Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
பெற்றோர்களே! உங்க குழந்தைங்க பலூன் மாதிரி ஊதிகிட்டே போறாங்களா? அதுக்கு இவைதான் காரணமாம்!
சுற்றுச்சூழல் காரணிகள் குழந்தைகளின் உடல் பருமனை அதிகரிக்க பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது. கோவிட் -19 குழந்தைகளின் வாழ்க்கை முறையை மிக கடுமையாக பாதித்துள்ளது.
உடல் பருமன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்து வரும் ஓர் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய பங்குவகிக்கிறது. இந்த காரணிகளால் குழந்தைகள் அதிகரித்த எடை பிரச்சனையால் அவதியடைகிறார்கள். குழந்தைகளிடையே அதிகரிக்கும் இந்த உடல் பருமன் பிரச்சினை, விரைவிலையே அவர்களை நாள்பட்ட நோய்களுக்கு ஆளாக்கலாம். அதனால், இது உடனடி நடவடிக்கையுடன் தீர்க்கப்பட வேண்டும்.

உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிப்புக்குப் பின்னால் பல காரணிகள் இருந்தாலும், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள காரணிகள் முதன்மையான பங்களிப்பாகும். உங்கள் குழந்தை கடுமையான உடல்நல பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க அவர்களின் உடல் பருமனை குறைக்க நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.

சுற்றுச்சூழல் காரணிகள்
சுற்றுச்சூழல் காரணிகள் குழந்தைகளின் உடல் பருமனை அதிகரிக்க பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது. கோவிட் -19 குழந்தைகளின் வாழ்க்கை முறையை மிக கடுமையாக பாதித்துள்ளது. ஏனெனில் அந்த நேரத்தில் அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை, உடல் செயல்பாடுகளுடன் கூடிய விளையாட்டுகளை விளையாட முடியவில்லை. இதன் விளைவாக வீட்டிலேயே இருக்கும் பழக்கவழக்கங்கள் அதிகரித்தன. இந்த பழக்கத்தில் குழந்தைகள் பெரும்பாலும் செல்போன் மற்றும் வீடியோ கேம் உள்ளிட்ட உடல் உழைப்பற்ற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருந்தார்கள். இது அவர்களின் உடல் செயல்பாடுகளை முற்றிலும் குறைக்க வழிவகுத்தது. இதனால், பெரும்பாலான குழந்தைகள் உடல் பருமன் பிரச்சனையால் அவதியடைகிறார்கள்.

அதிகரித்த கலோரி நுகர்வு
கலோரி நுகர்வு மற்றும் ஆற்றல் பயன்பாட்டில் குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வு உள்ளது. தற்போது ஜங்க் ஃபுட், சர்க்கரை பானங்கள் மீதான மோகம் குழந்தைகளிடையே அதிகரித்துள்ளது. மேலும், வெளிப்புற விளையாட்டுகள் மீது ஆர்வம் குறைந்து ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். இந்த காரணிகளோடு, அதிகப்படியான உணவும் குழந்தைகளிடையே உடல் பருமனை கணிசமாக அதிகரிக்கச் செய்கின்றன.

நவீன உணவு தேர்வுகள்
பிஸியான கால அட்டவணைகளுக்கு மத்தியில் உடனடியாக கிடைப்பதால், பெற்றோர்கள் பாரம்பரிய உணவுகளிலிருந்து கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த நவீன உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மாறுகிறார்கள். இது ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக பாரம்பரிய தானியங்களை சாப்பிடுவது உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும், அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள்.

மரபணு காரணங்கள்
குழந்தைகளிடையே அதிகரிக்கும் உடல் பருமனுக்கு மரபணும் ஓர் காரணமாக இருக்கலாம். இந்தியர்களாகிய நாம் உடல் பருமனை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. உடல் ஒரு பினோடைபிக் சோம்பலை உணரும் போது, உட்கார்ந்த வாழ்க்கை முறையின் வடிவத்தில், உடல் பருமன் மாற்றம் வடிவம் பெறத் தொடங்குகிறது. இப்போதெல்லாம், இது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்கலாம். மேலும் வயது வரும் வரை உடல் பருமன் காத்திருக்காது.

நகரமயமாக்கல்
நகரமயமாக்கல் காரணமாக, குழந்தைகளும் உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு அதிகமாக மாறுகிறார்கள். பெற்றோர்கள் கூட ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வுகளை செய்கிறார்கள், இதனால் அவர்களும் பருமனாக இருக்கிறார்கள். இது ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளால் சாதாரணமாகக் கருதப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் பெற்றோரைப் போலவே ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைத் தேர்வு செய்கிறார்கள். இதனால், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்தான நோய்களை முன்கூட்டியே அவர்கள் பெறலாம்.



Click it and Unblock the Notifications