For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு முட்டைகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க அதனை எப்ப கொடுக்கணும் தெரியுமா?

உங்கள் குழந்தைகள் திட உணவை சாப்பிட தயாராக இருந்தால், முட்டை சாப்பிடவும் அவர்கள் தயாராக உள்ளனர்.

|

முட்டை என்பது ஊட்டச்சத்தின் ஒரு சக்தி. இவை பெற்றோர்கள் தயாரிப்பதற்கும், குழந்தைகள் மெல்லுவதற்கும் எளிதாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், குழந்தைகளின் உணவு ஒவ்வாமைகளில் முட்டைகளும் அடங்கும்.

When is it safe to feed eggs to toddlers?

தற்போதைய உணவு வழிகாட்டுதல்களின்படி, திடமான உணவை மெல்லத் தயாரானவுடன் உங்கள் குழந்தைகளுக்கு முட்டை உணவளிக்காததற்கு எந்த காரணமும் இல்லை, இது பொதுவாக 4 முதல் 6 மாதங்களுக்கு இடையில் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய உணவுகளை சீக்கிரம் அறிமுகப்படுத்துவது சிறந்தது. ஏனெனில் அறிமுகத்தை தாமதப்படுத்துவதால், 6 மாத வயதைத் தாண்டி உண்மையில் குழந்தை பருவத்தில் ஒரு ஒவ்வாமையை உருவாக்கும் திறனை அதிகரிக்கக்கூடும். முட்டையை குழந்தைகளுக்கு எப்போது சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு கூறுவது

ஆய்வு கூறுவது

பழைய ஆய்வுகளின்படி, குழந்தைகளுக்கு முட்டைகளை அறிமுகப்படுத்த 2 வயது வரை காத்திருக்குமாறு நிபுணர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தினர். ஆனால் புதிய ஆய்வுகள் இந்த பரிந்துரைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கின்றன. உண்மையில், திடப்பொருட்களை சாப்பிடத் தயாரானவுடன் உங்கள் குழந்தைக்கு பலவகையான உணவுகளை அறிமுகப்படுத்துவது உணவு ஒவ்வாமையைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும் என்று கூறப்படுகிறது.

MOST READ: உடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா? அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...!

மஞ்சள் கரு

மஞ்சள் கரு

மற்றொரு காலாவதியான ஆலோசனை, மஞ்சள் கருவுக்கு ஒவ்வாமை இல்லாததால் குழந்தைகளுக்கு முட்டையின் மஞ்சள் கருவை மட்டுமே கொடுப்பது. மற்றொன்று, பெண் குழந்தைகளுக்கு மஞ்சள் கருவை சாப்பிட கொடுக்காமல் இருப்பது. இவை இனி அவசியமில்லை என்று கருதப்படுகிறது. மஞ்சள் கரு, வெள்ளைக்கரு இரண்டையுமே குழந்தைக்கு கொடுப்பது நல்லது.

எப்படி அறிவது?

எப்படி அறிவது?

உங்கள் குழந்தைகள் திட உணவை சாப்பிட தயாராக இருந்தால், முட்டை சாப்பிடவும் அவர்கள் தயாராக உள்ளனர். உங்கள் குழந்தை உயர் நாற்காலியில் உட்கார்ந்து தலையை உயர்த்திப் பிடிக்க முடிந்தால், திடமான உணவுகள் சாப்பிடுவதற்கான நேரம் இது.

குழந்தைகளுக்கு புதிய உணவு

குழந்தைகளுக்கு புதிய உணவு

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸின் கூற்றுப்படி, உங்கள் குழந்தைக்கு ஒரு நேரத்தில் ஒரு புதிய உணவை மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டும். மற்றொரு புதிய உணவை அறிமுகப்படுத்துவதற்கு முன் இரண்டு-மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த இரண்டு-மூன்று நாட்களில், உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏதும் இருக்கிறதா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்கலை தானியங்களுடன் தொடங்குகிறார்கள். பின்னர் தூய்மையான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் புரதம் நிறைந்த முட்டையையும் கொடுக்கிறார்கள்.

MOST READ: 'ஓரல் செக்ஸில்' எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா? அதனால் ஆபத்து இருக்குதானு தெரிஞ்சிக்கோங்க...!

முட்டை உணவளிக்க சரியான வழி

முட்டை உணவளிக்க சரியான வழி

முட்டைகளில் புரதம், இரும்பு மற்றும் கோலின் நிறைந்துள்ளது. இதனால், இது உங்கள் குழந்தையின் உணவில் ஆரோக்கியமான கூடுதலாக இருக்கும். சால்மோனெல்லா மற்றும் பிற உணவுப்பழக்க நோய்களைத் தடுக்க முட்டைகளை சரியாக சமைக்க உறுதி செய்யுங்கள். முட்டையை கடினமாக வேகவைத்து பின்னர் பிசைந்து கொள்வது நல்லது. நீங்கள் பிசைந்த முட்டைகளை பாலுடன் சேர்த்துக்கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை

குழந்தைகளுக்கு ஒவ்வாமை

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் முட்டைகளை அறிமுகப்படுத்தும்போது, இந்த அறிகுறிகளையும் எதிர்வினைகளையும் கவனிக்கவும், அவருக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். முட்டைகளை சாப்பிட்ட பிறகு அல்லது தொட்ட பிறகும் குறுகிய காலத்தில் எதிர்வினைகள் நிகழ்கின்றன.

வீக்கம், தடிப்புகள், படை நோய் மற்றும் அரிக்கும் தோலழற்சி

சுவாசிப்பதில் சிரமம்

தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல்

சிவப்பு மற்றும் நீர் நிறைந்த கண்கள்

வாந்தி, குமட்டல், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு

அனாபிலாக்ஸிஸ், இது குறைவாகவே காணப்படுகிறது

தடுப்பூசியில் முட்டைகள்

தடுப்பூசியில் முட்டைகள்

சில தடுப்பூசிகளில் முட்டை உள்ளது. இது காய்ச்சல் போன்ற அலர்ஜியை ஏற்படுத்தும். உங்களுக்கு ஒவ்வாமை ஏதேனும் பரம்பரையாக இருந்தால் உங்கள் குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When is it safe to feed eggs to toddlers?

Read on to know the when is it safe to feed eggs to toddlers.
Story first published: Wednesday, May 13, 2020, 13:48 [IST]
Desktop Bottom Promotion