Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் : ஆய்வில் தகவல்

தாது உப்புக்களும், உயிர்சத்தும்
இளநீரில் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.
இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
இயற்கை குளுக்கோஸ்
இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
இயற்கை சுத்திகரிப்பு
இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
