கர்ப்பிணிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

யாருக்கு தான் குழந்தைகளைப் பிடிக்காது? அந்த அழகான ஆடைகள், பிஞ்சு விரல்கள், பல் இல்லாத சிரிப்பு, ஆஹா.. கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் அற்புதமான பகுதியாகும். அவளுக்குள் ஒரு புதிய வாழ்க்கை உருவாவது, அவளுக்கு அன்பையும், நிறைவையும் கொடுக்கும்.

ஆனால் ஓர் குழந்தையை பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஹார்மோன் சமநிலையின்மை, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் போன்றவை இருக்கும். சில பெண்கள் தங்களுக்கு விருப்பமான உணவையும், ஆரோக்கியமான உணவையும் கூட வெறுப்பதை நாம் பார்த்திருப்போம். ஒருவர் உணவு முறை சரியில்லை என்பதை தோல் மற்றும் முடி மூலமாக அறியலாம். அதிலும் முக்கியமாக பளபளப்பான தோல் கொண்டு அறியலாம்.

ஒரு பெண் கர்ப்பத்தின் போது பெறும் பளபளப்புப் பற்றி யாருக்குத் தான் தெரியாது? இருப்பினும் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் காரணமாக முகப்பருக்கள் மற்றும், முடி உதிர்தல் போன்றவை ஏற்படுகின்றன. இப்போது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகப்பருக்கள்

முகப்பருக்கள்

உங்களுக்கு முகப்பருக்கள் வந்தால் தயாராக இருங்கள். முறையான சரும பராமரிப்பு மூலம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ரெட்டினால் மற்றும் ரசாயனங்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். புதிய தயாரிப்புகளை பயன்படுத்தும் முன் உங்கள் தோல் குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

சரும வறட்சி

சரும வறட்சி

அவர்கள் சருமத்தின் வழக்கமான நிலை இல்லை என்றாலும், சில பெண்கள் சரும வறட்சியால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் நிறைய மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். மேலும் அதிக அளவு திரவ உணவுகளை உட்கொள்ளுவதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள இயலும்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

ஃபேஷியல் மாய்ஸ்சுரைசர்களை மறந்து விடக் கூடாது. ஹெச்.ஜி மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க முடியும்.

மன அழுத்தம் கூடாது

மன அழுத்தம் கூடாது

முடிந்தவரை மனஅழுத்தத்தை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல. அதனைக் கட்டுப்படுத்த தியானம் செய்யலாம்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

இரவு நன்றாக தூங்கவும். ஏனெனில் தூக்கத்தின் போது, உங்கள் உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது. எனவே அது தன்னைத் தானே குணமடைய செய்து கொள்ள போதுமான நேரம் கொடுங்கள்.

பால் ஃபேஷியல்

பால் ஃபேஷியல்

கொதிக்க வைக்காத பாலை பஞ்சில் நனைத்துக் கொண்டு முகத்தை மெதுவாக தேய்க்கவும். உங்கள் முகம் நீரேற்றம் அடைந்து கருமை குறைந்து பளபளப்பு அதிகரிக்கும்.

சோள மாவு ஸ்கரப்

சோள மாவு ஸ்கரப்

சருமத்தில் உள்ள இறந்த தோல்களை நீக்க சோள மாவு மற்றும் தேன் பேஸ்ட் உதவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.

குளிர்ச்சியான கண்களைப் பெற...

குளிர்ச்சியான கண்களைப் பெற...

பலவீனமான கண்களுக்கு வெள்ளரி துண்டு மூலம் நிவாரணம் அளிக்கலாம். அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து உறைய வைப்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

கூந்தல் உதிர்தல்

கூந்தல் உதிர்தல்

நீங்கள் அதிக அளவு கூந்தல் உதிர்வால் பாதிக்கப்பட்டால், கூந்தலை குட்டையாக வெட்டிக் கொள்ளவும். அனைத்து புதுமையானவற்றையும் முயற்சிக்க இதுவே நேரம்.

சன் ஸ்க்ரீன் அவசியம்

சன் ஸ்க்ரீன் அவசியம்

கர்ப்ப காலத்தில் சன் ஸ்க்ரீனை மறக்க வேண்டாம். சூரியனிலிருந்து பாதுகாப்பதே முன்னுரிமைப் பட்டியலில் முதலாவதாக உள்ளது.

சோப்பு வேண்டாம்

சோப்பு வேண்டாம்

சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். அவை உங்கள் சருமத்தை வறட்சியடையச் செய்து புள்ளிகளை ஏற்படுத்தும். எனவே மிருதுவாக்கும் க்ளென்சிங் பாலைப் பயன்படுத்தவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pregnancy Personal Care Tips

Here are pregnancy tips in hindi which will guide you. Pregnancy is a wonderful part of a woman’s life. I’ll list down the common concerns and their remedies during pregnant care:
Story first published: Friday, August 7, 2015, 15:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter