Just In
- 13 min ago
நுரையீரல் புற்றுநோயின் அபாயகரமான சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- 1 hr ago
பெண்கள் ப்ரா அணிந்துகொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? உஷாரா இருங்க...!
- 2 hrs ago
ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்!
- 8 hrs ago
இன்றைய ராசிப்பலன் (27.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
Don't Miss
- News
இந்தகாலத்தில் இப்படியொரு எம்.எல்.ஏ.வா? குடியரசு தின விழாவில் பங்கேற்க சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ!
- Sports
உள்ளே வந்ததும் வேலையை காட்ட போகும் கோலி.. கிலியில் "அந்த" வீரர்.. பிளேயிங் லெவனில் மாற்றம்?!
- Movies
டாக்டரை தொடர்ந்து ’டான்’ ஆகும் சிவகார்த்திகேயன்.. லைகா தயாரிப்பில் இயக்கப் போவது யார் தெரியுமா?
- Finance
இந்திய அரசின் சொத்துக்களை கைப்பற்ற திட்டமிடும் கெய்ர்ன் எனர்ஜி.. 1.4 பில்லியன் டாலர் வழக்கு..!
- Automobiles
இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வளரும் குழந்தைகளில் ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!
குழந்தையின் நடத்தையில் ஏற்படும் பாதிப்பு தொடர்பான ஒரு நோய் ஆட்டிசம். இதனை மனஇறுக்கம் என்றும் கூறலாம். குழந்தை பிறந்து ஆறுமாதம் முதல் ஒரு வருட காலத்தில் அதன் நடத்தை இயல்பாக இருக்கிறதா அல்லது இந்த ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டுகொள்ள முடியும்.
குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாயைப் பார்த்து சிரிக்காமல் இருப்பது, ஒரு வயதுக்கு பிறகும் அருகில் தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களை கவனிக்காமல் இருப்பது, மழலைமொழி பேசாமல் இருப்பது போன்றவை சில அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை பெற்றோர் கவனித்தால் உடனடியாக உளவியல் மருத்துவரிடம் சென்று குழந்தைக்கு பரிசோதனை செய்வது நல்லது.

ஆட்டிசம் என்பது என்ன ?
ஆட்டிசம் என்பது ஒரு மனநலம் சார்ந்த பாதிப்பாகும். குழந்தை பிறப்பு அல்லது இளம் பருவத்திலிருந்து இந்த பாதிப்பு வளர்ச்சியடைகிறது. இந்த பாதிப்புடைய குழந்தைகள் இவர்களுடைய ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளை விட அசாதாரண வளர்ச்சியைக் கொண்டுள்ளனர். மற்ற குழந்தைகளை விட நடத்தையில் வேறுபாடு கொண்டிருப்பர்கள். மிக இளம் வயதில் பெற்றோர்கள் இந்த பாதிப்பின் அறிகுறியைக் கண்டறிவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குழந்தைகள் வளர வளர அவர்களின் நடத்தையில் உள்ள வேறுபாட்டை பெற்றோர் உணரத் தொடங்குகின்றனர்.

ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கான அறிகுறிகள்:
* பேசவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியாத நிலை
* பேசும்போது ஒரு வித ஒலியை உண்டாக்குவது
* இயந்திரத்தனமாக பேசுவது
* மற்றவர்களின் வார்த்தைகளை அவசியமில்லாமல் மறுபடி மறுபடி பேசுவது
* ஒருபக்கமாக அமருவது
* உணர்ச்சியில்லாத தொனியில் பேசுவது
* பேசும்போது கண் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பது
* சின்ன விஷயங்களையும் புரிந்து கொள்ள இயலாமல் இருப்பது
* வார்த்தைகளை மிகச் சிறிய அளவு மட்டும் புரிந்து கொள்வது
* மொழியைப் புரிந்து கொள்வதில் சிரமம்

குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு எப்படி இரையாகின்றனர் ?
இப்போது வரை ஆட்டிசம் பாதிப்பிற்கான சரியான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை. சுற்றுப்புற பாதிப்பு அல்லது மரபணு பாதிப்பு போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தை பிறப்பதற்கு முன்னர் இருக்கும் சுற்றுப்புறத்தில் உள்ள ரசாயனத்தின் தாக்கம் அல்லது தொற்று பாதிப்பு போன்றவை குறித்து விஞ்ஞானிகள் ஆரய்ய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் எந்த ஒரு சேதமும் ஆட்டிசம் பாதிப்பை உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மற்றொரு சில ஆராய்ச்சிகள், கருவுற்றிருக்கும் தாய்க்கும் தைராய்டு ஹார்மோன் குறைபாடு இருப்பதையும் கருத்தில் கொள்கின்றனர். குறைப்பிரசவமும் ஒரு காரணமாக இருக்க முடியும். பிரசவத்தின் போது குழந்தைக்கு முழு ஆக்சிஜன் கிடைக்கமுடியாமல் போகிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறைப்பிரசவத்திற்கு முக்கிய காரணமாகிறது.

ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தையை கையாளுவது எப்படி ?
* ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் அவர்களைக் கையாளுவதில் பலத்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில் பெற்றோர் குழந்தையிடம் அன்பையும் அரவணைப்பையும் வழங்க வேண்டும்.
* இவ்வித குழந்தைகளைக் கையாளும் போது, அவர்களுடைய நடத்தையை பரிசோதித்து, அவர்கள் என்ன கூற வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இவ்வித குழந்தைகள் தங்கள் விருப்பங்களை மிகவும் குறைவான தொனியில் வெளிப்படுத்துவார்கள் அல்லது கோபமாக வெளிப்படுத்துவார்கள்.
* ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்தில் இருந்து ஒதுங்கி இருப்பார்கள். அப்படி அவர்கள் சமூகத்துடன் இணைந்திருந்தாலும், அவர்கள் நடத்தையில் வேறுபாடு இருக்கும்.

மேலும்...
* எதையும் கவனித்துவிட்டு பின்பு தான் பேசத் தொடங்குவார்கள். அவர்களுடைய தினசரி செயல்பாடுகளில் ஏதாவது மாற்றம் இருந்தால் அது மனநல ரீதியாக அவர்களை பாதிக்கும்.
* ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களைக் கவனமாக பராமரிப்பது அவசியம்.
* ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகள் சமூகம், நடத்தை மற்றும் மொழி சார்ந்த பிரச்சனைகளை எளிதில் கடந்து வர சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சில நிகழ்ச்சிகள் நோயாளிகளின் நடத்தையில் உள்ள பாதிப்புகளைக் குறைத்து , அவர்களுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறது. இது தவிர, மற்றவர்களுடன் பழகுவது எப்படி என்ற தன்மையை அவருக்கு புகட்டுகிறது, இதனால் சமூகம் சார்ந்த விஷயங்களை அவர்களால் கஷ்டமில்லாமல் கையாள முடிகிறது.