For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவை தொடர்ந்து அமெரிக்க குழந்தைகளைக் குறி வைக்கும் கவாசாகி நோய் - அதன் அறிகுறிகள் இதோ!

சமீபத்திய அறிக்கைகளின் படி, ஆறு ஐரோப்பிய நாடுகளில் சுமார் 100 குழந்தைகள் மற்றும் நியூயார்க்கில் குறைந்தது 25 குழந்தைகள் கவாசாகி நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்

|

சமீபத்திய அறிக்கைகளின் படி, ஆறு ஐரோப்பிய நாடுகளில் சுமார் 100 குழந்தைகள் மற்றும் நியூயார்க்கில் குறைந்தது 25 குழந்தைகள் கவாசாகி நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததுள்ளது.

அதே சமயம் கவாசாகி நோய்க்கும், கொரோனா வைரஸ் தொற்றிற்கும் தொடர்பு இருப்பதாக எவ்வித நிரூபணமும் இல்லை. இருப்பினும் நியூயார்க்கில் கடந்த சில வாரங்களாக நிறைய குழந்தைகள் கவாசாகி நோயாலும், கொரோனா வைரஸ் தொற்றாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

MOST READ: கொரோனாவின் புதிய 6 எச்சரிக்கை அறிகுறிகள்!

இப்போது கவாசாகி நோய் என்றால் என்ன மற்றும் அது எப்படி குழந்தைகளை தாக்குகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவாசாகி நோய் என்றால் என்ன?

கவாசாகி நோய் என்றால் என்ன?

கவாசாகி நோய் என்பது ஒரு அரிய நோயாகும். இது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது. இந்த நோயால் உடலில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைகிறது. பெரும்பாலும் இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகளைத் தான் வீக்கமடையச் செய்கிறது.

கவாசாகி நோய் மியூகோகுட்டானியஸ் நிணநீர் முனை நோய்க்குறி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நிணநீர், தோல் மற்றும் வாய், மூக்கு மற்றும் தொண்டைக்குள் உள்ள சளி சவ்வுகளையும் பாதிக்கிறது. இது குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளுள் ஒன்றாகும். இருப்பினும், இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் சரிசெய்ய முடியும்.

கவாசாகி நோய்க்கான காரணங்கள்

கவாசாகி நோய்க்கான காரணங்கள்

இப்போதைக்கு, இந்த நோய்க்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. சுகாதார நிபுணர்கள் கவாசாகி நோய்க்கான காரணத்தை அறிய பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் இதர சுற்றுச்சூழல் காரணிகளுடன் இணைத்து பார்க்கின்றனர். இருப்பினும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதே சமயம், இந்த நோய் ஒரு தொற்றுநோய் இல்லை என்பதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கவாசாகி நோய்க்கான அறிகுறிகள் என்ன?

கவாசாகி நோய்க்கான அறிகுறிகள் என்ன?

கவாசாகி நோய்க்கான அறிகுறிகள் மூன்று கட்டங்களாக தோன்றுகின்றன. அவை பின்வருமாறு:

முதல் கட்டத்தில்...

* எரிச்சல்

* உதடுகள் வறண்டு, சிவந்து வெடிப்புகளுடன் இருப்பது

* மிகவும் சிவந்த மற்றும் வீக்கமடைந்த நாக்கு

* கழுத்தில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் வீக்கம்

* 3 நாட்களுக்கும் மேலாக காய்ச்சலானது 38 C-க்கும் அதிகமாக நீடித்திருப்பது

* கண்கள் சிவந்திருப்பது

* உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளில் தடிப்புகளுடன், சிவந்திருப்பது.

இரண்டாவது கட்டத்தில்...

* மூட்டு வலி

* வயிற்றுப்போக்கு

* வாந்தி

* அடிவயிற்று வலி

* கைகள் மற்றும் பாதங்களில் உள்ள தோல் உரிதல்- குறிப்பாக கை விரல் மற்றும் கால் விரல்களில்.

மூன்றாம் கட்டத்தில் அறிகுறிகள் மெதுவாக குறையும். இந்த அறிகுறிகள் குறைவதற்கு 8 வாரங்கள் எடுக்கும். சில குழந்தைகளிடம், மிக மோசமான சிக்கல்கள் எழக்கூடும்.

கவாசாகி நோய்க்கான ஆபத்து காரணிகள் என்ன?

கவாசாகி நோய்க்கான ஆபத்து காரணிகள் என்ன?

ஆய்வுகளின் படி, ஒருசில காரணிகள் தான் குழந்தைகளுக்கு கவாசாகி நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அவையாவன:

* வயது - 5 வயதிற்குட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

* இனம் - ஜப்பானிய அல்லது கொரியா போன்ற ஆசியா அல்லது பசிபிக் தீவு வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதிக ஆபத்து உள்ளது.

* பாலினம் - கவாசாகி நோய் சிறுமிகளை விட சிறுவர்களையே சற்று அதிகம் தாக்குகிறது.

கவாசாகி நோயின் சிக்கல்கள் என்ன?

கவாசாகி நோயின் சிக்கல்கள் என்ன?

* இதய தசைகளில் வீக்கம்

* இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகள் வீக்கமடைவதால், தமனிகளின் சுவர் பலவீனமாகும்

* இதய வால்வு பிரச்சனைகள்

* அசாதாரண இதய தாளங்கள்

* சில குழந்தைகள் கரோனரி தமனி பிரச்சனையின் தீவிரத்தால் மரணமடைவார்கள்.

கவாசாகி நோயை கண்டறிவது எப்படி?

கவாசாகி நோயை கண்டறிவது எப்படி?

தற்போது, கவாசாகி நோயைக் கண்டறிவதற்கான குறிப்பிட்ட பரிசோதனை எதுவும் இல்லை. ஆகவே இந்நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் மற்ற நோய்களுக்கு மேற்கொள்ளும் சில சோதனைகளை செய்வார்கள். அந்நோய்களாவன:

* டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்

* தட்டம்மை

* சிறார் முடக்கு வாதம்

* ஸ்கார்லெட் காய்ச்சல்

* ராக்கி மவுண்டன் ஸ்பாட் காய்ச்சல் போன்ற டிக் பரவும் நோய்கள்

* ஸ்டீவன்ஸ்-ஜான்சன் நோய்க்குறி (சளி சவ்வுகளின் கோளாறு)

பின்னர், மருத்துவர் உடல் பரிசோதனை மற்றும் அதைத் தொடர்ந்து இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகளை செய்து, அந்த சோதனையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள நோய்கள் உள்ளதா என பார்ப்பார்கள் மற்றும் குழந்தையின் இரத்தணுக்களின் அளவையும் சோதிப்பார்கள். சில நேரங்களில், எலக்ட்ரோகார்டியோகிராம் மற்றும் எக்கோகார்டியோகிராம் கூட மேற்கொள்ளப்படலாம்.

கவாசாகி நோய்க்கான சிகிச்சைகள் என்ன?

கவாசாகி நோய்க்கான சிகிச்சைகள் என்ன?

கவாசாகி நோய் தீவிரமாகாமல் இருக்க வேண்டுமானால், ஆரம்பத்திலேயே மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த நோய்க்கான சிகிச்சையில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் முதன்மையானது ஆஸ்பிரின். இது கரோனரி தமனிகளில் உள்ள வீக்கத்தை சரிசெய்ய உதவும் மற்றும் மூட்டுகளில் உள்ள அழற்சி மற்றும் வலியைக் குறைக்கும் மற்றும் காய்ச்சலையும் குறைக்கும்.

அதோடு காமா குளோபுலின் பரிந்துரைக்கப்படலாம். இது ஒரு நரம்பு வழியாக நோயெதிர்ப்பு புரதத்தை உட்செலுத்தி கரோனரி தமனி பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kawasaki Disease: Symptoms, Causes, Diagnosis, & Treatment

Although there is no confirmation that the Kawasaki disease is linked to the COVID-19, doctors are advised to be on high alert. Kawasaki disease is a rare disease that affects children under the age of 5 & causes blood vessels inflammation.
Desktop Bottom Promotion