தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத தினமும் குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் மூலம் தான் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும், நோயெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். சில பெண்களுக்கு தாய்ப்பால் குறைவான அளவில் சுரக்கும்.

Ayurvedic Home Remedy To Increase Breast Milk In New Mothers

இதனால் குழந்தைக்கு போதுமான அளவில் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பல தாய்மார்கள் அவஸ்தைப்படுவார்கள். இப்பிரச்சனைக்கு ஓர் அற்புதமான ஆயுர்வேத வைத்தியம் உள்ளது. இந்த வைத்தியத்தின் மூலம் தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க முடியும். சரி, இப்போது அந்த வைத்தியம் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

எள் - 1 டீஸ்பூன்
பாதாம் பால் - 1/2 கப்

எள்

எள்

பெண்களின் உடலில் கால்சியம் அதிகம் இருந்தால் தான், தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இத்தகைய கால்சியம் எள்ளில் வளமாக உள்ளது.

பாதாம் பால்

பாதாம் பால்

பாதாம் பாலில் கால்சியம் மட்டுமின்றி, புரோட்டீனும் ஏராளமான அளவில் உள்ளது. எனவே புதிய தாய்மார்கள் பாதாம் பாலைக் குடிக்க தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் மிக்ஸியில் பாதாம் பால் மற்றும் எள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு குடித்து வர, தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

குறிப்பு

குறிப்பு

இந்த பானத்தைக் குடிப்பதுடன், புதிய தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் தினமும் போதுமான அளவில் நீரைக் குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தினமும் தவறாமல் பாலைக் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Home Remedy To Increase Breast Milk In New Mothers

Check out this amazing ayurvedic remedy for increased breast milk production!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter