முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் எவ்வளவு நாள் இடைவெளி விட வேண்டும்?...

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky

நீங்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா? அப்போ கொஞ்சம் இத கேளுங்க. உங்களுக்கு முதல் பிரசவம் சிசேரியனோ அல்லது நார்மலோ எதுவாக இருந்தாலும் இரண்டாவது குழந்தைக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

How Long Should I Wait For A Second Baby After A C-section

உங்களுக்கு நார்மல் டெலிவரியாக இருந்தால் கூட அடுத்த கர்ப்பத்திற்கு குறிப்பிட்ட கால இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர். ஏனெனில் இந்த இடைவெளி காலத்தில் தான் உங்கள் உடல் டெலிவரி சமயத்தில் ஏற்பட்ட காயங்கள் தழும்புகளை ஆற்றுதல் , கர்ப்பபை பழைய நிலைக்கு செல்லுதல், உடல் வலிமை, உடல் ஆரோக்கியம் எல்லாத்தையும் குணமாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்

1. எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்

உங்களுக்கு முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால் கண்டிப்பாக குறைந்தது 6 மாதம் வரையாவது இரண்டாவது குழந்தை வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வருடக்கணக்கில் இடைவெளி விட்டால் இன்னும் நல்லது என்கின்றனர். உங்களுக்கு நார்மல் டெலிவரியாக இருந்தால் கூட அடுத்த கர்ப்பத்திற்கு குறிப்பிட்ட கால இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர். ஏனெனில் இந்த இடைவெளி காலத்தில் தான் உங்கள் உடல் டெலிவரி சமயத்தில் ஏற்பட்ட காயங்கள் தழும்புகளை ஆற்றுதல் , கர்ப்பபை பழைய நிலைக்கு செல்லுதல், உடல் வலிமை, உடல் ஆரோக்கியம் எல்லாத்தையும் குணமாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும். எனவே இந்த இடைவெளி என்பது உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமும் கூட .

2. குணமடைதல் :

2. குணமடைதல் :

நீங்கள் 12-18 மாதங்கள் என்ற நீண்ட இடைவெளியை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் முதல் பிரசவ காயங்கள் ஆறுதல் மேலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை இழந்து ரெம்ப பலவீனமாக இருக்கும். எனவே உங்கள் உடல் பழைய ஊட்டச்சத்துகளை சேகரித்து அடுத்த ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு தயாராக வேண்டும். மேலும் சிசேரியன் முறையில் பெண்களுக்கு ஏராளமான இரத்த போக்கு ஏற்பட்டு இருக்கும். அனிமியா போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க அடுத்த பிரசவத்திற்கு பெண்களுக்கு போதிய கால அவகாசம் தேவை.

3. குழந்தை பிறப்பு :

3. குழந்தை பிறப்பு :

உங்கள் முதல் பிரசவத்திற்கு பிறகு உடனே இரண்டாவது குழந்தை கருவுற்றால் உங்களுக்கு உடல் நலக் குறைகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கின்ற குழந்தைகளும் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. குறை பிரசவம், எடை குறைந்த குழந்தை, ஆரோக்கியமற்ற பிறப்பு இது போன்ற பிரச்சினைகள் வரலாம்.

4. திட்டமிடுதல்

4. திட்டமிடுதல்

நீங்கள் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இரண்டாவது கர்ப்ப காலமும் சந்தோஷமான தருணமாக அமையும். உங்கள் உடலும் அதற்கு ஒத்துழைத்து கர்ப்ப காலத்தை எளிதாக்கும். எனவே 18 மாத இடைவெளி என்பது உங்கள் உடல் ரிலாக்ஸ் ஆக குணமடைய நிறைய வாய்ப்புள்ளது.

5. ஆரோக்கியம் :

5. ஆரோக்கியம் :

கர்ப்ப கால பத்து மாதங்களும் பிறகு தாய்ப்பால் ஊட்டும் காலங்களிலும் உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதும் செலவாகி இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மறுபடியும் கருவுற்றால் அது உங்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் நல்லது அல்ல. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

6. ப்ளாசென்டா ப்ரிவியா (நஞ்சுக் கொடி சுற்றல்)6. ப்ளாசென்டா ப்ரிவியா (நஞ்சுக் கொடி சுற்றல்)

6. ப்ளாசென்டா ப்ரிவியா (நஞ்சுக் கொடி சுற்றல்)6. ப்ளாசென்டா ப்ரிவியா (நஞ்சுக் கொடி சுற்றல்)

நீங்கள் சிசேரியனுக்கு பிறகு ஒரு வருடத்திற்குள் அடுத்த குழந்தை பெற்றால் கீழ்காணும் அபாயத்தை சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் சிசேரியனுக்கு பிறகு மறுபடியும் சீக்கிரம் கருவுறும் போது நஞ்சுக் கொடி உங்கள் கருப்பையின் வாய் பகுதியை முழுவதுமாக அடைத்து விட வாய்ப்புள்ளது.

நஞ்சுக் கொடி குறிக்கீடு : கருவில் இருக்கும் குழந்தையை இந்த நஞ்சுக் கொடி சுற்றி பிரசவத்தை கடின மாக்கி விட வாய்ப்புள்ளது.

7. கருப்பை முறிவு :

7. கருப்பை முறிவு :

இரண்டு பிரசவத்திற்கான இடைவெளி குறைவாக இருக்கும் போது முதல் சிசேரியனுக்கு பிறகு நார்மல் டெலிவரியை யாரும் மேற்கொள்வது இல்லை. ஏனெனில் கருப்பை முறுவு ஏற்பட வாய்ப்புள்ளது.

8. குறை பிரசவம் :

8. குறை பிரசவம் :

இந்த மாதிரியான கால இடைவெளி குறைவான பிரசவத்தில் 36-37 வாரங்களுக்கு முன்னதாகவே குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 2.5 கிலோ கிராம்க்கும் குறைவாக பிறக்கின்றன.

9. ஆலோசனை

9. ஆலோசனை

ஒரு வேளை நீங்கள் முதல் பிரசவத்திற்கு பிறகு சீக்கிரமாக கருவுற்று இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று செயல்படுங்கள். ஆரோக்கியமாக உங்கள் உடலை மேம்படுத்துவது, ஆரோக்கியமான பிரசவத்திற்கு அது வழிவகை செய்யும். மேலும் உங்களுக்கு 35 வயதுக்கு மேல் இருந்தால் இரண்டாவது குழந்தையை தள்ளிப் போட வேண்டாம். உங்கள் மருத்துவரை ஆலோசித்து உரிய வயதில் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Long Should I Wait For A Second Baby After A C-section?

Normally, the medically recommended time frame that you should wait for before conceiving after C Section is at least 6 months. An year’s gap is even better. Most of the time doctors advise the same amount of time frame for women who give birth vaginally. Otherwise it cause Placental abrupt in, Increased risk of uterine rupture, Premature birth, Low birth weight and so on.
Story first published: Friday, March 23, 2018, 17:45 [IST]