For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமைக்காத பச்சை பூண்டை குழந்தைகளுக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

|

நம் குழந்தைகள் தான் நமது வாழ்க்கை. அவர்கள் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன குறும்பும், சிரிப்பும் தான் நம் வாழ்வை வண்ணமயமாக்குகிறது. அவர்கள் முகத்தில் உதிக்கும் சந்தோஷம் தான் நம் மனதில் எழும் சந்தோஷமாக அமைகிறது. இந்த தலைமுறை குழந்தைகள் எல்லாவற்றிலும் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும் இருக்கின்றனர். அவர்கள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். நிறைய செயல்படுத்துகிறார்கள். வேகமாக வளரவும் செய்கின்றனர். அவர்களின் குழந்தை பருவம் அப்படியே மாறிவிடுகின்றன.

நிறைய அம்மாமார்கள் தங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவளிப்பதிலும், பாடம் சொல்லிக் கொடுப்பதிலும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் குழந்தைகள் அடிமையாவதை தடுப்பதிலும் தங்கள் முழு கவனத்தை செலுத்துகின்றனர். ஏனெனில் இவைகள் அனைத்தும் முக்கியமான விஷயங்கள். ஆனால் உங்கள் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்.

Is Raw Garlic Safe For Kids?

நோய்வாய்ப்படுதல் மற்றும் தொற்றுக்கள் அனைத்தும் குழந்தைகளை அடிக்கடி பிடித்து கொள்ளும். நீங்கள் ஒவ்வொரு தடவை மருத்துவரை அணுகும் போதும் எடுத்து கொள்ளும் ஆன்டி பயோடிக்ஸ் குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். இப்படி அடிக்கடி வரும் சின்ன சின்ன உபாதைகளுக்கு மருந்து எடுக்கும் போது அவையே பக்க விளைவுகளை உண்டு பண்ணவும் வாய்ப்பிருக்கிறது.

சில தாய்மார்கள் ஆயுர்வேத முறையை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு பின்பற்றுகிறார்கள். இந்த ஆயுர்வேத முறைகளால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. ஆனால் இதை தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெற்று குழந்தைகளுக்கு செய்வது நல்லது. ஏனெனில் சில ஆயுர்வேத முறைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது கிடையாது. பெரியவர்கள் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே எதையும் தக்க ஆலோசனை பெற்று செய்வது நல்லது.

இந்த ஆயுர்வேத பொருட்கள் நமக்கு ஏற்படும் பல உடல் உபாதைகளை போக்க வல்லது. இதற்கு நீங்கள் மிகவும் மெனக்கெட வேண்டாம். நம் சமையலறை பொருட்களே போதும். இந்த உடல் உபாதைகளை நீக்கிவிடும். அவற்றுள் சிறந்த ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு. இந்த பூண்டில் ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பேஸ்மோடிக் போன்ற சக்தி வாய்ந்த பொருட்கள் உள்ளன. இப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் வாய்ந்த பூண்டை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதா பாதுகாப்பானதா என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Raw Garlic Safe For Kids?

Ayurvedic remedies are practised at home without supervision of an expert. Also, some remedies which are effective on adults may not be safe for the kids. Therefore, it is important to research properly or ask experts in the field about various ayurvedic remedies which are safe for kids. One such ingredient is garlic.
Desktop Bottom Promotion