Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கர்ப்பத்தின் போது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க சில டிப்ஸ்...
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கர்ப்பத்தின் போது உடலின் எடை அதிகமாவதால், அது மிகவும் சிரமமாக இருக்கும். குறிப்பாக முதன் முறையாக கருத்தரிப்பவர்களுக்கு, இந்த அளவில் உடல் எடை அதிகரிப்பது ஒரு பெரிய சவாலான விஷயமாகும். ஆனால் சில பெண்கள் அளவுக்கு அதிகமான எடையை பெறுகிறார்கள்.
இவ்வாறு கர்ப்பமாக இருக்கும் போது, அளவுக்கு அதிகமான எடையில் இருந்தால், அது வயிற்றில் வளரும் குழந்தையின் எடையை பிற்காலத்தில் அளவுக்கு அதிகமாக்கிவிடும். மேலும் மருத்துவர்களும், உடல் எடையை அவ்வப்போது பரிசோதித்து, சரியான எடையை பராமரிக்குமாறு அறிவுறுத்துவார்கள். எனவே அந்த மாதிரி அளவுக்கு அதிகமாக உடல் எடை வருவதை தவிர்க்க வேண்டுமெனில், ஒருசில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து, அவற்றை பின்பற்றி உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான காலை உணவு
தினமும் காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை, சரியான நேரத்தில் உட்கொண்டு வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, தேவையில்லாத கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, சரியான உடல் எடையை பராமரிக்க உதவியாக இருக்கும்.

நடைப்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும் போது, தினமும் 30 நிமிடம் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்.

கலோரிகளில் கவனம் தேவை
கர்ப்பிணிகள் தினமும் 300-500 வரை கலோரிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் சரியாக கிடைக்கும். மேலும் இது உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்
கர்ப்பமாக இருக்கும் போது, பசி அதிகம் இருக்கும். ஏனெனில் இருவருக்கான உணவு தேவைப்படுவதால், அப்போது மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை தவிர்த்து, நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த ஸ்நாக்ஸ்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்
கர்ப்பிணிகள் அறவே தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்று தான் ஜங்க் உணவுகள். ஏனெனில் இவற்றில் கொழுப்புக்கள் தான் அதிகம் நிறைந்திருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடலின் எடை அதிகரித்து, பிற்காலத்தில் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சீரான இடைவெளியில் சாப்பிடவும்
கர்ப்பமாக இருக்கும் போது ஒரே நேரத்தில் நிறைய உணவுகளை சாப்பிட இயலாது. ஆகவே சீரான இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனாலும் தேவையில்லாமல் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்
கர்ப்பத்தின் போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருவேளை உடலில் வறட்சி ஏற்பட்டால், இறுதி மாதத்தில் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே தண்ணீர் அதிகம் குடித்தால், மலச்சிக்கலை தடுப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி
கர்ப்பிணிகள் தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் யோகா போன்ற பயிற்சிகளை செய்வது இன்னும் சிறந்தது.

ஆசையைக் கட்டுப்படுத்தவும்
இந்நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு நிறைய உணவுப் பொருட்களை உட்கொள்ள ஆசை எழும். ஆனால் அவ்வாறு உண்ணும் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாக இருந்தால், நல்லது. குறிப்பாக, அவற்றை அளவாக உட்கொண்டால், இன்னும் சிறந்தது. இது தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications