Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
தாய்ப்பால் சுரப்பு குன்றிய தாய்மார்களுக்கு உதவும் மாற்று ஆரோக்கிய-இயற்கை முறைகள்..!
சில சமயம் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரோக்கிய உணவு முறைகளை உட்கொண்டாலும் பெண்களில் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு குழந்தைக்கு போதுமான அளவு இருப்பதில்லை. அப்படிப்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளு
தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான உணவு; குழந்தைகள் பிறந்ததும் கொடுக்கப்படும் முக்கிய உணவு. அதுவும் இந்த தாய்ப்பால் அன்னையின் மார்பகத்தில் அதிசய மாற்றமாக உருவாகி வெளிப்படுகிறது; அதவது பெண்ணின் இரத்தச் சிவப்பு வெண்ணிற தாய்ப்பாலாக மாறி, குழந்தையை சென்றடைகிறது. தாய்ப்பால் சுரப்பு என்பது தாய்மாரின் உடல் நிலையை, உணவு முறையை பொறுத்து அமையும்; மேலும் தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்க வேண்டியது அவசியம்.

சில சமயம் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரோக்கிய உணவு முறைகளை உட்கொண்டாலும் பெண்களில் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு குழந்தைக்கு போதுமான அளவு இருப்பதில்லை. அப்படிப்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் தர முடியாமல் தவிப்பர்; அவர்தம் தவிப்பைப் போக்க உதவும் ஆரோக்கியமான, இயற்கையான சில வழிமுறைகளை பற்றி இந்த பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயனடையவும்.

கொடையாளி
தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு ஏற்படாமல் இருந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடிய உணவுகளை உண்டபின் கூட தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்காமல் இருந்தால், அவர்கள் கட்டாயமாக தாய்ப்பால் கொடையாளிகளை அணுக வேண்டும். தாய்ப்பால் கொடையாளிகள் என்பவர்கள் சமீபத்தில் குழந்தையை பெற்று எடுத்த அன்னைகளே! எந்த அன்னையர்கள் அதிகமான மற்றும் ஆரோக்கியமான தாய்ப்பால் சுரப்பு கொண்டுள்ளார்களோ அவர்கள் தாய்ப்பால் சுரப்பு குன்றிய அன்னையரின் குழந்தைக்கும் பால் கொடுக்கலாம் அல்லது அதிகப்படியான தாய்ப்பாலை பம்ப் செய்து மருத்துவமனையில் அன்னைகளின்றி அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகளுக்கு அளித்து உதவலாம்.

என்ன தேவை?
கொடையாளி முறைக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகம் உள்ள பெண்கள் தாராள மனமும் - தயாள மனமும் கொண்டிருக்க வேண்டியது அவசியம்; அதே போல் கொடை பெறப்போகும் அன்னையும் எவ்வித சலிப்பும், வேற்று தாயின் பால் போன்ற உணர்வுகளை கொள்ளாமல் குழந்தையின் நலனை முன்னிறுத்தி ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இப்பொழுது இந்த மாதிரியான தாய்ப்பால் கொடையாளிகளை எப்படி கண்டறிவது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
உங்களின் நிலையை எடுத்துக்கூறி, மருத்துவமனையில் அல்லது தெரிந்தவர்கள் மூலமாக தாய்ப்பால் தரும் கொடையாளியை ஏற்பாடு செய்யலாம். பெரும்பாலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களே இதற்கு எளிதில் ஏற்பாடு செய்து கொடுத்து தருவர், நீங்கள் வேண்டிக் கேட்டுக்கொண்டால்!

பார்முலா பால்
தாய்ப்பால் சுரப்பும் சரியாக இல்லை; தாய்ப்பால் கொடையளிகளும் கிடைக்கவில்லை என்ற நிலையில் அடுத்த கட்ட முயற்சியாக தாய்மார்கள் மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டியது பார்முலா பால் தயாரிப்பது தான். பல அன்னைகளுக்கு பார்முலா பால் என்றால் என்ன என்றே தெரிவதில்லை. பார்முலா பால் என்பது தாய்ப்பாலை ஈடு செய்ய தயாரித்து பல நிறுவன தயாரிப்புகளாக கடைகளில் பாட்டிலில் அடைத்து விற்கப்படுகிறது. ஆனால், அவற்றில் என்னென்ன கலந்துள்ளன என்பதை நாம் யாரும் கண்ணாற கண்டதில்லை.
எனவே குழந்தைகளுக்கு வேண்டிய பாலினை நீங்களே வீட்டில், சுகாதாரன முறையில் தயாரித்து வழங்க வேண்டும்; அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் அளவு இல்லை எனினும், அதற்கு கிட்டத்தட்ட இணையான முறையில் பலனளிக்கும்!

வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
பார்முலா பாலினை வீட்டிலேயே தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் என்னென்ன மற்றும் எப்படி தயாரிப்பது என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையானவை:
2 கப் மாட்டுப்பால், ¼ கப் வீட்டில் செய்த வெய் - whey (the watery part of milk that remains after the formation of curds), 7-8 கப் தண்ணீர், 4 தேக்கரண்டி லாக்டோஸ், 2 அலல்து அதற்கு மேற்பட்ட தேக்கரண்டி கிரீம், 2 தேக்கரண்டி grass-fed gelatin, 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி cod liver oil, 1 தேக்கரண்டி எஸ்பில்லர் ப்ரெஸ்ட் சூரியகாந்தி எண்ணெய் - expeller-pressed sunflower oil, 1/4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் - extra virgin olive oil, ¼ உயர் வைட்டமின் வெண்ணெய் எண்ணெய் - high-vitamin butter oil, ¼ தேக்கரண்டி Bifidobacterium infantis a healthy probiotic strain, ¼ தேக்கரண்டி அசெரோலா பொடி
இவற்றை எல்லாம் சேர்த்து தான் பார்முலா பால் தயாரிக்க வேண்டும்; ஆனால், இதை தயாரிக்கவும், தயாரித்து குழந்தைக்கு கொடுக்கும் முன்னரும் மருத்துவருடன் தகுந்த ஆலோசனை மேற்கொள்ளவும்; சரியான ஆலோசனைக்கு பின் காரியத்தில் இறங்கவும்.

விற்கப்படும் பொடி
இந்த பார்முலா பாலினை வீட்டில் தயாரிப்பது கடினமாக, குழப்பமாக இருந்தால், கடைகளில் இயற்கை முறையில் தயார் செய்து விற்கப்படும் பார்முலா பவுடரை வாங்கி உபயோகிக்கலாம்; ஆனால், வாங்கும் முன்னரும் வாங்கிய பொடியை குழந்தைக்கு கொடுக்கும் முன்னும் மருத்துவருடன் சரியான முறையில் கலந்துரையாடி அறிவுரை பெற்று பின் செயலில் இறங்குவது நல்லது. ஏனெனில் பெரும்பாலான பார்முலா பால் பொடிகள் சோயா சேர்த்து தயாரிக்கப்படுகின்றன, இவ்வாறு தயாரிக்கப்பட்ட பால் குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:
வைட்டமின் குறைபாடு, குன்றிய தைராய்டு செயல்பாடு, பிறப்புறுப்பு மற்றும் கருவுறுதலுக்கான பிரச்சனைகளை பிஞ்சிலேயே ஏற்படுத்தி விடும் வாய்ப்புண்டு, மேலும் குழந்தையின் உடல் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உணவிலிருந்து உறிஞ்சி எடுக்கும் தன்மையை இழந்து விடும்.

மற்ற அன்னைகளின் அறிவுரை
அனைத்து நேரங்களிலும் மருத்துவரை நாடி அவரின் அறிவுரையை பெற்றுக் கொள்வது சற்று கடினமாக இருக்கலாம்; அந்த சமயங்களில் அனுபவம் வாய்ந்த அன்னைகளிடம் ஆலோசித்து அவர்கள் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்திய ஆரோக்கிய முறைகளை கேட்டு அறிந்து கொண்டு, உங்கள் மனதிற்கு அது சரியென பட்டால், நீங்கள் மேற்கொள்ளலாம். மேலும் உங்களுக்கு குழந்தை வளர்ப்பு மற்றும் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக இருக்கும் கேள்விகளை குழந்தை பெற்ற தோழியர்களுடன், மற்ற அன்னையர்களுடன் கலந்தாலோசித்து ஒரு தீர்வை பெறலாம்.
மேலும் குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பதாய் இருந்தாலும், யாருடைய அறிவுரையை பின்பற்றுவதாய் இருந்தாலும் ஒருமுறை மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின் செயல்படுவது, செயல்படுத்துவது உங்கள் நலனுக்கும், குழந்தையின் நலனுக்கும் மிகவும் நல்லது..!



Click it and Unblock the Notifications