Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
பிரசவத்தின் போது முதுகு வலியை லேசாக்குவது எப்படி?
இந்த உலகத்தில் உள்ள பல உன்னதமான உணர்வுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெற்றுள்ளது தாய்மை. ஒரு பெண்ணுக்கு தாயாவதை விட வேறு என்ன சுகம் இருக்க முடியும். அந்த பிஞ்சு உயிரை பெற்றெடுக்க ஒரு பெண் கருவை சுமப்பதில் இருந்து அதை பெற்றெடுக்கும் வரை மேற்கொள்ளும் கஷ்டங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. அதுவும் பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம் என்றே கூறலாம்.
நீங்கள் தாயாக போகிறீர்கள் என்ற செய்தியை கேட்ட தருணத்தை விட இவ்வுலகில் உங்களுக்கு சிறந்ததாக எதுவுமே இருக்க முடியாது அல்லவா? அந்த புதிய உயிரை வரவேற்க கருவுற்ற காலத்தில் இருந்தே உங்களை நீங்கள் தயார் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். இருப்பினும் தாயாக போகும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு கர்ப்பம் முதல் பிரசவம் வரை பல சந்தேகங்கள் எழுவது இயல்பு தான். நாம் ஏற்கனவே கூறியதை போல பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் சிக்கலான நேரமே. அந்நேரத்தில் ஒரு பெண் தன் உடம்பில் பல இடங்களில் வலியை சந்திக்க நேரிடும். அது குழந்தையின் எந்த பகுதியில் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே அமையும்.
பேக் லேபர் என்றால் பிரசவ நேரத்தில் ஒரு பெண்ணுக்கு கீழ் முதுகு பகுதியில் ஏற்படும் வலியாகும். பிறப்பு பாதையை குழந்தை அடையும் போது அதன் தோரணையால் தான் இந்த வலி ஏற்படுகிறது. அதனால் இது எல்லோருக்கும் எப்போதும் ஏற்படும் என்று கூற முடியாது. பிரசவம் என்பது ஒரு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி நடக்கலாம். சிலருக்கு கீழ் முதுகில் அதிக வலி வரலாம், சிலருக்கு வலி இருப்பதில்லை. இது ஒன்றும் ஆபத்தான நிலை கிடையாது. இருப்பினும் இந்த வலி ஏற்படும் போது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனை போக்க குழந்தையின் தோரணையை மாற்றுவது ஒரு வழியாகும்.
இந்த கீழ் முதுகு வலியை குறைக்க சில டிப்ஸ் உள்ளது. இருப்பினும் அவைகளை பின்பற்றும் முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த முறைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தினால் அவைகள் பின்பற்றுவதை நீங்கள் நிறுத்தி விடலாம்.

உடற்பயிற்சிகள் உதவும்
இந்த முதுகு வலியை கட்டுப்படுத்தி பிரசவ நேரத்தில் வலியில்லாமல் இருக்க உடற்பயிற்சியில் ஈடுபடலாம். நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். அது உங்களை ஆசுவாசபடுத்தும்.

தண்ணீர் மசாஜ் மேற்கொள்ளுங்கள்
வெந்நீர் விழும் ஷவரில் சிறிசு நேரம் நின்றாலோ அல்லது அதனை உங்கள் கீழ் முதுகில் விழும் படி உங்கள் கணவனை உதவி செய்ய சொன்னாலோ கீழ் முதுகில் ஏற்படும் வலி குறையும்.

பிரஷர் உத்தி
உங்கள் கைகளை கொண்டு இடுப்பெலும்புக்கு கீழ் அல்லது அதற்கு மேல் அழுத்தி தடவவும். அது முதுகு வலியை குறைக்கும். இந்த பகுதியில் பிரஷர் போட்டால் வலி நீங்கும் என்பதால் பலரையும் இதை செய்ய சொல்கின்றனர்.

கைகளையும் முட்டிகளையும் தரையில் வைத்து உடற்பயிற்சி
கைகளையும் முட்டிகளையும் தரையில் வைத்து உடற்பயிற்சி செய்தால் முதுகு வலி வெகுவாக குறையும். இந்த உத்தியை கையாளும் போது குழந்தையை இடுப்பெலும்பு பகுதியை விட்டு வெளியேற்றும். அதனால் குழந்தைக்கு சுற்றித் திரிய போதிய இடம் கிடைக்கும். இது முதுகு வலியையும் குறைக்கும்.

இடுப்பெலும்பை ஒருச்சரித்தல்
கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொதுவான உத்திகளில் இதுவும் ஒன்று. பிரசவ முதுகு வலியை குறைக்க இதுவும் பெரிதும் உதவும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான். உங்கள் பின்புறத்தை உள்ளிழுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வாருங்கள். இதை தொடர்ந்து செய்யலாம்.

இதர கருவிகள்
பிரசவ முதுகு வலியை கட்டுப்படுத்தவும் வலியை குறைக்கவும் பிறப்பு பந்து போன்ற இதர கருவிகளையும் பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு எந்த தோரணை அவர்களுக்கு வசதியை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் சுலபமாக கண்டறிய முடியும். அதனால் முதுகு வழியையும் கட்டுப்படுத்த முடியும். ரோலிங் பின்ஸ் போன்ற கருவிகளை பயன்படுத்தியும் கூட பிரஷரை கட்டுப்படுத்தி பிரசவத்திற்கு வசதியை ஏற்படுத்தலாம்.

மருத்துவரை அணுகுங்கள்
இந்த வலியை போக்க எந்த தோரணை சிறந்தது என்று உங்கள் மருத்துவரிடமும் ஆலோசனை பெறுவது அவசியமான ஒன்று. உங்கள் மருத்துவர் உங்களுக்கு சில தோரணைகளை பரிந்துரைப்பார். மேலும் சில இடுப்பசைவுகளையும் பரிந்துரைப்பார். இவையனைத்தும் குழந்தை நகரச் செய்து அதன் தோரணையை மாற்றும். பிரசவத்தில் அதீத கவனம் தேவை. ஒவ்வொரு முறையையும் பாதுகாப்பாக செய்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications











