Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Sports
ஒரு இன்னிங்சில் ஆடினால் போதுமா.. பொறுப்பின்றி விக்கெட்டை இழக்கும் மூத்த வீரர்.. கோபத்தில் பிசிசிஐ!
- Movies
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- News
கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் குழந்தைகள் மந்தமாகவே இருக்கிறார்களா? எவ்வாறு ஊக்குவிப்பது?
ஊக்குவிப்பது என்பது நீங்கள் சொல்லும் சரியான வார்த்தைகளில் உள்ளது. நீங்கள் கூறும் நல் வார்த்தைகள் உங்கள் குழந்தைகளை நல்ல வழிகளில் கொண்டு செல்லும். ஊக்குவிப்பது என்பது பள்ளிகளிலும், வீடுகளிலும் குந்தைகளுக்கு கொடுக்கும் பொதுவான விஷயமாகும். ஆனால் சரியான நேரத்தில் கொடுக்கும் சரியான வார்த்தைகள் உங்கள் குழந்தைகளை சரியான பாதையில் செல்ல ஊக்குவிக்க உதவும்.எல்லா பெற்றோர்களுக்கும் எப்போது தனது குழந்தையை ஊக்குவிக்க வேண்டும் எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பது தெரிவது இல்லை.
நீங்கள் சரியான நேரத்தில் கொடுக்கும் ஊக்குவிப்பு உங்கள் குழந்தையின் இலட்சியத்தை அடைய வைக்கும்.கல்வியில் மட்டும் உங்கள் குழந்தை சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். விளையாட்டிலும் அவர்கள் சிறந்து விளங்குவது நல்லது. இதற்கு உங்களது ஊக்குவிப்பு அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஊக்கமளிப்பு எல்லா இடங்களிலும் பயன்பட வேண்டும் என்று நினைப்பது தவறு. குழந்தைகள் எதில் விருப்பமாக இருக்கிறார் என்பதை கண்டு அறிந்து பயன்படுத்துங்கள்.

நன்மைகள்
உங்கள் குழந்தைகளின் விருப்பமான விஷயங்கள் தெரிந்து கொண்டு அவர்களின் விருப்பமான துறையில் முன்னேறச் செய்யலாம்.
குழந்தைகளின் உள்ளேயே உள்ள விருப்பத்தை தெரிந்து கொள்ளலாம்.
அவர்களின் விட முயற்சியை மேன்படுத்தலாம்.

சரியான வழிகள்
உங்கள் குழந்தையை ஊக்குவிப்பதும், புகழ்வதும் மிகவும் நல்ல விஷயமாக இருந்தாலும் அவர்கள் செய்யும் தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் அவர்களை கண்டிப்பதில் தவறு இல்லை. நீங்கள் வீட்டில் புகழ்ந்தால் பள்ளியில் என்ன செய்வது என்று கவலை கொள்ளத் தேவையில்லை. ஊக்குவிக்கும் சொற்களை எங்கே உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்துங்கள். எல்லா இடங்களிலும் வேலை செய்யும் என்று முடிவு எடுக்காதீர்கள்.

குறிப்பிட்டு விளக்குங்கள்
உங்கள் குழந்தை ஒரு செயலை செய்யும் போது அந்த செயலை சுட்டிக்காட்டி விளக்கத்தைக் கொடுங்கள். நல்ல விஷயங்களைச் செய்யும் போது பாராட்டி பேசுங்கள். இந்த விஷயங்கள் செய்யும் போது அம்மாவுக்கு உன்னை மிகவும் பிடிக்கும் என்று கூறுங்கள்.

முயற்சி, செயலை பாராட்டுங்கள்
உங்கள் குழந்தை ஒரு செயலை செய்து முடித்த பிறகு அந்த செயலை செய்யச் சொன்ன செயலுக்கான காரணத்தையும் அவர்கள் செய்த முயற்சியையும் பற்றி கூறி பாராட்டுங்கள். குழ்நதைகள் ஒரு செயலிலோ அல்லது தேர்விலோ தோல்வி அடைந்து விட்டால் அதை பெரிய விஷயமாக கருதுவார்கள். அவர்கள் போதுமான அளவு முயற்சி செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி சரியான வார்த்தைகள் மூலம் ஊக்குவிப்பது பெற்றோரின் கடமையாகும்.

கட்டுப்படுத்துவதை தவிர்த்தல்
உங்கள் குழந்தைகள் செய்யும் செயலைக் கட்டுப்படுத்துவதை விட்டு விடுங்கள். அவர்கள் முதலில் செய்யட்டும் பின்பு கற்று கொடுங்கள். இவ்வாறு செய்ய வேண்டும் இப்படி செய்ய கூடாது என்று கூறுங்கள். அவர்களிடன் "நீ இன்னும் நன்றாகச் செய்வாய்" என்று கூறுங்கள். இவை அடுத்த முறை அவர்கள் செய்யும் செயலை நன்றாக செய்ய ஊக்குவிக்கும். இரண்டு வயதிற்கு மேல் குழந்தைகள் மற்றவர்களிடம் இருந்து விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். இதில் நல்லது எது கெட்டது எது என்பதை புரிந்து கொள்ளவது இல்லை. இவற்றை எடுத்து விவரிப்பது பெற்றோரின் கடமையாகும்.

ஒப்பிட்டுப் புகழை தவிர்த்தல்
உங்கள் குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிடும் போது மேலும் முயற்சி செய்ய உதவிக் கூடும். ஆனால் சில நேரங்களில் தோல்வி அடையும் போது ஒப்பீடு கோவமாக மாறிவிடும். எனவே குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிக புகழ் தவிர்த்தல்
உங்கள் குழந்தைகளை அடிக்கடி புகழ்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்குப் பாராட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான புகழ் ஒவ்வொரு விஷயத்திலும் புகழை எதிர்பார்க்க கூடும். புகழ்வதை எப்போது எங்கு புகழ வேண்டும் என்று பார்த்து புகழ்வது பெற்றோரின் கடமையாகும்.