For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலம் மகிழ்ச்சியானதாக இருக்க சில டிப்ஸ்...

By SATEESH KUMAR S
|

கர்ப்ப காலத்திற்கு முன் உணவு உண்பது, மாத்திரைகள் உட்கொள்வது போன்ற உடல் ரீதியான ஆயத்ததோடு, மன ரீதியாகவும் தயாராக வேண்டியது அவசியமாகிறது. இப்போது அது குறித்து காண்போம்.

ஒவ்வொரு பெண்ணும், ஆரோக்கியமான மகிழ்ச்சியான கர்ப்ப காலத்தை பெறவே விரும்புவார். இங்கு அவரது கர்ப்ப காலம் சிறப்பானதாக அமைய உறுதி அளிக்கும் தகவல்கள் குறித்து காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப காலத்தில் முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள்

கர்ப்ப காலத்தில் முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள்

கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி தனக்கும், தன்னுள் வளர்கின்ற குழந்தைக்கும் தேவையானவை குறித்தும், அதற்கு அவர் செய்ய வேண்டியது குறித்தும் ஆராய்ந்து அறிய வேண்டும். அவர் தனக்கு தேவையானதை செய்ய வேண்டும் மற்றும் மீதியுள்ள கர்ப்ப காலத்தை ஆரோக்கியமானதாகப் பெற தான் செய்ய வேண்டுவது என்ன என்பது குறித்தும் முடிவு செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மற்றவர்களையும் ஈடுபட செய்யுங்கள்

கர்ப்ப காலத்தில் மற்றவர்களையும் ஈடுபட செய்யுங்கள்

கர்ப்பிணி தன் கணவர், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை தன் கர்ப்ப காலத்தில் ஈடுபட செய்யும் போது, அவர்கள் கர்ப்பிணியை புரிந்து கொண்டு தங்கள் ஆதரவையும் அளிப்பர்.

அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்

அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்

கர்ப்ப காலத்தின் தொடக்கம் பெண்களுக்கு சற்று சிரமம் தர கூடியதாக அமையலாம். மார்னிங் சிக்னஸ் என்று சொல்லப்படகூடிய சோர்வு அவஸ்தைக்கு உள்ளாகலாம். சிடுசிடுப்பான பேச்சுக்களை எதிர்கொண்டு சமாளிப்பது கடினத்தை தரலாம். கர்ப்பிணி மற்றவர்கள் அவரை உணர்ந்து அவரது சிரமங்களை புரிந்து கொள்ள நேரம் தரும் போது நிச்சயம் அவர்கள் அவரை அறிந்து கொள்வார்கள். அனைவரிடமும் அன்புடனும், பாசத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் கருணையுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளும் போது, அவர்களும் அதையே பதிலாக அளிப்பர்.

கர்ப்ப காலத்தை மறக்க முடியாத சிறந்த தருணமாக உருவாக்குங்கள்

கர்ப்ப காலத்தை மறக்க முடியாத சிறந்த தருணமாக உருவாக்குங்கள்

கர்ப்ப காலத்தை சிறந்த தருணமாக்க திட்டமிட வேண்டும். திட்டமிடல் நமக்கு மதிப்புமிக்க நினைவுகளை நிச்சயம் தரும். கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்ப காலத்தின் சிரமங்கள் எப்போதுமே தொடரும் என்பது போல உணர்வார்கள். ஆனால் அனுபவ ரீதியாக பார்க்கும் போது அவர் சிரமங்கள் அவரை கடந்து விரைவிலேயே நீங்காத நினைவாக உருவெடுக்கும். அவரது வாழ்வில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற மாற்றங்களை தொகுத்து வைக்கலாம் இதில் அவர் தன் கணவரையும் ஈடுபடுத்தலாம். அவரது எண்ணங்களையும் அந்த தொகுப்பில் சேர்க்கலாம். மேலும் அவர் புகைப்படத்தையும் இணைக்கலாம். சில வருடங்களுக்கு பின் அந்த தொகுப்பினை மீண்டும் பார்த்து கர்ப்ப காலத்தின் ஏற்ற இறக்கங்களை பகிர்ந்து கொள்ளலாம். இது அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமையும்.

ஆயத்தத்திற்கான நேரத்தை அனுபவியுங்கள்

ஆயத்தத்திற்கான நேரத்தை அனுபவியுங்கள்

விரைவில் கர்ப்ப காலம் குறித்த அனைத்து விஷயங்களும் கடந்து, ஒரு அம்மா மற்றும் அப்பாவின் பொறுப்புகளுடன் கூடிய தாயாக போகிறார். இதை தவிர அவருக்கு வேறு சில பொறுப்புகளும் உள்ளன. அது அவரது தொழில் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது அந்தரங்கம் சம்பந்த பட்டதாகவோ இருக்கலாம். தம்பதிகள் தங்களுக்கிடையே உள்ள உறவின் மீது கவனம் செலுத்த இது சரியான சமயம். மேலும் எதிர்கொள்ளவிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அனுபவிக்க தயாராக வேண்டும்.

நிம்மதியான ஓய்வினை பெறுங்கள்

நிம்மதியான ஓய்வினை பெறுங்கள்

கர்ப்ப காலத்தில் மன அழுத்ததை தளர்த்துவது முக்கியமான ஒன்றாகும். கர்ப்பிணி தன்னை தளர்வாக நிம்மதியாக வைத்து கொள்ள வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள்

நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள்

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து எதிர்மறையான துயர கதைகளை கேட்க நேரிடலாம். அவற்றை புறக்கணித்து கர்ப்ப காலத்தை பேணுவதே சிறந்தது.

உதவி கேட்க பயப்படக் கூடாது

உதவி கேட்க பயப்படக் கூடாது

கர்ப்பிணியின் கர்ப்ப காலம் அவரை சுற்றியுள்ள மற்றவருக்கும் முக்கியமானதே. அவரது கர்ப்ப காலத்தில் அவர்களையும் ஈடுபடுத்தி உதவி கேட்கும் போது, குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மகிழ்ச்சி கொள்வர்.

தகவல் அறிந்தவராக இருங்கள்

தகவல் அறிந்தவராக இருங்கள்

கர்ப்பம் தரித்த முதல் நாளிலிருந்து, குழந்தை பிறப்பு வரை கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் உணர செய்ய வேண்டியது குறித்த தகவல்களை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். மேலும் தாய்மை அடைய போகிறவர்கள் புதிய தாய்மார்கள் மற்றும் தாய்மை அடைந்தவர்கள் ஒருவருக்கொருவர் தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கிடையே தொடர்பினை ஏற்படுத்தி கொள்ளும் வழியினையும் வழங்குகிறது.

புன்னகை

புன்னகை

மிகவும் சிறப்பு வாய்ந்த அதிசயமான ஒன்றான கர்ப்ப காலத்தில், கர்ப்பிணியும் அவரது கணவரும் அங்கத்தினர்கள் ஆவார்கள். எனவே எப்போதும் நிம்மதியாக இருந்து மகிழ்ச்சியான கர்ப்ப காலத்தை அனுபவியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Tips To A Happy Pregnancy

Every woman wants to have a happy, healthy pregnancy. Start now to help ensure that yours will be the best it can be!
Desktop Bottom Promotion