For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  டெலிவரி சாதாரணம் கிடையாது!செரினா வில்லியம்ஸின் திக் திக் நிமிடங்கள் (வீடியோ)

  |

  குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுஜென்மம் என்றே சொல்லலாம். ஒன்பது மாதங்களும் முறையாக மருத்துவ கண்காணிப்புடன் இருந்தாலும் கடைசி நேரத்தில், குழந்தை வெளிவருகிற அந்த நொடியில் கூட ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.

  பிறக்கும் போது ஏற்படுகிற சில சிக்கல்கள் வாழ்நாள் முழுவதும் பாதிக்கக்கூட வாய்ப்புண்டு, அதனாலேயே கருத்தரிப்பு, குழந்தை பிறப்பு என்று சொன்னாலே எத்தனை மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் சற்று பயத்துடனே பார்க்கப்படுகிறது.

   Serena Williams Shared About Her Pregnancy Experience

  Image Courtesy

  செரினா வில்லியம்ஸ் பிரபல டென்னிஸ் வீராங்கனையாக நம் எல்லாருக்கும் தெரியும், ஆனால் ஒரு குழந்தையின் தாயாக,குழந்தை பிறப்பு பற்றிய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார. டெலிவரிக்கு பிறகு கிட்டத்தட்ட நான் இறந்தே விட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  செரினா :

  செரினா :

  கடந்த செப்டம்பர் முதல் தேதியன்று செரினா வில்லியம்ஸுக்கு ஃப்ளோரிடாவில் சிசேரியன் மூலமாக பெண் குழந்தை பிறந்தது. ரெட்டிட்டின் நிறுவனர்களில் ஒருவரான அலெக்சிஸ் ஒஹானியனும் செரினாவும் 2016 நவம்பரில் ஓர்லேண்டிஸில் திருமணம் செய்து கொண்டார்கள்.

  தான் கர்ப்பமாக இருப்பதாக ஸ்நாப்ஷாட்டில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் விளையாடிய போது செரினா எட்டு வாரம் கர்ப்பமாக இருந்தார்.

  டெலிவரி :

  டெலிவரி :

  டெலிவரி அவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஃப்ளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் அங்கே சிசேரியன் மூலமாக மகளை பெற்றெடுத்தேன்.

  மயக்கம் தெளிந்து பார்க்கையில் என் கைகளுக்கு அருகில் படுக்க வைத்திருந்தார்கள். இதுவரை நான் அனுபவித்திராத புதுமையான அனுபவம் அது. ஆனால் அந்த அனுபவத்தை என்னால் தொடர முடியவில்லை.

  Image Courtesy

  24 மணி நேரம் :

  24 மணி நேரம் :

  சிசேரியன் முடிந்து ஒரு நாள் கூட கடந்திருக்காது எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது, உடனடியாக அருகிலிருந்த நர்ஸை அழைத்து சைகை காண்பித்தேன். மருத்துவர்களும், நர்ஸ்களும் ஓடி வந்தார்கள்.

  அதற்குள் எனக்கு கடுமையான இருமல் வேறு வந்துவிட்டிருந்தது. நான் இருமிய இருமலில் வயிற்றில் போடப்பட்டிருந்த சிசேரியன் தையல் தெரித்து ரத்தம் வழிகிறது.

  Image Courtesy

  மீண்டும் ஆப்ரேசன் :

  மீண்டும் ஆப்ரேசன் :

  அவ்வளவு தான் நான் இறந்தே விட்டேன் என்று நினைத்து ஒரு கணம் நான் பையந்து விட்டேன். மகளை ஆசையாய் கொஞ்ச வேண்டிய நேரத்தில், மூச்சுத்திணறல் இருமல் என்று என் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தேன்.

  மருத்துவர்கள் தாமதிக்கவில்லை உடனடியாக என்னை ஆப்ரேசன் தியேட்டருக்கு கொண்டு சென்றார்கள்.

  Image Courtesy

  காரணம் :

  காரணம் :

  அப்போது தான் எனக்கு வயிற்றினுள் ரத்தக்கட்டி இருப்பது தெரியவந்தது. அவை நுரையிரலை நோக்கிச் சென்றிருக்கிறது, அதனால் தான் எனக்கு மூச்சுத்திணறலும், இருமலும் ஏற்பட்டிருக்கிறது.

  அறுவை சிகிச்சை மூலமாக ரத்தக்கட்டி அகற்றப்பட்டு,மீண்டும் தையல் போடப்பட்டது.

  Image Courtesy

  தாய்மை :

  தாய்மை :

  இதனால் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் வரையில் படுக்கையை விட்டு எழுந்தரிக்க முடியா வண்ணம் சிரமப்பட்டேன், ஆனால் என் கையில் மகள் இருந்தாள். அவளுடனான ஒவ்வொரு கணத்தையும் மிகவும் ரசித்தேன் .

  ஏழு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற வீராங்கனை செரினா மரணத்தை முத்தமிட்டு வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

  Image Courtesy

  மீண்டும் வருவாய் :

  மீண்டும் வருவாய் :

  ஆறு வாரம் படுக்கை வாழ்க்கையை முடித்து எழுந்து நடப்பதற்கே மிகவும் சிரமமானதான இருந்திருக்கிறது செரினாவிற்கு, குழந்தை செப்டம்பரில் பிறந்துவிடுகிறது அப்படியானால் ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிசில் பங்கேற்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், இந்த பிரச்சனைகள் எல்லாம் இருந்ததால் அவரால் விளையாட்டில் பங்கேற்க முடியவில்லை.

  Image Courtesy

  போஸ்ட் ப்ரெக்னென்ஸி :

  போஸ்ட் ப்ரெக்னென்ஸி :

  கர்ப்பமாக இருந்ததைக் காட்டிலும் குழந்தை பிறப்பிற்கு பிறகே கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அதீத சோர்வுடன், ஏன் இந்த வாழ்க்கை மீதே வெறுப்பாய் தோன்றும், என்னால் முடியாது என்று சொல்லிக் கொண்டிருப்பேன்.

  சரியாக அந்த நேரம் பார்த்து குழந்தையின் அழுகுரல் கேட்டால் அவ்வளவு தான். காரணமேயில்லாமல் கோபம் ஏற்படும்,எரிச்சல் உண்டாகும்.

  Image Courtesy

  ஏன் கவலை ? :

  ஏன் கவலை ? :

  இதே போன்ற நெகட்டிவ் ஆட்டிடியூட் கோர்ட்டில் விளையாடிய போதும் தோன்றியிருக்கிறது, ஆனால் அதனைக் காட்டிலும் இந்த உணர்வு விசித்திரமானதாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் எனக்கு இது தோன்றியது.

  இவ்வளவு அழகான குழந்தையை பெற்றெடுத்துவிட்டு ஏன் சோகமாக இருக்கவேண்டும், குழந்தையுடனான ஒவ்வொரு நாளையும் கொண்டாடலாமே என்று தோன்றியது.

  Image Courtesy

  அம்மாவின் அட்வைஸ் :

  அம்மாவின் அட்வைஸ் :

  மகள் அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் வளர்க்க அம்மா ஒரசேன் ப்ரைஸ் ஃப்ளோரிடாவிலேயே தங்கிவிட்டிருந்தார். குழந்தை வளர்க்கும் முறை,பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். அம்மா என்னுடனே இருந்தது எனக்கு சற்று ரிலாக்ஸாக இருந்தது.

  அப்போது அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் அட்வைஸ் கீழ்படிதல் தான் பாதுகாப்பை கொடுக்கும் என்பார்.

  Image Courtesy

  நலம் பெற வேண்டும் :

  நலம் பெற வேண்டும் :

  தற்போது செரினா பூரண நலத்துடன் மீண்டிருந்தாலும் கூடுதலாக களத்தில் நின்று விளையாடும் அளவிற்கு தன்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். இன்னமும் கடினமாக உழைக்க வேண்டும். இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும், இதுவரையில் இல்லாத புது மாற்றமாக தற்போது இன்னொரு உயிருக்கும் செரினா பொறுப்பானவராக இருக்கிறார்.

  போட்டி நடக்கும் இடங்களுக்கு இனி மகளுடன் பயணிப்பாரா? அப்படி பயணித்தால் யார் பேக் செய்வது என்னுடைய மிகப்பெரிய கவலை அது தான் என்கிறார் செரினாவின் தாய்.

  Image Courtesy

  நினைவு :

  நினைவு :

  எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து டென்னிஸ் கோர்ட் விளையாடுகிறேன், ஒரு வீட்டில் ஆண் குழந்தையிருந்தால் அவனுக்கு அனைத்து விதமான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும், அதே போல என் பெண்ணுக்கும் வழங்கப்போகிறேன். அவளுக்கு எல்லைகள் இல்லை என்பதை கற்றுக் கொடுக்கப்போகிறேன்.

  நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது எல்லைக் கோடு தெரிய ஆரம்பித்துவிட்டால், உங்கள் இலக்கு நெருங்கிவிட்டது என்று நடையின் வேகத்தை குறைக்கக்கூடாது இன்னும் வேகமாக.... உங்களது ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டும்.

  மகளுக்கு கற்றுக்கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் செரினா வில்லியம்ஸ் .

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Serena Williams Shared About Her Pregnancy Experience

  Serena Williams Shared About Her Pregnancy Experience
  Story first published: Wednesday, February 21, 2018, 14:19 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more