For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்கள் எதார்த்தமாக சொல்லும் இந்த விஷயங்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்குமாம்...!

உங்கள் வார்த்தைகள் உங்கள் குழந்தையின் ஆளுமையின் ஒரு பகுதியாக மாறும். உங்களின் எதிர்மறை வார்த்தைகள் தீங்கு விளைவிப்பது போல, உங்களின் நேர்மறை வார்த்தைகள் அவர்களை குணப்படுத்தும்.

|

உங்கள் வார்த்தைகள் உங்கள் குழந்தையின் ஆளுமையின் ஒரு பகுதியாக மாறும். உங்களின் எதிர்மறை வார்த்தைகள் தீங்கு விளைவிப்பது போல, உங்களின் நேர்மறை வார்த்தைகள் அவர்களை குணப்படுத்தும். குழந்தைகள் அருகில் இருக்கும்போது நமது வார்த்தைகளில் அதிக கவனத்துடன் இருப்பதன் மூலம், அவர்களின் உள் சுய-பேச்சை மாற்ற நாம் அவர்களுக்கு உதவலாம, அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

Things That Parents Say Casually Which Affects Kids Mental Health in Tamil

நமது அன்றாட வழக்கத்தில் 'நீ ஒரு முட்டாள்; நீங்கள் எப்படி இவ்வளவு முட்டாளாக இருக்கிறாய்?'என்று நமக்குள் நாம் பேசிக்கொண்டாலும், அது உங்கள் குழந்தைககளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பெற்றோர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சில சொற்றொடர்கள் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் அவை குழந்தைகள் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாகப் பயன்படுத்தப்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீ ஒரு முட்டாள்

நீ ஒரு முட்டாள்

இது குழந்தையின் நம்பிக்கையை விரைவாகக் குறைக்கிறது. இது குழந்தைகளை அவமானமாக உணர வைக்கிறது. இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் சுய மதிப்பை இழக்கலாம். ஒரு குழந்தைக்கு வாழ்க்கை அனுபவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்கள் முட்டாள்தனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். உண்மையில், பெரும்பாலான குழந்தைகளுக்கு புத்திசாலித்தனமான பெரியவர்களை விட அதிக IQ உள்ளது.

ரொம்ப நாடகமாடாதே

ரொம்ப நாடகமாடாதே

ஒரு குழந்தை உங்கள் சொல்வதை புரிந்து கொள்ளவில்லை அல்லது அமைதியாக இருக்கவில்லை என்றால், அவர் நாடகமாடவில்லை. ஒரு குழந்தை உணர்ச்சிரீதியில் சாய்ந்திருக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 'நீங்கள் அதை விட்டுவிடலாம் அல்லது அதனுடன் செல்லலாம்' போன்ற ஒழுக்கமான சொற்றொடரைக் கண்டுபிடிப்பதுதான். இது குழந்தைக்கு அவர்களின் சொந்த உணர்ச்சி வெடிப்பைக் கட்டுப்படுத்தும் உணர்வைத் தருகிறது, மேலும் அதைத் தாண்டி எப்போதும் செல்லக்கூடாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஏன் இப்படி இருக்கிறாய்?

ஏன் இப்படி இருக்கிறாய்?

உங்கள் குழந்தையை முட்டாள், மெலோடிராமாடிக் என்று முத்திரை குத்துவது குழந்தையின் சுயமரியாதையை பாதிக்கும், தங்களைப் பற்றிய பாதுகாப்பின்மையை அதிகரிக்கும், மேலும் அவர்கள் தங்களைத் தாங்களே இழிவாகப் பார்க்கத் தொடங்கலாம். இது அவர்கள் வளரும்போது அவர்களில் ஒரு பகுதியாக மாறுவதற்கு இது அவர்களின் நடத்தையில் உடனடியாக பிரதிபலிக்கக்கூடும்.

நம்மால் அதனை வாங்க முடியாது

நம்மால் அதனை வாங்க முடியாது

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னிலையில், 'இந்த மாதம் எப்படி கட்டணம் செலுத்தப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை' என்று அடிக்கடி கூறுகிறார்கள். நிதி அழுத்தத்தின் சுமை குழந்தைகளை கவலையடையச் செய்யலாம். ஒரு குழந்தை ஒரு குடும்பத்தின் நிதி தாக்கங்களை புரிந்து கொள்ள முடியாது. எனவே அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மறைக்கத் தொடங்கலாம் மற்றும் அவர்களின் சரியான தேவைகளைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்தலாம்.

என்ன பிரச்சினை உனக்கு?

என்ன பிரச்சினை உனக்கு?

இந்த வாக்கியத்தின் தொனி மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள் கோபமாக இருக்கும்போது அதைச் சொன்னால், குழந்தைகள் தாங்கள் எப்போதும் தவறு என்று உள்வாங்கிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, அல்லது அவர்களுக்குள் ஏதோ குறை இருக்கிறது என்று எண்ணுவார்கள். குழந்தைகளிடம் கத்தாமல், அவமானப்படுத்தாமல் அவர்களைக் கண்டிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

இது ஒன்றும் பெரிய விஷயமல்ல

இது ஒன்றும் பெரிய விஷயமல்ல

தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும் பேசுவதும் சரி என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகள் மூலம் அவர்களின் உணர்வுகள் ஒரு பொருட்டல்ல, அவர்கள் தங்கள் சொந்த உணர்வுகளுக்கு மதிப்பில்லை என்ற செய்தியை அவர்களுக்கு அனுப்புகிறோம். இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Parents Say Casually Which Affects Kids Mental Health in Tamil

Check out the things that parents say casually which affect kids mental health.
Story first published: Monday, November 21, 2022, 14:47 [IST]
Desktop Bottom Promotion