For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு அரிசி கஞ்சி கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைகள் திட உணவு சாப்பிட தொடங்கிய பின் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவுமூலம் கொடுக்க தங்க வேண்டும். அவ்வாறு தொடங்குவதற்கு அரிசி கஞ்சி மிகச்சிறந்த தேர்வாகும்.

|

அனைத்து அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது அவர்கள் சாப்பிடும் உணவை பொறுத்தது. அம்மாக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை புதிதாக பிறந்த குழந்தைக்கு ஆரோக்கிய உணவாக எதனை கொடுக்கலாம் என்பதுதான்.

Pregnancy

குழந்தை 5 மாதத்திற்கு கீழ் இருக்கும்போது அவர்களுக்கு நீர் உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகுதான் திட உணவுகளை கொடுக்க தொடங்க வேண்டும். குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்க தொடங்கும்போது அரிசி கஞ்சியிலிருந்து தொடங்குவது மிகச்சிறந்த தேர்வாகும். ஏனெனில் அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பு இதில் மிகக்குறைவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

அரிசி கஞ்சி தயாரிக்கும் முறை மிகவும் எளிதானது. இரண்டு கரண்டி அரிசியை நன்கு கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி நன்கு கொதிக்க வைக்கவும். பின் அரிசியை அதில் போட்டு நன்கு வேகவைக்கவும். அரிசி வெந்து முடிந்தவுடன் அதில் உள்ள தண்ணீரை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும். இதனை ஆறவைத்து நன்கு கெட்டியானவுடன் குழந்தைக்கு கொடுக்கவும்.

நன்மைகள்

நன்மைகள்

எளிதில் செரிமானம் அடையக்கூடியது

அரிசி கஞ்சியில் செரிமானத்தை பாதிக்கக்கூடிய எதுவுமில்லை. இதில் உள்ளது வெறும் அரிசியும், தண்ணீரும்தான் எனவே இது எளிதில் செரிமானமடைந்துவிடும். குழந்தைக்கு கொடுக்கும்போது சிறிதளவு உப்பு சேர்த்து கொடுப்பது செரிமானத்தை அதிகரிக்கும்.

மலசிக்கல்

மலசிக்கல்

இது மலச்சிக்கலை குணப்படுத்தும் மருந்தாக பழங்காலம் முதலே பயனப்டுத்தப்பட்டு வருகிறது. மலச்சிக்கல் உள்ள குழந்தைக்கு அரிசிக்கஞ்சியுடன் சிறிது சீரகம் சேர்த்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்தால் போதும் குழந்தையின் மலச்சிக்கல் விரைவில் குணமடைந்துவிடும். அரிசி கஞ்சி சிறிது சூடாக இருப்பதை மட்டும் உறுதிசெய்து கொள்ளவும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படும்போது அவர்கள் உடலில் உள்ள நீரின் அளவு குறையக்கூடும். எனவே 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அரசி கஞ்சி கொடுப்பது அவர்கள் உடலின் நீரின் அளவை சீராக்கும். இது மிகவும் விலை குறைவான அதேசமயம் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும். இதில் உள்ள கார்போஹைட்ரெட் மற்றும் வைட்டமின்கள் குழந்தைகளின் சோர்வை விரைவில் போக்கக்கூடியது. உப்பு சேர்த்து கொடுப்பது சோடியத்தின் அளவையும் அதிகரிக்கும்.

வைட்டமின் பி

வைட்டமின் பி

அரிசி வைட்டமின் பி நிறைந்த உணவாகும், எனவே அரிசி கஞ்சியிலும் அதன் சத்துக்கள் பகிரப்பட்டிருக்கும். இந்த வைட்டமின் குழந்தையின் உடல்வளர்ச்சி மட்டுமின்றி மன வளர்ச்சிக்கும் முக்கியமானது. எனவே குழந்தைகளுக்கு தொடக்க காலத்தில் பொதுமான அளவு அரிசி கஞ்சி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

புரோட்டின்

புரோட்டின்

குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே புரோட்டின் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே குழந்தைகளுக்கு 5 மாதம் முடிவடைந்தவுடனேயே அரிசி கஞ்சி கொடுக்க தொடங்குவது நல்லது. இது குழந்தைகளின் தசைகளை வலுபடுத்துவதோடு அவர்கள் விரைவில் எழுந்து நடக்க உதவும் வகையில் கால்களுக்கு தேவையான சக்தியினை கொடுக்கிறது.

அரிப்புக்களை குணப்படுத்தும்

அரிப்புக்களை குணப்படுத்தும்

குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது எனவே அவர்களுக்கு எளிதில் சரும பாதிப்புகள் ஏற்படக்கூடும் குறிப்பாக டயப்பர் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குழந்தையை குளிப்பாட்டும் போது அதில் சிறிது அரிசி கஞ்சியுடன் சில துளிகள் எள் எண்ணெயையும் சேர்த்து குளிப்பாட்டுவது குழந்தைகளின் அரிப்பை குணப்படுத்தும். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இடத்தில் அடிக்கடி இந்த கஞ்சியை தடவி விடுவது குணப்படுத்துவதை விரைவாக்கும்.

காய்ச்சல்

காய்ச்சல்

சளி மற்றும் காய்ச்சலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக செயல்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு நெஞ்சு சளி இருந்தால் இதில் சிறிது மிளகை சேர்த்து கொடுக்கலாம். ஆனால் காரம் மிகக்குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதேசமயம் மிளகால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதையும் சோதித்து பார்த்து கொள்ளவும். மேலும் இது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள மூக்கடப்பையும் சரிசெய்ய கூடியது.

மறுசுழற்சி

மறுசுழற்சி

அரிசி கஞ்சியில் இருக்கும் மற்றொரு சிறப்பு இதனை வீணாக்க தேவையில்லை. குழந்தைக்கு தேவையான அரிசி கஞ்சியை எடுத்துவைத்த பின் மீதமிருக்கும் அரிசியை அம்மா தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பயன்படுத்திக்கொள்ளலாம். எந்தவகையிலும் அரிசி கஞ்சி தயார் செய்வது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

செலவு குறைவு

செலவு குறைவு

அரிசி கஞ்சி செய்ய தேவைப்படும் பொருட்கள் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள்தான். எனவே அதற்கென நாம் தனியாக செலவு செய்ய தேவையில்லை. அதுமட்டுமின்றி குழந்தைக்கு அவ்வப்போது ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய்களை அரிசி கஞ்சியை வைத்தே குணப்டுத்தலாம். எனவே மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லாததால் அந்த செலவும் உங்களுக்கு சேமிப்பாகும்.

அரிசியின் தரம்

அரிசியின் தரம்

இதை செய்வது எளிதானதாக இருந்தாலும் இதிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில எச்சரிக்கைகள் உள்ளன. நீங்கள் எந்த அரிசியை உபயோகப்படுத்தி அரிசி கஞ்சி தயாரிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. எனவே அரிசி வாங்கும்போது அதன் தரத்தை உறுதிசெய்து கொள்ளவும்.

கழுவுதல்

கழுவுதல்

அரிசியின் தரத்தை போன்று முக்கியமான மற்றொன்று அரிசியை சுத்தப்படுத்துவது, ஏனெனில் அரிசியில் சில உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் இருக்கும். அவற்றை நன்கு சுத்தம் செய்தபின்தான் சமைக்க வேண்டும். அதுவும் குழந்தைக்கு என் வரும்போது சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Feeding rice water to baby

Rice water is basically the water residue obtained after you cook rice in water. This rice water can create wonders on baby's health. It can cure baby's cold, fever, constipation and etc.,Focus keyword: Pregnancy, Preganancy care, Health care, Rice water, அரிசி கஞ்சி, குழந்தை, Mother, Fever, cold
Story first published: Monday, July 30, 2018, 18:25 [IST]
Desktop Bottom Promotion