Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த ஒரு நட்ஸை உங்க குழந்தைக்கு தினமும் கொடுத்தீங்கனா? அவங்களுக்கு பரீட்சை பயமே இருக்காதாம்!
ஒவ்வொரு நாளும் சுமார் அரை கப் அக்ரூட் பருப்புகளை உட்கொண்ட மாண்வர்கள் சுய-அறிக்கை மனநல குறிகாட்டிகளில் முன்னேற்றம் காண்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள்
பரீட்சைகளைப் பற்றி கவலையாகவும் பதட்டமாகவும் உணர்கிறீர்களா? ஆம், எனில், இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இங்கே ஒரு சமீபத்திய ஆய்வில், உணவை மாற்றியமைப்பது மற்றும் உங்கள் தினசரி உணவவில் சில பொருட்களை சேர்ப்பது, இயற்கையாகவே மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கிறது. எந்த வயதானாலும் பரீட்சை என்றாலே பயம் மற்றும் பதட்டம் வந்துவிடும். ஆதலால், பரீட்சையின் போது மன அழுத்தம் தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த ஒரு பருப்பை தினமும் சாப்பிடுவது உங்கள் மூளையின் சக்தியை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மாணவர்கள் கல்வி பயிலும்போது, மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அதை குறைக்க உதவும் அதிசய நட்ஸ் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆய்வு
குறைந்தது 75 சதவீத மனநலக் கோளாறுகள் 24 வயதுக்குட்பட்டவர்களை பாதிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் இளங்கலை மாணவர்கள் குறிப்பாக மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாக்குகிறார்கள். நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வின்படி, அக்ரூட் பருப்புகள் குடல் அமைப்புகளை மேம்படுத்தவும், குறிப்பாக கல்வி அழுத்தத்தின் எதிர்மறையான விளைவுகளைத் தணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆய்வின் முடிவுகள் அக்ரூட் பருப்பு உங்கள் மூளை மற்றும் குடல் ஆரோக்கியத்துடன் இணைக்கும் ஆதாரங்களை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?
ஒவ்வொரு நாளும் சுமார் அரை கப் அக்ரூட் பருப்புகளை உட்கொண்ட மாண்வர்கள் சுய-அறிக்கை மனநல குறிகாட்டிகளில் முன்னேற்றம் காண்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள். வால்நட் நுகர்வோர் மேம்பட்ட வளர்சிதை மாற்றத்தையும், ஆரோக்கியமான நிம்மதியான தூக்கத்தையும் பெற்றுள்ளனர். கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்த மாணவர்கள் தேர்வுகளுக்கு முன்னதாகவே அதிகரித்த மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு நிலைகள் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், சிகிச்சை குழுவில் உள்ளவர்கள் அவ்வாறு இல்லை. வால்நட் உங்கள் மனச்சோர்வை குறைத்து, உங்களை நன்றாக செயல்பட வைக்கிறது.

ஆரோக்கியமான மூளை மற்றும் குடல்
வால்நட்ஸ் மூளை ஆரோக்கியத்திற்கு முதலிடம் வகிக்கிறது. வால்நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அத்துடன் மெலடோனின் (தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்), பாலிபினால்கள், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்திருப்பதாக முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது. இவை அனைத்தும் ஆரோக்கியமான மூளை மற்றும் குடலை ஊக்குவிக்கின்றன. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், பெரியவர்களில் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் அல்லது மேம்படுத்துவதற்கும் அக்ரூட் பருப்பு உதவுகிறது.

வால்நட்ஸின் நன்மைகள்
விலங்கு மற்றும் மனித ஆய்வுகளின் கணிசமான சான்றுகள், அக்ரூட் பருப்புகள் (ஒரு நாளைக்கு 1-2 அவுன்ஸ்) உணவில் உட்கொள்வது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, இதய நோய், மனச்சோர்வு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற பிற நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.

மனநலக் கோளாறுகள்
பல்கலைக்கழக மாணவர்களிடையே மனநலக் கோளாறுகள் ஏற்படுவது பொதுவானவை. அவை மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும். அழுத்தம் நிறைந்த காலங்களில் வால்நட்ஸ்களை உட்கொள்வது, பல்கலைக்கழக மாணவர்களின் மனநலம் மற்றும் பொது நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சிற்றுண்டியாகவும் இருக்கும். பல சமையல்களில் பல்துறை மூலப்பொருளாகவும், கல்வி அழுத்தத்தின் சில எதிர்மறையான விளைவுகளை எதிர்த்துப் போராடுவும் அக்ரூட் பருப்புகள் நமக்கு உதவுகின்றன.



Click it and Unblock the Notifications