Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே எவ்வளவு வயதானாலும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதுவும் பெண்கள் அதற்காக நிறைய மெனக்கெடுவார்கள். குறிப்பாக மாய்ஸ்சுரைசர், சன் ஸ்க்ரீன், பாடி லோசன் என்று சருமத்திற்கு எவ்வளவோ பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இது தவிர பார்லர் சென்று ஃபேஷியல், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்றும் பலவிதமான அழகு பராமரிப்பையும் கொடுப்பார்கள்.

ஆனால் தற்போதைய அலுவலக வேலைப்பளுவால் ஓய்வு கூட எடுக்க முடியாத இந்த சூழ்நிலையில் கிடைக்கும் நேரத்தில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க நினைக்கிறார்கள். அதற்காக இயற்கை வழிகளை நாடுகிறார்கள். அதுவும் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக் போடலாம். கீழே முகச் சுருக்கங்களை போக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சிறிது பப்பாளி துண்டுகளை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேன், எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளைக்கரு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒதுரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 40 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

