Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றிய கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...
பொதுவாக உடலுறவு கொள்வது என்பது பாலுணர்ச்சி தூண்டுதலால் நடக்கும் ஒன்றாகும். அது ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் ஏற்படும் ஒர் உணர்வாகும். சரி, இது எப்போது வேண்டுமானாலும் ஏற்படுமா? முக்கியமாக பெண்களுக்கு, அவர்களின் கர்ப்ப காலத்தில் ஏற்படுமா? என்று கேட்டால், கண்டிப்பாக ஏற்படும் என்று தான் சொல்ல முடியும். ஆனால் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
நீங்கள் இதனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதைப் பற்றி பல கட்டுக்கதைகளை கேள்விப்பட்டிருப்போம். சில நேரம் அவை நகைச்சுவையாக கூட இருக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பல நேரங்களில் பாதுகாப்பானதே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாலுணர்வு தூண்டப்பட்டு கணவனிடம் உடலுறவு கொள்ள ஆவல் ஏற்படுகிறதா? இருங்க இருங்க, நீங்க கர்ப்பமாக இருக்கீங்களா? "குழந்தை இதனை உணருமா?", "குழந்தைக்கு அடிப்படுமா?", "பிரசவ வலி ஏற்பட்டு விடுமா?" என்று பல எண்ணங்கள் உங்களுக்கு ஏற்படும் அல்லவா?
இந்த கேள்விகள் எல்லாம் உங்கள் மனதை துளைக்கும். இதுவே உங்களின் அந்த உணர்ச்சியை அணைத்துவிடும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை, கர்ப்ப காலத்தில் பல சந்தர்ப்பங்களில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதே. ஆனால் அதே நேரம், பிரசவத்தில் இடர்பாடு ஏற்படாமல் இருக்க, மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படாமல் இருக்க, உங்கள் மருத்துவர் உடலுறவை தவிர்க்க சொன்னால் அதன் படி நடந்து கொள்ளுங்கள்.
இப்போது கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றிய சில கட்டுக்கதைகளைப் பார்ப்போம்.

உடலுறவு கொள்வது குழந்தையை காயப்படுத்தும்
உடலுறவு என்பது உடல் ரீதியாக குழந்தைக்கு எந்த விதத்திலும் காயத்தை ஏற்படுத்தாது. மருத்துவர் வேண்டாம் என்று சொன்னாலொழிய கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதே என்று மார்ச் ஆப் டைம்ஸ் என்ற அமைப்பு கூறியுள்ளது. கர்ப்ப கால இடர்பாடுகளை பெருமளவில் சந்திக்க நேர்ந்தால் மருத்துவர் இதற்கு தடை விதிப்பது வழக்கம்.
அதிலும் ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, பெண்ணுறுப்பில் அளவுக்கு அதிகமான இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தாலோ, பனிக்குடலில் நீர் கசிவு ஏற்பட்டிருந்தாலோ அல்லது தகுதியற்ற கர்ப்பவாய் இருந்தாலோ, உங்கள் மருத்துவர் உடலுறவு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவார்.

நடப்பது குழந்தைக்கு தெரிய வரும்
அப்பாவும், அம்மாவும் என்ன செய்கிறார்கள் என்பது குழந்தைக்கு தெரியாது. சொல்லப்போனால், பனிக்குடம் மற்றும் கருப்பை தசைகளால் நல்ல பாதுகாப்பில் குழந்தை இருக்கும். அதுமட்டுமல்லாமல் கர்ப்பவாய் அடர்த்தியான சீதத்தினால் சூழப்பட்டிருக்கும்.

உடலுறவு கருச்சிதைவை ஏற்படுத்தும்
உடலுறவு மற்றும் பாலுணர்வு கண்டிப்பாக கருச்சிதைவை ஏற்படுத்தாது. சொல்லப்போனால், பாலுணர்ச்சியால் ஏற்படும் சுருங்குதலுக்கும், பிரசவத்தால் ஏற்படும் சுருங்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது. இருப்பினும் மறுபடியும் மருத்துவரை அணுகி, உடலுறவு கொள்வது ஆபத்தை விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மேலும் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு, மரபுத்திரி அசாதாரண அமைப்புகள் அல்லது குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் ஏற்படும் என்று மையோ கிளினிக் கூறியுள்ளது.

கர்ப்பம் உங்கள் பாலுணர்ச்சி உந்துதலை கொல்லும்
பொதுவாக கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும் என்று மார்ச் ஆப் டைம்ஸ் கூறுகிறது. இந்த பாலுணர்ச்சி உந்துதலுக்கான காரணம் என்னவென்று தெரியுமா? ஹார்மோன்கள் தான். கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அதுவே பாலுணர்ச்சியை தூண்ட காரணமாக அமையும். பொதுவாக கர்ப்பமான முதல் மூன்று மாதங்கள் வாந்தி, குமட்டல் மற்றும் தலை சுற்றல் போன்றவைகள் இருப்பதால், இக்காலத்தில் பெண்கள் சோர்வாக இருப்பார்கள்.
அடுத்த மூன்று மாதத்தில் இவையெல்லாம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்துவிடும். அதனால் இக்காலத்தில் பெண்களுக்கு உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மூன்று பவுண்ட் அளவில் இரத்தம் அதிகமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிலும் அதிகப்படியான இரத்த ஓட்டம் இடுப்பு பகுதியில் தான் இருக்கும் என்று மார்ச் ஆப் டைம்ஸ் கூறுகிறது.

உடலுறவு மூலம் பரவும் நோய்களில் இருந்து கர்ப்பம் பாதுகாக்கும்
உடலுறவு மூலமாக பரவும் நோய்களில் இருந்து கர்ப்பம் உங்களை பாதுகாக்காது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. கர்ப்ப காலத்தில் இவ்வகை நோய் உங்களை தாக்கினால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும்.
கர்ப்ப காலத்தில் இவ்வகை வியாதியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்த வியாதி இல்லாத ஒருவருடனே உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.



Click it and Unblock the Notifications











