குழந்தை பிறந்த உடன் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

Written By:
Subscribe to Boldsky

புதிதாக தாயானவர்கள் கண்டிப்பாக குழந்தையின் நலனில் மட்டுமின்றி தங்களது சொந்த உடல் நலனிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். புதிய தாய்மார்கள் கண்டிப்பாக நாள் முழுவதும் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் தினசரி கண்டிப்பாக தாயான பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. புரோட்டின்

1. புரோட்டின்

பிரசவத்திற்கு பின்னர் பாலூட்டும் தாய்மார்கள், தங்களது பால் தேவையை பூர்த்தி செய்ய தினசரி 74 கிராம் புரோட்டின் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு தேவையான புரோட்டின் ஆனாது, மாமிசங்கள், மீன், முட்டைகள், நட்ஸ், விதைகள், பால் பொருட்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் என்பதால் இவற்றை உணவில் மறவாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

2. கால்சியம்

2. கால்சியம்

கால்சியம் தேவை உங்களுக்கு 600 mg தேவைப்படும். இவை தயிர், மோர், பால், பன்னீர், சீஸ், ராகி, அடர் பச்சை நிற காய்கறிகள், பாதாம், சோயா பின்ஸ் போன்றவற்றில் இருந்தும் கிடைக்கிறது.

3. தினசரி தேவை பூர்த்தியாக

3. தினசரி தேவை பூர்த்தியாக

நீங்கள் முதலில் சாப்பிட்டதை விட இப்போது 500-600 கலோரிகள் அதிகமாக சாப்பிட வேண்டியது அவசியம். இவ்வாறு சாப்பிட்டால் தான் உங்களது குழந்தைக்கு தேவையான அளவு பாலை உங்களது உடல் தயாரிக்கும். நீங்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது எளிமையான முறையாகும். இதனால் உங்களது குழந்தைக்கு தேவையான உணவும் கிடைக்கிறது அதோடு உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகாமலும் இருக்கும்.

4. முழு தானிய உணவுகள்

4. முழு தானிய உணவுகள்

முழுதானிய உணவுகளான ஒட்மீல், கோதுமை, பிரவுன் அரிசி, பார்லி ஆகியவை அதிக சக்தி வாய்ந்தவை. இவற்றில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்கிறது.

 5. அனைத்து சத்துக்களையும் பெற

5. அனைத்து சத்துக்களையும் பெற

காய்கறிகள் மற்றும் பழங்கள் உங்களது தினசரி உணவில் கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றில் இருந்து உங்களது உடலுக்கு தேவையான அதிக விட்டமின்கள், மினரல்கள் மற்றும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

6. எடை கூடாமல் இருக்க

6. எடை கூடாமல் இருக்க

வெண்ணையில் இருந்து எடுக்கப்படும் நெய்யை சிறிதளவு தான் பயன்படுத்துகிறோம். நீங்கள் ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை எடுத்துக்கொள்வதால் உங்களது கொழுப்பின் அளவு அதிகரிக்காது. உடல் எடையும் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

you should have these foods after delivery

you should have these foods after delivery
Story first published: Thursday, September 21, 2017, 12:01 [IST]