Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
பிரசவம் எளிமையாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய யோகாசனங்கள்!!!
அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இருக்கும் ஒரு அளவுக்கடந்த பயம் தான் பிரசவ வலி மற்றும் குழந்தை பிறப்பு. ஏனெனில் பிரசவ வலி என்பது மிகவும் கடுமையான வலி. இந்த வலியை ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திப்பார்கள். இருப்பினும் இந்த வலியை சற்று குறைப்பதற்கு ஒருசில யோகாக்களை செய்து வந்தால், நிச்சயம் குறைக்க முடியும். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே யோகா செய்யாமல் இருந்ததால், பல பெண்களால் யோகாக்களை இறுதி மாதங்களில் செய்ய முடிவதில்லை.
எனவே கர்ப்பமாக இருக்கும் போதே, யோகாசனங்களை தினமும் பின்பற்றி வந்தால், பிரசவம் எளிதாக நடைபெறும். அதிலும் கர்ப்பிணிகளுக்கு என்று ஒருசில யோகாசனங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றினால், குழந்தை வெளியே எளிதில் வருவதற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக பிரசவ காலம் நெருங்கும் நேரத்தில், இத்தகைய யோகாசனங்களை மேற்கொண்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், சரியான உடற்பயிற்சியாளரின் உதவியுடன் பின்பற்ற வேண்டும். இதனால் ஆபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
சரி, இப்போது கர்ப்பிணிகள் மேற்கொள்ள வேண்டிய சில யோகாசனங்களைப் பார்ப்போமா!!!

பூனை போன்ற நிலை
படத்தில் காட்டியவாறு முட்டி போட்டு, கைகளை ஊன்றி, இடுப்பு பகுதியை மேல்நோக்கி தூக்க வேண்டும். இதனால் குழந்தை வெளி வருவதற்கு எளிதாக இருக்கும். அத்துடன் கால்களை மேலே தூக்கினால், குழந்தையின் அசைவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

குழந்தை போன்ற நிலை
இந்த யோகாசனத்தை கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து செய்து வருவது மிகவும் நல்லது. இதனால் குழந்தை நல்ல நிலையில் வளரும்.

நாய் போன்ற நிலை
கர்ப்பிணிகள் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல், முட்டி போட்டு, கைகளை ஊன்றி, தலையை மேல் நோக்கி தூக்கி இருக்க வேண்டும். இதனால் பிரசவத்தின் போது ஏற்படும் வலி சற்று தணிக்கப்படும்.

எட்டு வைக்கவும்
இந்த யோகாசனத்தை படத்தில் காட்டியவாறு நின்று, உடலை காற்றில் 8 போடுவது போல் அசைய வேண்டும். இதனால் பிரசவத்தின் போது ஏற்படும் இடையூறு தடைப்படும்.

முன் நோக்கி குனியவும்
சில நேரங்களில் குழந்தை நிலை மாறி, பிரவச நேரத்தில் அவஸ்தையை ஏற்படுத்தும். இத்தகைய அவஸ்தை ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் படத்தில் காட்டியவாறு, முட்டி போட்டு, குனிந்து, கைகளை முன் நோக்கி நீட்டி, தலையானது தரையை தொடுமாறு செய்ய வேண்டும். இதனால் குழந்தை சரியான நிலையில் வளர்ச்சி அடைந்து, சரியான நிலையில் வெளிவரும்.

கால்களை மேலே உயர்த்தவும்
பிரசவ காலம் நெருங்க ஆரம்பித்தால், அப்போது பாதத்தை நாற்காலியின் மீது வைத்து, குதிகாலை மேலே தூக்கவும். இதனால் வயிறானது அழுத்தப்பட்டு, குழந்தையானது பிரச்சனையின்றி சீக்கிரம் வெளியே வரும்.

இடுப்பை சுழற்றவும்
எப்படி நின்று கொண்டு இடுப்பை மட்டும் சுழற்றுவோமோ, அதே செயலை இந்த படத்தில் காட்டியவாறு நின்று, வட்டமாக சுழற்ற வேண்டும். இதனால் குழந்தையானது வெளியே செல்லுமாறான திசையில் அழுத்தப்பட்டு, எளிமையான பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

ஸ்குவாட்
படத்தில் காட்டியவாறான நிலை, குழந்தையை வெளியே தள்ளுவது போன்று இருப்பதால், இதனை மேற்கொண்டால், பிறப்புறுப்பு நன்கு விரிவடைய ஆரம்பிக்கும். இதனால் குழந்தை எளிதாக வெளியே வரும்.



Click it and Unblock the Notifications