பிரசவத்திற்கு பின் பயன்படுத்தும் பிரத்யேக நாப்கின்களை இதற்கும் பயன்படுத்தலாம்!

Written By:
Subscribe to Boldsky

மருத்துவமனைகளில் பிரசவ கால உதிரப்போக்கிற்காகவே தயாரிக்கப்பட்ட நாப்கினை தருவார்கள். நாம் வெளியில் இருந்து வாங்கிவரும் நாப்கின்களை அனுமதிக்கமாட்டார்கள். ஏனெனில், பிரசவத்திற்கு பிறகு இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதனை சாதாரணம் நாப்கின்களால் தாங்க முடியாது.

மருத்துவமனைகளில் தயாரிக்கப்படும் நாப்கின்கள் முக்கியமாக இந்த அதிக இரத்தப்போக்க தாங்குவதற்காகவே தயாரிக்கப்பட்டவையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதிரப்போக்கு

உதிரப்போக்கு

கருப்பைக்குள் இருக்கும் தேவையற்ற பொருட்கள் வெளியேறுவதற்காகவே இந்த உதிரப்போக்கு உண்டாகிறது. இது ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்கள் வரை இருக்கும். உங்களுக்கு சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி, சிசேரியனாக இருந்தாலும் சரி இந்த உதிரப்போக்கு இருக்க தான் செய்யும்.

வீட்டிலும் கூட

வீட்டிலும் கூட

பிரசவத்திற்கு பிறகு கண்டிப்பாக அதிகமான உதிரப்போக்கு இருக்கத்தான் செய்யும். இது முறையானது தான். இதனை நினைத்து பயம் கொள்ள தேவையில்லை. ஆனால் நீங்கள் இதற்காக சாதாரண நாப்கின்களை பயன்படுத்த கூடாது. மருத்துவமனையில் தரப்படும் பிரத்யேக நாப்கின்களை நீங்கள் வீட்டில் வைத்துக்கொள்வது சிறந்தது.

பிரத்யேகமானது

பிரத்யேகமானது

பிரசவத்திற்கு பிறகு அதிக உதிரப்போக்கு ஏற்படும். இது ஒவ்வொருவருக்கும் மாறும் என்றாலும், இந்த உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இந்த நிலையை சமாளிக்க நீங்கள் ஒரு நாளைக்கு 8 நாப்கின்கள் வரை உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். இது சற்று சிரமானது தான். எனவே பிரசவத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நாப்கின்களை பயன்படுத்தலாம். இது வெளியில் எடுத்துச் செல்லும் அளவிற்கு கைக்கு அடக்கமாகவும் வந்துவிட்டது.

சௌகரியமானது

சௌகரியமானது

நீங்கள் நல்ல தரமான நாப்கின்களை வாங்க வேண்டியது அவசியம். இதில் காட்டன் அடுக்கு இருக்கும். மேல் பகுதியானது உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இதனால் நீங்கள் சௌகரியமாக உணர முடியும். அதுமட்டுமின்றி இது தொற்றுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. அரிப்பு, எரிச்சல் என எதுவும் இருக்காது.

இரவு பாதுகாப்பு

இரவு பாதுகாப்பு

நீங்கள் பிரசவ கால நாப்கின்களிலேயே பெரிய வகையை வாங்கினால் அது உங்களுக்கு இரவு முழுவதும் பாதுகாப்பளிக்கும். ஆனால் நீங்கள் சாதாரண நாப்கின்களை பயன்படுத்தினால் அடிக்கடி இதனை மாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். இரவில் அடிக்கடி எழுவது அசௌகரியமானதும் கூட...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of maternity pads post pregnancy periods

Benefits of maternity pads post pregnancy periods
Story first published: Wednesday, September 20, 2017, 12:11 [IST]