Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஆரோக்கியமான குழந்தையைப் பெற வேண்டுமா?

கர்ப்பிணிகள் கவனத்திற்கு...
1. கர்ப்பம் தரிக்கும் பெண் 16-18 வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் குழந்தையின் உருவம் உருவாகும். இந்த நேரத்தில் எந்த ஒரு நோயும் தாயை தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் கொடிய வைரஸ்-ஆல் தாய் தாக்கப்பட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி, இதயம் போன்றவை பாதிக்கக்கூடும்.
2. இந்த காலகட்டத்தில் கஷ்டமான வேலைகளையோ அல்லது நீண்ட தூரம் பயணமோ செய்யக் கூடாது. மேலும் அடிக்கடி உடலுறவு வைக்கக் கூடாது.
3. மேலும் இந்த நேரத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் குழந்தைக்கு எதாவது பிரச்சனை இருந்தால் அறிந்து குழந்தைக்கு எதுவும் ஏற்படாமல் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.
4. இந்த நேரத்தில் ரத்த சோகைக்கான பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் தாய்க்கு இரத்த குறைபாடு இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எல்லா சோதனைகளையும் செய்வது நல்லது.
5. கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான டெஸ்ட் என்றால் அது ரத்தப் பிரிவு டெஸ்ட். ஏனெனில் தாய் மற்றும் சேய்க்கு ஆர்எச் பொருத்தமின்மை இருந்தால் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
6. மேலும் கர்ப்பிணிகள் அதிக உப்பு, அதிக சர்க்கரை, கொழுப்பு இருக்கும் உணவுகளை சாப்பிடவே கூடாது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியம். அத்துடன் இரும்பு, கால்ஷியம் இருக்கும் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
7. அடிக்கடி இரத்தக் கொதிப்பு அளவை சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இரத்தக் கொதிப்பு அதிகரித்தால் தாய்க்கு வலிப்பு வரக்கூடும்.
8. கடைசி மூன்று மாதத்திற்கு கண்டிப்பாக உடல் உறவு கொள்ளக்கூடாது. இதனால் குழந்தையானது குறை மாதத்திலே பிறக்கக்கூடும்.
மேற்கூறியவாறெல்லாம் நினைவில் கொண்டு இருந்தால் குழந்தையானது ஆரோக்கியமாக பிறப்பதுடன், தாயும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications