Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்!!!
ஒரு பெண் தான் தாய்மை அடைந்ததை அறிந்தவுடன் அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சியைகாட்டிலும் சிறந்த ஒன்று எதுவும் இல்லை. அந்த பெண் கர்ப்பம் அடைந்ததால் அவள் மட்டுமன்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த கர்ப்பகாலத்தில் அவளை கண்ணும் கருத்துமாக கவனித்து ஒரு குழந்தையை ஈன்றெடுக்க செய்வார்கள். அந்த குழந்தை வரவேற்க அனைவரும் மகிழ்ச்சியோடு காத்திருப்பார்கள்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆகுவதோடு அதனை இவ்வுலகிற்கு வரவேற்கவும் தயாராகிறாள். இந்த சமயத்தில் அவளுக்கு தேவையான உடல்நல பராமரிப்பு அவசியமான ஒன்றாகும். ஒரு பெண் எல்லா நேரங்களிலும் தன்னையும், தான் சுமக்கும் குழந்தையையும் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். இரண்டாவது முறை கருவுறும்போது இது மேலும் வலுவடையும். ஏன்னெனில், அந்த சமத்தில் உங்கள் முதல் குழந்தையையும் சமாளிக்க வேண்டும். இந்த கருவுற்றிருக்கும் காலத்தில் பல நோய்களும் வரக்கூடும். சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எளிதில் தாக்கக்கூடும். கர்ப்பகால நீரிழிவு நோய் எல்லாப் பெண்களுக்கும் வரக்கூடிய ஒன்றுதான் அதேபோல் இரத்த அழுத்தமும் ஏற்படக்கூடும்.

இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்று ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கலாம். எனினும், சில பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும். இந்த பிரச்சனைகள் உங்களையும் உங்கள் குழந்தையும் பாதித்து உயிருக்கு போராடும் நிலைமையையும் ஏற்படுத்தும். இந்த இரத்த அழுத்தம் உங்களையும் குழந்தையையும் மிதமாகவோ அதிகமாகவோ பாதிக்கக்கூடும். பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன் இதனை கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் பல உள்ளன. அதனால் இவற்றை பின்பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் சிறந்ததாகும். கீழே உள்ளவை இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் சிலவாகும்.
கருவுற்றிருக்கும் காலத்தில் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது ப்ரீ கிளம்ப்சியா என்னும் நோய் தாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். இதற்கான காரணங்கள்:
* இரத்த குழாய்களுக்கு சேதம் விளைவிப்பது
* ஊட்டச்சத்து இல்லா உணவுப் பழக்கம்
* கருப்பைக்கு போதுமான இரத்த போக்குவரத்தின்மை
* நோய்எதிர்ப்பு மண்டலத்தின் குறைவான செயல்பாடு
இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படக்கூடும் பல இரத்த அழுத்த சிக்கல்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
1. கர்ப்ப கால உயர் இரத்தஅழுத்தம்:
இது இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். கற்பகால இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். எனினும், அவர்களின் சிறுநீரில் ப்ரோடீன் சக்தி இருக்காது. கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்களை பிரசவத்திற்கு பின் ப்ரீ க்ளம்ப்சியா நோய் பாதிக்கும் பிரச்சனையை உள்ளது.
2. இருபதாவது வாரங்களில் இரத்த அழுத்தம்:
சில பெண்களுக்கு 20 வாரங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. இதனை குரோனிக் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள். இந்த வகை இரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகும் தொடரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரணமாக பிரசவத்திற்கு பிறகு சுமார் 12 வாரங்களுக்கு தொடரும்.
3. மேலும் அதிகரிப்பது:
சில பெண்கள் ப்ரீ க்ளம்ப்சியா நோய் மேலும் அதிகரித்தல் மற்றும் குரோனிக் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கொடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். இந்த வகையில், அந்த பெண்ணின் சிறுநீரில் அதிக அளவு ப்ரோடீன் நிறைந்து இருக்கும்.
கவனமாக இருப்பதற்கு:
* அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் சிலவகை வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். கர்ப்பகால டிப்ஸ்களில் ஒன்றாக உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிபெண்கள் சில மெல்லிய உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.உங்கள் கணவரோடு ஒரு சிறிய நடைபயணம் மேற்கொள்ளலாம்.
* இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிபெண்கள் பின்பற்றவேண்டிய அடுத்த வழி ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்கவழக்கம். எந்த காரணத்திற்காகவும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. உங்கள் டாக்டர் ஆலோசித்து எந்த வகை உணவை சாப்பிடவேண்டும் என்று கேட்டு அதை பின்பற்ற வேண்டும்.
* உணவில் மூலப்பொருட்களை சேர்ப்பது என்பது கர்ப்பிணிப்பெண்கள் பின்பற்றவேண்டிய டிப்ஸ்களில் ஒன்றாகும். இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் தங்களது உணவில் பூண்டு போன்ற மூலப்பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கும்.
* இவை எல்லாவற்றிக்கும் பிறகு இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் தனது இரத்த அழுத்த அளவுகளை தொடர்ந்து பரிசோதித்து கொள்ளவேண்டும். போதுமான இடைவெளிகளில் பரிசோதிக்க வேண்டும். உங்கள் டாக்டர் தவறாமல் அணுகுவதன் மூலம் அவற்றை கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
* கர்ப்ப காலத்தில் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இது எல்லா கர்ப்பிணிப்பெண்களும் பின்பற்ற வேண்டிய முக்கியமான டிப்ஸ் ஆகும். அமைதியான மனம் எல்லா அழுத்தங்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் உங்களை காக்கும். தியானம் செய்வதன் மூலமாக சிறந்த பலனை பெறலாம். ஒரு நாளில் 15-20 நிமிடங்கள் தியானம் செய்து வித்தியாசத்தை பாருங்கள். கர்ப்பகால ஒவ்வொரு நிமிடங்களையும் சந்தோஷமாகக் கழிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications