For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..!

சாணக்கியர் தான் அனுபவங்கள் மூலம் எழுதிய சாணக்கிய நீதியில் அவர் குழந்தை வளர்ப்பு பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

|

சாணக்கியரின் புத்திக்கூர்மை பற்றியும், அவரின் திறமைகள் பற்றியும் இந்தியா மட்டுமின்றி உலகமே நன்கு அறியும். அரசியல், பொருளாதாரம், வாழ்க்கைக்கல்வி என அனைத்திலும் வல்லவராக சாணக்கியர் இருந்தார் என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றே. இவை மட்டுமின்றி குழந்தை வளர்ப்பிலும் சாணக்கியர் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

Chanakya tells how to bring up Children

சாணக்கியர் தான் அனுபவங்கள் மூலம் எழுதிய சாணக்கிய நீதியில் அவர் குழந்தை வளர்ப்பு பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் ஒழுக்கம் மற்றும் திறமையுள்ள குழந்தைகள் மட்டுமே இந்த சமூகத்தில் நற்பெயருடன் தானும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்ற இயலும் என்று சாணக்கியர் கூறுகிறார். குழந்தை வளர்ப்பு பற்றி சாணக்கியர் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

இன்றைய தலைமுறையில் பதின்ம மற்றும் இருபது வயதுகளிலேயே ஆண் குழந்தைகளும் சரி, பெண் குழந்தைகளும் சரி பல்வேறு தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளில் அவர்களுக்கு எவ்வளவு பங்குள்ளதோ அதேயளவு அவர்களை சரியாக வளர்க்காத அவர்களின் பெற்றோர்களுக்கும் பங்குள்ளது. அக்கறையும், பாசமும் இன்றி வளர்க்கப்படும் குழந்தைகள் வருங்காலத்தில் அவர்களின் எதிர்காலத்தை மட்டுமின்றி பலரின் எதிர்காலத்தையும் சிதைப்பவர்களாக மாறுகிறார்கள். இதற்கு பல உதாரணங்களை நாம் சமீபத்தில் பார்த்து கொண்டிருக்கிறோம். குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அறிவுரை 1

அறிவுரை 1

புத்திசாலியான பெற்றோர்கள் எப்பொழுதும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவார்கள். நல்ல கல்விதான் ஒருவர் சமூகத்தில் சிறந்த வாழ்க்கையை வாழ அடிப்படையாகும். இது பெற்றோர்களுக்கும் நிம்மதியையும், பெருமையையும் ஏற்படுத்தும்.

அறிவுரை 2

அறிவுரை 2

குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்காத பெற்றோர்கள்தான் அவர்களின் முதல் எதிரி என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகைய குழந்தைகள் எதார்த்த வாழ்க்கையை வாழ தொடங்கும்போது பல்வேறு பலவீனங்களை உணருவார்கள். இவர்களின் தன்னம்பிக்கை சிதைந்து எப்பொழுதும் குருகிய மனநிலையுடனேயே இருப்பார்கள்.

MOST READ: ஒருவரின் காதை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் ரகசியம் தெரியுமா?

அறிவுரை 3

அறிவுரை 3

குழந்தைகளை அதிகம் கொஞ்சுவதும் தவறு அதிகம் அடிப்பதும் தவறு. ஏனெனில் இரண்டுமே அவர்களின் நடத்தையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அளவான கொஞ்சலும், அளவான கண்டிப்புமே உங்கள் குழந்தையை நல்லவர்களாக வளர்க்க அடிப்படையாகும்.

அறிவுரை 4

அறிவுரை 4

ஒரு நல்ல குழந்தை மோசமான நூறு மோசமான குழந்தைகளை விட மேலானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை குழந்தைகள் வளர்த்தீர்கள் என்பது முக்கியமல்ல எப்படிப்பட்ட குழந்தைகளை வளர்க்கிறீர்கள் என்பதே முக்கியம். நல்ல குழந்தைகள் ஒருபோதும் தங்கள் பெற்றோரை தலைகுனிய விடமாட்டார்கள், அவர்களின் இறுதிக்காலம் வரை அவர்களுக்கு அன்பாகவும், ஆறுதலாகவும் இருப்பார்கள். மோசமான குழந்தைகள் இதற்கு நேரெதிராக இருப்பார்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல உங்களின் கடைசிகாலம் கூட குழந்தைகளை நீங்கள் வளர்க்கும் முறையில்தான் இருக்கிறது .

அறிவுரை 5

அறிவுரை 5

குழந்தைகளின் வயதுக்கேற்ப அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்று தேவைப்படும். குழந்தையின் 10 வயது வரை அவர்களிடம் அன்பாக இருங்கள், அதற்கு பின் 16 வயது வரை கண்டிப்புடன் இருங்கள், 16 வயதிற்கு பிறகு அவர்களுடன் நண்பர்களாக பழகுங்கள். அவர்களுடன் அமர்ந்து அவர்களின் தேவைகள் என்ன அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

அறிவுரை 6

அறிவுரை 6

முழுமையான கல்வியும், ஒழுக்கமும் இல்லாத குழந்தைகளை வளர்ப்பதால் உங்களுக்கும் சரி, இந்த சமூகத்திற்கும் சரி எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. யாருக்கும் எந்த உபயோகமும் இல்லாத சோம்பேறி குழந்தை இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார்.

MOST READ: மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ...!

அறிவுரை 7

அறிவுரை 7

ஆண் குழந்தை வளர்ப்பை பொறுத்தவரையில் அவர்களை புத்திசாலிகளாய் வளர்ப்பதை காட்டிலும் ஒழுக்கமானவராக வளர்க்க முயற்சிக்க வேண்டும். பெண்களை எப்பொழுதும் மதிக்கவும், அவர்களை துன்புறுத்த கூடாதெனவும் சொல்லி வளர்க்கவேண்டும். ஏனெனில் ஒரு ஆணால் பெண் துன்புறுதப்படும் போது ஒரு ஆணாக அவர்கள் தோற்பதுடன் ஒரு பெற்றோராக நீங்களும் தோற்கிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya tells how to bring up Children

After going through Chanakya Niti we found many ways shown by Chanakya for the purpose of bringing up children.
Story first published: Thursday, March 21, 2019, 17:12 [IST]
Desktop Bottom Promotion