For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதால் உண்டாகும் பின்விளைவுகள்!

சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதால் உண்டாகும் பின்விளைவுகள் பற்றி கொடுக்கப்படுள்ளது

By Lakshmi
|

மருத்துவ வளர்ச்சி அதிகம் இல்லாத காலங்களில் கூட சுகப்பிரசவங்கள் அதிகமாக தான் இருந்தன. ஆனால் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள இந்த காலகட்டத்திலோ, சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது.

சுகப்பிரசவம் ஆவது கடினம் என்பது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் அறுவை சிகிச்சை செய்த காலம் போய், இன்று இந்த மாதத்தில் குழந்தை பிறக்க கூடாது, இந்த தேதியில் இந்த நேரத்தில் குழந்தை பிறக்க கூடாது. ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என்றும், வலி இல்லாமல் சுலபமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் சிலர் சிசேரியன் செய்து குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகரித்த விகிதம்

அதிகரித்த விகிதம்

1970 - 2010 வரை 5% ஆக இருந்த சிசேரியன் விகிதம் தற்போது, 30% க்கு மேல் சென்று விட்டது. இந்த சிசேரியன் பிரசவத்தினால் உண்டாகும் தீமைகளை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

உடல்நல பிரச்சனைகள்

உடல்நல பிரச்சனைகள்

சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.

அடுத்த பிரசவத்தில் பிரச்சனை?

அடுத்த பிரசவத்தில் பிரச்சனை?

தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.

குழந்தைக்கு பிரச்சனை?

குழந்தைக்கு பிரச்சனை?

சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்னைகள் ஏற்படலாம்.

ஆபத்து

ஆபத்து

நிறைமாதமான 37 - 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இடுப்பு எலும்புப் பகுதிக்கு பயிற்சி கொடுப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். குழந்தையின் தலை மற்றும் உடல் வெளியேறும் வகையில் பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து கொடுக்க, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகளும் உறுப்புகளும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் யோகா, கால்களை மடக்கி நீட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள் இதற்கு கைகொடுக்கும்.

வேலைகளை செய்யலாமே!

வேலைகளை செய்யலாமே!

கர்ப்பகாலத்தில் உறங்குவது, அமர்வது என ஒரே நிலையில் நிலைகொள்ளும் ஓய்வு தேவையில்லை. அன்றாட வேலைகளை, குனிந்து, நிமிர்ந்து செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யலாம்.

உணவுகள்

உணவுகள்

துரித உணவு மற்றும் அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects of Cesarean Delivery

Side Effects of Cesarean Delivery
Story first published: Friday, September 22, 2017, 16:47 [IST]
Desktop Bottom Promotion