிடலாம்.

நச்சுக்கள் வெளியேறும்

நச்சுக்கள் வெளியேறும்

கர்ப்பிணிகள் தர்பூசணியை உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தால் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறுவதோடு, சோர்வு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

பி6 மற்றும் மக்னீசியம்

பி6 மற்றும் மக்னீசியம்

இந்த சத்துக்கள் கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் அவசியமானது. எனவே தினமும் ஒரு பௌலில் தர்பூசணியை கர்ப்பிணிகள் அச்சமின்றி சாப்பிடலாம்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று நெஞ்செரிச்சல். ஆனால் தர்பூசணியை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படும்.

தசைப் பிடிப்புகள்

தசைப் பிடிப்புகள்

தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் கடுமையான தசைப் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் தரும்.

லைகோபைன்

லைகோபைன்

தர்பூசணியில் உள்ள அதிகப்படியான லைகோபைன், கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வில் இருந்தும், குமட்டல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் தரும். மேலும் ஆய்வுகளில், லைகோபைன் நிறைந்த உணவுகளை கர்ப்பிணிகள் உட்கொண்டால் முன்சூல்வலிப்பு ஏற்படும் அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Watermelon For Pregnant Women In Summer

Eating watermelon during pregnancy is very healthy. Read to know what are the best benefits of eating watermelon during pregnancy.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter