Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தைகள் அறிகுறியற்ற நோயாளிகளாக உள்ளார்களாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் கொரோனா வைரஸை பல வாரங்கள் தொண்டை மற்றும் மூக்கில் சுமக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஆம், இது உண்மை தான்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் குறித்து புதிய விஷயங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவாறு உள்ளனர். அதே சமயம் உலகின் பல பகுதிகளிலும் இந்த கொடிய வைரஸிற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகள் கொரோனா வைரஸை பல வாரங்கள் தொண்டை மற்றும் மூக்கில் சுமக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஆம், இது உண்மை தான். இந்த காலத்தில் குழந்தைகளுக்கு எந்த அறிகுறிகளும் தெரியாமல் அறிகுறியற்றவர்களாக இருக்கலாம். இந்த கூற்று வாஷிங்டனின் குழந்தைகள் தேசிய மருத்துவமனையின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

விளையாட்டுக்களால் அதிகரிக்கும் ஆபத்து
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாவிட்டால், அவர்கள் சமூகத்தில் வைரஸை எளிதில் பரப்ப வாய்ப்புள்ளது. அதுவும் தொற்று ஏற்பட்டுள்ள குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடும் போது, அது அவர்களுக்கும் பரவி, அப்படியே அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கும் பரவி தீவிரமாகிறது. சராசரியாக, அறிகுறியற்ற குழந்தைகளிடம் 14 நாட்களில் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.

சோதனைக்கு பின் வழக்குகள் அதிகரிக்கக்கூடும்
கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென் கொரியாவில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கொரோனா நோய்த்தொற்று குழந்தைகளிடம் ரகசியமாக பரவி வருவதைக் காணலாம் என்று கூறுகின்றனர். இந்த ஆய்வில் 85 தொற்று ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படவில்லை. அதாவது அவர்கள் அறிகுறியற்றவர்களாக உள்ளனர் என்பது தெரிய வந்தது. மேலும் கோவிட்-19 குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒருவேளை இது மேலும் நடந்தால், சமூகத்தில் அறிகுறியற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

ஆராய்ச்சி மற்றும் புதிய வழிகாட்டுதல்கள்
அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு எதிர்ப்பு இருக்கும் போது, இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் சி.டி.சி ஒரு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, அறிகுறியற்ற நோயாளிகள் தேவையில்லாமல் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. அதுவும் அவர்கள் கொரோனா நோயாளியுடன் தொடர்பு கொள்ளும் வரை, சோதனை செய்யத் தேவையில்லை. ஆனால் சி.டி.சி-யின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் என்று கூறுகிறது.

அறிகுறியற்ற குழந்தைகள்
பிப்ரவரி 18 முதல் மார்ச் 31 வரை தென் கொரியாவில் 91 அறிகுறியற்ற, முன் நோய்க்குறி மற்றும் அறிகுறியுடைய குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்குமே சோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த குழந்தைகளில் சுமார் 20 குழந்தைகளுக்கு கொரோனாவின் அறிகுறிகள் தெரியவில்லை. இவர்கள் அறிகுறியற்றவர்களாவர். மேலும் 91 குழந்தைகளில் 18 பேருக்கு கொரோனா அறிகுறிகள் வெளிப்பட்டது. இந்த குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் தெரியவில்லை. ஆனால் அதன் பின்னர் அறிகுறிகள் வெளிப்பட்டது. அதே சமயம் மீதமுள்ள குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் தெளிவாக காணப்பட்டது. ஆனால் இந்த குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு, அடிவயிற்று வலி, வாசனை அல்லது சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

முடிவு
முதியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகத் தான் இருக்கும். எனவே கொரோனா பரவும் சமயத்தில் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிப்பதைத் தவிர்த்திடுங்கள். மேலும் குழந்தைகளுக்கு தனிமனித சுகாதாரத்தையும், சமூக இடைவெளியையும் கற்றுக் கொடுங்கள். இதனால் உங்கள் குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
