For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும் போது உணவை கவனமா சாப்பிடுங்க...

By Maha
|

Prenatal Nutrition
கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சாப்பிடும் உணவுகள் அனைத்தும், தாய்க்கு மட்டும் போவதில்லை, கருவில் இருக்கும் குழந்தைக்கும் தான் போகிறது. ஆகவே அப்போது தாய் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்ற உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் கால்சியம் அதிகமாக இருக்கும் உணவுகள், புரோட்டீன் உணவுகளை அதிகமாகவும், காஃபைன் மற்றம் ஜங்க் உணவுகளை சாப்பிடாமலும் இருக்க வேண்டும். எனவே வயிற்றில் இருக்கும் குழந்தை பிறந்து நன்கு ஆரோக்கியமாக வளர என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பனவற்றை மருத்துவர்கள் கூறுவதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

உணவுகளை சாப்பிடும் போது தயிர், வேர் கடலை, சிக்கன், முட்டை மற்றும பால் பொருட்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துக்களான புரோட்டீன், கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்றவை இருக்கின்றன. இவற்றை கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தை பிறந்த பின் அதன் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கும்.

மேலும் மற்ற ஊட்டச்சத்து உணவுகளையும் அதிகம் சாப்பிடலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் உள்ள வைட்டமின் பி, நரம்பு குழாய் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்துவிடும். அதுமட்டுமல்லாமல் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும ஃபோலேட், உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்துக்களை உறிஞ்சிவிடுகின்றன. மேலும் தானியங்களை அதிகம் சாப்பிட் வேண்டும். அதனால் நார்ச்சத்து, வைட்டமின் பி, மக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.

கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சற்று குறைக்க வேண்டும். இந்த நேரத்தில் அதிக இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவற்றை அதிகமாக சாப்பிடாமல் பார்ததுக் கொள்ள வேண்டும்.

அதிகமாக உண்ண வேண்டாம். அதாவது பசிக்கும் பது மட்டும் சாப்பிட வேண்டும். பசியில்லையென்றால் சாப்பிடக் கூடாது என்று கைனோகாலஜிஸ்ட் சொல்கிறார்கள். அதிகமான அளவு எடை கர்ப்பமாக இருக்கும் போது ஏற்பட்டால், அதனால் ஹைப்பர் டென்சன் மற்றும் நீரிழிவு ஏற்பத்த நேரிடும். கர்ப்பமாக இருக்கும் போது உடலில் ஒரு நாளைக்கு 300 கலோரிகள் மட்டும் உடலுக்கு சேர்த்தால் போதும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளுக்கு தினமும் உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சேர்ந்தால் பாதுப்பானது. இந்த உலகில், உடலுக்கு வேண்டிய அனைத்து ஊட்டச்சத்துக்களும், உணவிலேயே இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக குழந்தையைப் பெற ஒரு சில டயட்டை மட்டும் தினமும் பின்பற்றினால் போதும். அந்த டயட் என்னவென்று பார்ப்போமா!!!

* தானிய வகைகளான பிரட், அரிசி மற்றும் பாஸ்தா போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

* புரோட்டீன் நிறைந்த உணவுகளான இறைச்சி, சிக்கன், மீன், பீன்ஸ், முட்டை மற்றும் நட்ஸ் ஆகியவற்றை சிறிது சேர்க்க வேண்டும்.

* காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சாப்பிட பிடிக்கவில்லை என்றால் கூட தவறாமல் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.

* பால் பொருட்களான பால், தயிர் மற்றும் சீஸ் வகைகளை உண்ண வேண்டும்.

இவற்றையெல்லாம் தினமும் உணவில் சேர்த்தால், அதிலும் இந்த டயட்டை பின்பற்றினால், தாய் மற்றும் சேய் இருவருமே நன்கு ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

English summary

The Do's and Don'ts Of Prenatal Nutrition | கர்ப்பமாக இருக்கும் போது உணவை கவனமா சாப்பிடுங்க...

If you're like many pregnant women, you promised to eat healthier the minute you found out you were expecting. You may even have started making a mental list of nutritional do's and don'ts: Eat more calcium-rich foods, get more protein and cut out the caffeine and junk food.
Story first published: Wednesday, September 5, 2012, 15:43 [IST]
Desktop Bottom Promotion