For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா? கூடாதா?

பப்பாளி பழத்தில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளன; தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா? கூடாதா? என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.!

|

தாய்ப்பால் அளிப்பது என்பது அன்னையர்களின் மிக முக்கியமான கடமை! எப்படி கர்ப்ப காலத்தில் தங்கள் குழந்தைக்காக, தனக்கு பிடிக்காத உணவுகளை உண்டு, பிடிக்காத உணவுகளை ஒதுக்கி வாழ்ந்து வந்தீர்களோ, அது போல் மேலும் சில காலம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து முடிக்கும் வரை, குழந்தைகள் சற்று பெரியவர்களாக வளரும் வரை தாய்மார்கள் உணவில் கட்டாயம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம்!

papaya for breastfeeding mothers is safe or not

இந்த பதிப்பில் பால் கொடுக்கும் அன்னையர்கள், பப்பாளி சாப்பிடலாமா கூடாதா? சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பன பற்றி படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி பாதுகாப்பானதா?

பப்பாளி பாதுகாப்பானதா?

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது பப்பாளி சாப்பிட கூடாது; சாப்பிட்டால் பெண்ணின் வயிற்றில் வளரும் கரு கலைந்து விடும் என்று கூறப்படுவதுவது உண்டு; இந்த கூற்று பெண்களின் வயிற்றில் கரு நிலைக்கும் காலமான முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதன் பின்னர் கருவை சுமக்கும் பெண்கள் பப்பாளி உண்ணலாம் என்று கூறப்படுகிறது; அது அவர்களுக்கு நன்மை மட்டுமே பயக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த கண்டுபிடிப்பு போலவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பப்பாளி உண்ணலாம் என்றும் அது அவர்களுக்கு பெரும்பாலும் நன்மையை தான் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

பப்பாளி பழமா? காயா?

பப்பாளி பழமா? காயா?

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பப்பாளி பழத்தை சாப்பிட கூடாது என்று கூறப்படுகிறது; அது தாய்ப்பால் சுரப்பை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் பப்பாளியை காயாக இருக்கும் பருவத்தில் உட்கொள்ளலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! மேலும் இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது, தாயின் நலத்தை காப்பது என பல நன்மைகளை புரியுமாம்!

காயை எப்படி சாப்பிடுவது?

காயை எப்படி சாப்பிடுவது?

காயான பப்பாளியை எப்படி சாப்பிடுவது என்ற கேள்வி பலரின் மனதில் நிலவும்;ல் காய் பப்பாளியை குழம்பாக செய்தோ, பால், தேன் மற்றும் பப்பாளி காய் சேர்த்து ஸ்மூத்தி பானமாக செய்தோ, சாலட் போன்றோ, பாராட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளில் ஸ்டஃப் செய்தோ அல்லது இந்த உணவுகளுக்கு தொட்டுக்கொள்ளும் கறியாக செய்தோ உண்ணலாம். பப்பாளி காயை கண்டிப்பாக சமைத்து தான் உண்ண வேண்டும்; சமைக்காமல் உண்பது தேவையற்ற விளைவுகளை விளைவிக்கலாம்.

எப்படிப்பட்ட காய்?

எப்படிப்பட்ட காய்?

உண்பதற்கு, முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கொடுக்க தேர்ந்து எடுக்கப்படும் பப்பாளி காய் எந்த வித வேதிப்பொருட்களும் சேர்க்கப்படாததாக, நல்ல மரத்தில் இருந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம். பப்பாளியை உணவில் சேர்க்கும் முன் ஒரு முறை மருத்துவ கலந்தாய்வு மேற்கொண்டு, பின் எடுத்துக் கொள்வது நல்லது.

அலர்ஜி ஏற்படுமா?

அலர்ஜி ஏற்படுமா?

ஏனெனில் உங்கள் உடலின் நிலைக்கு பப்பாளி காயை உட்கொள்வது நல்லதா இல்லையா என்பதை சோதித்து அறிய வேண்டியது அவசியம்! சோதிக்காமல், எந்த வித கலந்தாய்வும் செய்யாது அப்படியே பப்பாளியை உட்கொள்ள ஆரம்பித்து விட்டால், அது தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் உடலிலோ அல்லது குழந்தையின் உடலிலோ அலர்ஜி - ஒவ்வாமை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு.

எனவே, தரமான பப்பாளி காயை தேர்ந்து எடுத்துக் கொண்டு, அதை சரியான மருத்துவ ஆலோசனைக்கு பின் உட்கொள்ள

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா?

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா?

பப்பாளியில் எக்கச்சக்க விட்டமின்களும், தாதுக்களும் நிறைந்து உள்ளன; தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள், இந்த பப்பாளி காயை அவ்வப்போது அல்லது அவர்கள் வசதிக்கேற்றவாறு தங்களது உணவில் சேர்த்து வந்தால், கண்டிப்பாக தாய்ப்பால் சுரப்பு ஏற்படும். தாய்ப்பால் சுரப்பினை அதிகரிப்பது மட்டும் இன்றி, பற்பல நன்மைகளை பப்பாளி காய் தாய்மார்களுக்கு அளிக்கிறது. என்னென்ன நன்மைகள் என்று அடுத்த பத்தியில் பார்க்கலாம்.

என்னென்ன நன்மைகள்?

என்னென்ன நன்மைகள்?

தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் பப்பாளி காயை தங்கள் உணவில் சேர்த்து வந்தால், அவர்களுக்கு எந்த விதமான இதய நோய்களும் ஏற்படாது; மேலும் உடலில் கர்ப்பம், பிரசவம், தாய்ப்பால் அளிப்பது காரணமாக அதிகரித்த எடை குறைய உதவும்; பால் சுரப்பினை அதிகரிக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களில் அதிகரிப்பதன் மூலம், குழந்தையிலும் இந்த சக்தி அதிகமாக பப்பாளி காய் உதவுகிறது; மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Papaya For Breastfeeding Mothers: All You Need To Know

Papaya For Breastfeeding Mothers: All You Need To Know
Story first published: Tuesday, September 11, 2018, 10:15 [IST]
Desktop Bottom Promotion