For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்காக இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு சடங்குகள்!!!

By Ashok CR
|

கர்ப்ப காலத்தில் ஒரு இந்திய பெண்ணுக்காக பல்வேறு விதமான சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மதமும், தங்கள் சொந்த ஸ்டைலில் தங்கள் வீட்டிற்கு வரப்போகும் குட்டியை வரவேற்பார்கள். பழங்காலத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தலைமுறையினர் மத்தியில் இந்த சடங்குகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

சொல்லப்போனால் அத்தகைய சடங்குகளில் சில இப்போது பழக்கவழக்கத்தில் இல்லேவே இல்லை. இருந்தாலும் கூட, தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்மணி கர்ப்பமாக இருக்கையில் நம்பப்பட்டு, நடத்தப்பட்டு வரும் பழமையான சடங்குகள் இவைகள்.

சில சடங்குகள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டாலும் கூட சில சடங்குகள் எளிமையான முறையில் கொண்டாடப்படும். மதத்தில் மட்டுமல்லாது, ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் இடையேயும் கூட இந்த சடங்குகள் மாறுபடும்.

வங்காள தேச கர்ப்பிணி பெண்ணுக்கு நடைபெறும் சடங்குகள் மார்வாடி கர்ப்பிணி பெண்ணுக்கு நடைபெறும் சடங்குகளில் இருந்து மாறுபடும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், கர்ப்பிணி பெண்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு சடங்குகளை செய்து வருகின்றனர். அப்படி கர்ப்பிணி பெண்களுக்கு செய்து வரும் பல்வேறு சடங்குகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளைகாப்பு

வளைகாப்பு

தென்னிந்தியாவில் வளைகாப்பு என்னும் பெயரில் கர்ப்பிணிகளுக்கு சடங்குகள் நடத்தப்படும். இந்த சடங்கில் கர்ப்பிணி பெண்களுக்கு 7-9 வகையான கலவை சாதங்கள் சமைத்து, கை நிறைய வளையல்கள் போடப்படும். சந்தனம் பூசப்பட்டு கர்ப்பிணிப் பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள்.

சாஸ்தி பூஜை (Sasthi Puja)

சாஸ்தி பூஜை (Sasthi Puja)

சாஸ்தி என்பவர் இனப்பெருக்கத்திற்கான இந்து கடவுளாகும். கர்ப்பிணி பெண்களுக்காக கிழக்கு இந்தியாவில் தான் இந்த பூஜை முக்கியமான செய்யப்படுகிறது. முக்கியமாக, தங்கள் குடும்பத்தில் கர்ப்பிணி இருக்கும் போது, வங்காள தேச மக்களே இந்த பூஜையை செய்து வருகிறார்கள். தாயாக போகும் பெண்ணையும் அவளின் குழந்தையையும் ஆசீர்வாதம் செய்ய சொல்லி வேண்டவே இந்த பூஜையாகும்.

கோத் பராய் (Godh Bharai)

கோத் பராய் (Godh Bharai)

இந்திய கர்ப்பிணி பெண்களுக்காக நடத்தப்படும் சடங்குகளின் பட்டியல், இந்த சடங்கு இல்லாமல் முழுமை அடையாது. கர்ப்பமாக இருக்கும் ஏழாவது மாதத்தில் இது நடைபெறும். இதில், தாயாக போகும் பெண்ணுக்கு பரிசுகளும் ஆசீர்வாதங்களும் வழங்கப்படும். இதுவும் கூட கர்ப்பிணி பெண்ணுக்கு நடைபெறும் இந்து மத சடங்குகளில் ஒன்றாகும்.

ஷாத் (Shaad)

ஷாத் (Shaad)

கர்ப்பிணி பெண்ணுக்காக ஏற்பாடு செய்யப்படும் மற்றொரு முழுமையான நிகழ்ச்சியாகும் இது. கர்ப்பிணி பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் மாமனார் மாமியார் நடத்தும் சடங்கு இது. இது கோத் பராய் சடங்கு போலவே தெரியலாம், ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. இதில், கர்ப்பிணி பெண்ணை அனைவரும் ஆசீர்வாதிப்பார்கள். அவளுக்கு பிடித்த உணவுகள் அவளுக்கு பரிமாறப்படும்.

புன்சவன அம்ஸ்கரா (Punsavana Amskara)

புன்சவன அம்ஸ்கரா (Punsavana Amskara)

கர்ப்ப காலத்தின் போது கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்படும் மற்றொரு சடங்கு இதுவாகும். அடிப்படையில், ஆண் குழந்தை பெற வேண்டும் என வேண்டி முந்தைய காலத்தில் செய்யப்படும் பூஜை இதுவாகும். ஆனால் இன்றோ, சடங்கு நிகழ்ச்சி என்பதை தவிர இந்த சடங்குக்கு எந்தவொரு மதிப்பும் கிடையாது.

நெய்யு குடிக்கன் கொண்டுவரல் (Neyyu Kudikkan Konduvaral)

நெய்யு குடிக்கன் கொண்டுவரல் (Neyyu Kudikkan Konduvaral)

இந்த சடங்கை செய்வது மலபார் முஸ்லிம்கள் ஆவார்கள். நான்காம் மாதத்தில், 1 அல்லது 2 மாதத்திற்கு தன் தாயின் வீட்டிற்கு கர்ப்பிணி பெண் அனுப்பி வைக்கப்படுவாள். இந்நேரத்தில் தன் உணவில் நெய்யையும் பல மூலிகைகளையும் அவள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பல்ல கணன் போக் (Palla Kanan Pokk)

பல்ல கணன் போக் (Palla Kanan Pokk)

மலபார் முஸ்லிம்களின் மிக சுவாரசியமான சடங்காகும் இது. பிறந்த வீட்டில் ஒரு மாதத்தை கழித்த பின்பு, தன் கணவன் வீட்டிற்கு கர்ப்பிணி பெண் திரும்புவாள். இந்த முறை, அவளின் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் அவளை காண பேக்கரி உணவுகளை கொண்டு வருவார்கள். நாவின் சுவைக்கு ஒரு மாற்றம் வேண்டாமா?

பின்சணம் எழுதி குடிக்கல் (Pinchanam Ezhuthi Kudikkal)

பின்சணம் எழுதி குடிக்கல் (Pinchanam Ezhuthi Kudikkal)

இந்திய கர்ப்பிணி பெண்களுக்காக நடத்தப்படும் சடங்குகளின் மத்தியில், சன்னி முஸ்லிம்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் சடங்கு இது. கர்ப்ப காலத்தின் 5 அல்லது 6 ஆவது மாதத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு முஸ்லியார் எனப்படும் இஸ்லாமிய மருந்து கொடுக்கப்படும். விசேஷ மையினால் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் குரானின் வாசகங்களே அவைகள். இந்த மையை தண்ணீரால் நீக்கி, அதனை உலர்ந்த திராட்சையுடன் குடிக்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்தியர்கள் பல மதங்கள் மற்றும் ஜாதிகளால் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு நடத்தப்படும் சடங்குகளுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. ஆனால் இப்படியான பல்வேறு சடங்குகளின் நாடி ஒன்றே தான்: அது தாயும் பிறக்க போகும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Rituals Performed By Indians During Pregnancy

Wondering what are the rituals performed for a indian woman during pregnancy? Read on to know more about the rituals that are performed by indians during pregnancy.
Desktop Bottom Promotion