Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க குழந்தையை வெறுங்காலுடன் நடக்க விடமாட்டேங்குறீங்களா? இனிமே அந்த தப்பை பண்ணாதீங்க...ஏன் தெரியுமா?
பெரும்பாலான நேரங்களில் வெறுங்காலுடன் நடக்கும்போது குழந்தைகளின் கால்கள் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த கால் தசையை உருவாக்குகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதங்கள் மனித உடலின் மிகவும் உணர்ச்சிகரமான உறுப்புகளில் ஒன்றாகும். பாதத்தின் அடிப்பகுதி மிகவும் உணர்திறன் கொண்டது. வெறுங்காலுடன் நடப்பதைப் பற்றி நாம் பேசும்போது, அது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. வெறும் கால்களில் நடக்க வேண்டும் என நம் முன்னோர்களும் ஏற்கனவே நமக்கு கற்பித்திருக்கிறார்கள். கால் என்பது 26 எலும்புகள் மற்றும் 35 மூட்டுகள் கொண்ட அடர்த்தியான அமைப்பாகும், இது தசைநார்களால் ஒன்றாக இணைக்கப்பட்டு ஆதரிக்கப்படுகிறது. குழந்தைகள் நடக்கத் தொடங்கும் போது தட்டையான பாதத்துடன் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் கால்களின் தசைகள், எலும்புகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியில் உள்ளன.

ஒரு குழந்தையின் கால் கொழுப்பால் நிரம்பியுள்ளது மற்றும் மிகவும் நெகிழ்வானதாக இருக்கும். குழந்தைகள் வெறுங்காலுடன் நடக்கும்போது, தரைவிரிப்புகள், கடினமான தளங்கள் மற்றும் புல் ஆகியவற்றுக்கு இடையே வித்தியாசத்தை அறிந்துகொள்ள முடியும். உங்கள் குழந்தை வெறும் காலுடன் நடக்கும்போது கிடைக்கும் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலம்.

நிபுணர்கள் கூறுவது
உங்கள் குழந்தைக்கு பாத வளர்ச்சியில் சிக்கல் இருப்பதை நீங்கள் கவனிக்காத வரை, வெறுங்காலுடன் நடப்பது சிறந்தது. வெறும் காலுடன் உங்கள் பாதங்களை பூமியில் வைத்து நடக்கும்போது, உங்கள் குழந்தையின் பாதமும் பூமியும் இணையும். வெறுங்காலுடன் நடக்கும்போது வெள்ளை இரத்த அணுக்கள் குறைவதும், இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பரிந்துரைக்கிறது. குறுநடை போடும் குழந்தை வெறுங்காலுடன் நடப்பது, அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தசை வளர்ச்சியை அனுமதிக்க உதவுகிறது
பெரும்பாலான நேரங்களில் வெறுங்காலுடன் நடக்கும்போது குழந்தைகளின் கால்கள் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த கால் தசையை உருவாக்குகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெறுங்காலுடன் நடப்பது நல்ல தோரணையை வளர்க்க உதவுகிறது. பிறந்தவுடன் உங்கள் குழந்தையின் சிறிய கால்களின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருக்கும், அவை வளரும் நேரத்தில், எலும்புகள் கடினமாகி, கால்களில் உள்ள மூட்டுகள், தசைகள் மற்றும் தசைநார்கள் உருவாகின்றன. சில நேரங்களில் வெறுங்காலுடன் நடப்பது குழந்தையின் தசை வளர்ச்சிக்கு உதவும்.

சுறுசுறுப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது
உங்கள் குழந்தையின் சிறிய கால் தரையில் நேரடியாக தொடர்பு கொள்ளும்போது, உங்கள் குழந்தையின் மூளை நரம்பு முனைகள் மூலம் தகவல்களைப் பெறுகிறது மற்றும் உடல் சமநிலையை எவ்வாறு சரிசெய்வது என்பதை அறிய அனுமதிக்கிறது. செருப்புகளை அணிவது குழந்தையின் கால்களுக்கு பாதுகாப்பின் அடுக்கை அதிகரிக்கிறது. ஆனால், அது உங்கள் குழந்தை சமநிலைப்படுத்துவதை மிகவும் கடினமாக்கும், இதனால் மூளையால் தகவலைப் பெற முடியாது. வெறுங்காலுடன் நடக்கும்போது, உங்கள் குழந்தை வெவ்வேறு மேற்பரப்புகளை பாதுகாப்பாக கடக்க முடியும். புல், மணல், சேறு என வெவ்வேறு பரப்புகளில் ஓடுவதும் நடப்பதும் சிறு குழந்தைகளுக்கு தங்கள் உடலை வெவ்வேறு விதங்களில் நகர்த்துவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.

உணர்ச்சி வளர்ச்சியை மேம்படுத்துகிறது
உங்கள் குழந்தைகள் கால்களாலும் கைகளாலும் விஷயங்களை ஆராய்வதை நாம் அனைவரும் கவனித்திருக்கிறோம். உங்கள் உள்ளங்காலில் 200,000 நரம்பு முனைகள் உள்ளன. குழந்தை நிற்பதற்கும் நடப்பதற்கும் முன்பு வெறுங்காலுடன் இருக்கும் போது பல அமைப்புகளை அனுபவிக்கும். சோபா, கார்பெட் போன்றவற்றில் கால்விரல்கள் மற்றும் கால்களை வைத்திருக்கும்போது, அவற்றை தள்ளும். குழந்தை வெறுங்காலுடன் நடப்பது அவர்களின் உணர்ச்சி வளர்ச்சியைத் தொடர அனுமதிக்கிறது.

இறுதிக்குறிப்பு
அலமாரிகளில் குழந்தைகளின் காலணிகளை எடுத்து வையுங்கள். அவர்களை தரையில் வெறும் கால்களில் நடக்க வையுங்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் நல்லது. உங்கள் குறுநடை போடும் குழந்தை தனது உடல், இயக்கம் மற்றும் சுற்றுப்புறங்களைப் பற்றிய பல விஷயங்களை அவரது கால்களால் ஆராயவும் கற்றுக்கொள்ளவும் வெறுங்காலுடன் நடக்க பழக்கப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications