Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
கர்ப்பத்தின் போது வாயுத் தொல்லையை உண்டாக்கும் உணவுகள்!!!
அனைவருமே வாயுத் தொல்லையால் பாதிக்கப்படுவோம். ஏன் பிறந்த குழந்தைகள் முதல் அனைவருமே, இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுவது சாதாரணமானது. இதற்கு காரணம் ஒருசில உணவுகள் தான். மேலும் சரியில்லாத உணவுப் பழக்கவழக்கங்களான சாப்பிடும் போது காற்றை விழுங்குவதும் வாயுத் தொல்லையை உண்டாக்கும். அதிலும் கர்ப்பமாக இருக்கும் போதும் நிறைய உணவுகள் மூலமாகவும் வாயுத் தொல்லையானது ஏற்படும்.
குறிப்பாக மாவுப் பொருட்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் செரிமானப் பிரச்சனையை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் முறையற்ற குடலியக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தும். எனவே தான் கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் அதிக கவனம் தேவை என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு வாயுத் தொல்லை மற்றும் சரியில்லாத குடலியக்கம் என்றால், மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவார்கள்.
அவ்வாறு ஆலோசனைப் பெற்று அத்தகைய வாயுத் தொல்லையை நீக்குவதற்கு பதிலாக, வாயுத் தொல்லையை உண்டாக்கும் உணவுகளில் சற்று கவனமாக இருந்தால், நிச்சயம் வாயுத் தொல்லையை நீக்கலாம். அதற்காக அத்தகைய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டாம். அதிலுள்ள சத்துக்கள் உடலில் சேரும் அளவு மட்டும் சாப்பிட்டு வந்தால் போதுமானது. சரி, இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்பிள்
பொதுவாக ஆப்பிள் செரிமானத்தை அதிகமாக்கும் உணவுப் பொருள் தான். ஆனால் அதில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

முட்டைகோஸ்
கர்ப்பிணிகளுக்கு வாயுத் தொல்லையை உண்டாக்கும் உணவுப் பொருட்களில் முட்டைகோஸ் முக்கியமானது. இந்த காய்கறி வாயுப் பிரச்சனையை உண்டாக்குவதோடு, செரிமானத்தை குறைத்து, நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும்.

பயறுகள்
பயறு வகைகளில் ராஃபினோஸ் என்னும் வாயுத் தொல்லையை உண்டாக்கும் பொருள் உள்ளது. பொதுவாக பயறு வகைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால் கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், வாயுத் தொல்லையை சரிசெய்யலாம். அதிலும் அதனை குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்து, பின் சாப்பிட்டால் வாயுத் தொல்லையை உண்டாக்காது.

பொரித்த உணவுகள்
சாதாரணமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் செரிமானமாவதற்கு நிறைய நேரம் ஆகும். எனவே பொரித்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளான இறைச்சி, ப்ரெஞ்ச் ப்ரைஸ் போன்றவற்றை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முள்ளங்கி
அனைவருக்குமே முள்ளங்கி சாப்பிட்டால், நாற்றம் மிகுந்த வாயுவானது வெளிவரும் என்பது தெரியும். எனவே இதனையும் அளவாக சாப்பிடுவது நல்லது.

வெங்காயம்
வெங்காயம் சாப்பிட்டால், வாயில் இருந்து துர்நாற்றம் வருவதோடு, வாயுத் தொல்லையும் ஏற்படும்.

டர்னிப்
டர்னிப் அதிகம் சாப்பிட்டாலும், வாயுத் தொல்லை ஏற்படுவதோடு, வயிற்று உப்புசத்துடன் இருக்கும். ஆகவே கர்ப்பிணிகள் டர்னிப்பை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்கள்
கார்போனேட்டட் பானங்களான குளிர்பானங்களை சாப்பிட்டாலும், அதில் உள்ள கேஸானது, உப்புசத்தை ஏற்படுத்துவதோடு, வாயுத் தொல்லையையும் உண்டாக்கும். மேலும் அதில் உள்ள தேவையில்லாத காற்று செரிமானப் பாதையில் நுழைந்து, மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நல்லது.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிடும் போது செரிமானமானது மெதுவாக நடைபெறுவதோடு, அது பெருங்குடலில் பாக்டீரியாவை உண்டாக்கி, செரிமானமாகாத உணவுப் பொருட்களை உடையச் செய்து, வாயுத் தொல்லையை உண்டாக்கும்.

சீஸ்
கர்ப்பிணிகள் நிச்சயம் சீஸை அறவே தவிர்க்க வேண்டும். இது வாயுத் தொல்லையை மட்டுமின்றி, அதில் உள்ள பாக்டீரியாக்கள் கருப்பையில் உள்ள சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சோளம்
சில மக்களுக்குத் தான் சோளமானது எளிதில் செரிமானமடையும். ஆனால் பலருக்கு இதனை சாப்பிட்டால், உடலில் தேவையில்லாத வாயு உருவாவதோடு, வயிற்று வலியையும் உண்டாக்கும். எனவே இதனை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அவகேடோ
அவகேடோ பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும். எனவே இதனை அளவாக சாப்பிடுவதே நல்லது.

கிளை கோசு (Brussel sprouts)
இந்த காய்கறியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருந்தாலும், அது வாயு மற்றும் உப்புசத்தை உண்டாக்கும்.

வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள வெள்ளரிக்காய் கூட வாயுத் தொல்லையை உண்டாக்கும். பொதுவாக வெள்ளரிக்காய் ஒரு ப்ளீச்சிங் பொருள். இந்த உணவுப் பொருள் ஒரு சிலருக்கு மட்டுமே வாயுத் தொல்லை உண்டாக்கும். எனவே கர்ப்பிணிகள் வாயுத் தொல்லை இருந்தால், இதனை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications