Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்..
பிஞ்சு குழந்தையை கொல்லும் அளவுக்கு தாய்க்கு மன அழுத்தம் வருமா? - எப்படி சரி செய்வது
குழந்தை பிறந்த பின்பு தாய்க்கு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்.
பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தை பால் கேட்டு கதறி அழுதபோது கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறாள் ஒரு இளம் தாய். அது வட இந்தியாவில் என்றால் சென்னையில் பால் குடித்த குழந்தையால் மார்பில் வலி ஏற்பட்டதால் கொன்று வீசியுள்ளார் ஒரு தாய் இப்படி கூட நடக்குமா? ஏன் எப்படி யோசித்தால் இது பிரசவத்திற்குப் பின் வரும் மன அழுத்தம் என்கின்றனர் மருத்துவர்கள்.

1.கர்ப்ப கால மன அழுத்தம்
கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகளுக்கு ஒருவித மன அழுத்தம் ஏற்படுவது இயற்கைதான். அதே போல குழந்தை பெற்ற பின்பும் அந்த மன அழுத்தம் அவர்களை விட்டு அகல்வதில்லை. காரணம் முன்பெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. மாமியார், பாட்டி என கூட இருக்கும் பெரியவர்கள் பிரசவித்த பெண்ணை சத்தான உணவு கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை கூட்டுக்குடும்பங்கள் குறைந்து விட்டன. கணவன், மனைவி மட்டுமே குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

2.பிரசவத்துக்குப் பின் மனஅழுத்தம்
பிரசவத்திற்குப் பின்னர் தூங்காமல் இரவும் பகலும் விழித்திருப்பது, குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது ஏற்படும் பதற்றம், விரக்தி எல்லாம் இணைந்து ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது பொதுவாக குழந்தை பெற்ற முதல் சில மாதங்கள் வரை இருக்கத்தான் செய்யும். இத்தகைய அழுத்தத்திலிருந்து தப்பிக்க நாம் சில சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக வேண்டும். பிரசவத்திற்குப் பின்னர் பிஞ்சு குழந்தையை கையில் வைத்துள்ள தாய்மார்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதை பின்பற்றினாலே போதும் இளம் தாய்மார்கள் எளிதில் குழந்தையை வளர்த்து ஆளாக்கிவிடலாம்.

3.ஒமேகா 3 உணவுகள்
பிரசவித்த பெண்களுக்கு அவ்வப்போது கோபம் வரும், எதையோ இழந்தது போல ஒருவித வெறுப்புணர்வும் கூட எட்டிப்பார்கள். பிரசவத்திற்குப் பின்னர் பிரசவ லேகியம் சாப்பிட கொடுப்பார்கள். பத்திய உணவுகளையும் கொடுப்பார்கள். வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று மனசு ஏங்கும். ஒமேகா 3 எண்ணெய் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். இது மன அழுத்தத்தை போக்கும். ரிலாக்ஸ் ஆக வைத்திருக்கும். பாதாம்பருப்பு, வால்நட், சணல்விதை எண்ணெய், மீன் உணவுகளில் ஒமேகா 3 சத்துக்கள் அடங்கியுள்ளன.

4.சத்தான உணவுகள்
நம் ஊர் பக்கம் அதிகம் பால் சுரக்க வேண்டும் என்று கூறி தாய்மார்களுக்கு மீன் உணவுகளை அதிகம் சாப்பிட தருவார்கள். இது மன சோர்வை நீக்குவதோடு சுறுசுறுப்பை அதிகமாகும். கீரை வகைகளில் குறிப்பாக பசலைக்கீரை, பூசணி விதை, கடுகு கீரை, சோயாபீன்ஸ் போன்ற உணவுகளில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. மட்டன், மீன், நாட்டுக்கோழி சமைத்து நல்லெண்ணெய் ஊற்றி பிரசவித்த பெண்களுக்கு கொடுப்பது கூட சத்துக்களை சரிவிகித அளவில் ஈடுகட்டுவதற்காகத்தான்.

5.ஆரோக்கியமான பேச்சு
பிரசவித்த தாயையும், குழந்தையையும் பார்க்க ஏராளமான உறவினர்கள் வருவார்கள். இதுகூட ஒருவித சிகிச்சைதான். பிரசவித்த பெண்ணிற்கு சில ஆலோசனைகளை கூறி செல்வார்கள். அதே போல குழந்தை வளர்ப்பு பற்றியும், பாலூட்டுவது, கை வைத்தியங்களையும் கூறி குழந்தை வளர்ப்பில் தாய்க்கு உள்ள அச்சத்தை போக்கி செல்வார்கள்.

6.ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்
கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருக்கும். பிரசவத்திற்கு பின் இந்த ஹார்மோனின் அளவு சட்டென்று குறைந்துவிடும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில், ஈஸ்ட்ரோஜென் அளவு இன்னும் குறையும். ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன், அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும் போது, வறட்சி ஏற்படுவதால் பெண்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஆப்பிள், செர்ரி, சோயா, செலரி, நட்ஸ் வகைகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை சீராக்கும். ஆகவே பிரசவத்திற்கு பின் பெண்கள் இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7.காலாற நடங்கள்
பிரசவத்திற்கு முன் எவ்வளவுக்கு எவ்வளவு ஃப்ரியாக உணர்ந்தீர்களோ, பிரசவத்திற்குப் பின்னர் அந்த சுதந்திரம் இல்லாதது போல தோன்றும். எனவே குட்டி பேபியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியில் வாக்கிங் போகலாம். கணவருடன் உற்சாகமாக பேசலாம். சொந்தக்காரர்கள், உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பதன் மூலம் தனிமையை போக்கிக்கொள்ளலாம்.

8.மனதை லேசாக்கும் யோகா
பிரசவத்திற்குப் பின்னர் சிலரது உடல் எடை அதிகரித்து விடும். வயிற்றில் தழும்புகள், முடி உதிர்வு என சில உடல் ரீதியான பிரச்சினைகள் வாட்டி வதைக்கும். பிரசவித்து ஒரு மாதம் தியானம் அல்லது யோகாசனம ஆகிய பயிற்சிகளை செய்யலாம். இது குழந்தை பிறந்த பின் ஏற்படும் மன உளைச்சலை குறைக்க மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைத்து சரும பொலிவையும் கொடுக்கும். இதுவே அழுத்தத்தை குறைப்பதற்கு சிறந்த வழியாக அமைகின்றது.

9. போட்டோ எடுத்து ரசியுங்கள்
இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களின் வீச்சு அதிகமாகி விட்டது. குட்டிக்குழந்தையின் புகைப்படத்தை எடுத்து உங்களின் பக்கத்தில் அப்லோடு செய்யுங்கள். இதன் மூலம் குழந்தையை உங்களின் நண்பர்கள் உறவினர்களுக்கு அறிமுகம் செய்யலாம். லைக்குகள், பகிர்வுகள், கமெண்ட்கள், ஆசிகள் என அள்ளும் போது உங்களை அறியாமலேயே மனம் உற்சாகமடையும். ரோஜா மலர் போல சிரித்து மகிழ்விக்கும் குட்டி குழந்தைகளைக் கண்டு அதன் அன்பில் கரைந்து போனால் மன அழுத்தம் எல்லாம் மாயமாகிவிடும்.

10. அழகை ரசியுங்கள்
பிரசவம் முடிந்த பின்னர் தாய்மை நிலையை அடைந்த பெண்களுக்கு ஒருவித அழகு கூடும். பிறந்த குழந்தையை வைத்துக்கொண்டு சில நல்ல உடை கூட அணிய விரும்ப மாட்டார்கள். சிலர் தலை கூட சீவ மாட்டார்கள். அப்படி இருக்காதீர்கள். நன்றாக சீவி லைட்டாக பவுடர் போட்டு அலங்கரிக்கலாம். குழந்தைகளுக்கும் சீவி சிங்காரிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வரும். அப்புறம் என்ன மன அழுத்தம் எல்லாம் மாயமாச்சே என்று நீங்களே பாடி மகிழ்வீர்கள்.



Click it and Unblock the Notifications