For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பான் குழந்தைகள் உலகின் ஆரோக்கியமானவர்களாக திகழ்வதன் இரகசியங்கள் இதுதானாம்!

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க ஜப்பானில் கடைபிடிக்கும் உணவு பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நாம் அனைவரும் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க விரும்புகிறோம். அடுத்த தலைமுறை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஊட்டசத்து என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அதிகபடியானோர் குழந்தைகளுக்கு எதை தருவது, எப்படி தருவது என்ற குழப்பத்தில் உள்ளனர். அவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜப்பான் ஸ்டைல்

ஜப்பான் ஸ்டைல்

ஜப்பான் ஸ்டைல் உணவுமுறை மிகவும் உயர்தரமானது மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்கள் உடலுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்தால் இயற்கையாகவே உங்களுக்கு அதிக பசி ஏற்படாது.

ஆனால் நீங்கள் ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பதற்கு கடற்பாசி, சுஷி மற்றும் டோஃபு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டியதில்லை , உங்கள் குடும்ப உணவு பழக்கங்களை இன்னும் ஆரோக்கியமான முறையில் மாற்றிக் கொள்ளுங்கள் அது போதும்.

தாவர உணவுகள்

தாவர உணவுகள்

தாவர அடிப்படையிலான உணவுகளான, பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், இதய ஆரோக்கியத்திற்காக ஒமேகா 3 நிறைந்த மீன்கள், மற்றும் குறைந்த அளவு சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றால் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்ளுங்கள். இந்த உணவு முறை கலோரிகளில் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் எளிதில் கிடைக்கிறது.

இது கூடுதல் உடல் எடை அதிகரிப்பு, மற்றும் உடல்நல கோளாறுகளில் இருந்து காப்பாற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ உதவுகிறது.

அரிசி உணவு

அரிசி உணவு

ஜப்பான் மக்கள் பாஸ்தா மற்றும் ரொட்டியை விட அரிசியை தான் அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறிதாக அரைக்கப்பட்ட அரிசி மற்றும் பிரவுன் அரிசி ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்த அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தில் அதிக அளவு நீர் சத்து இருக்கிறது. இது வயிற்றை நிரப்புவதற்காக மட்டும் பயன்படுவதில்லை. இது கலோரிகளை குறைக்கிறது.

அசத்தலான விருந்து

அசத்தலான விருந்து

உங்கள் பிள்ளைகளுக்கு அவ்வப்போது சில விருந்துகளையும், அசத்தலான சிற்றுண்டிகளையோ விரும்பி சாப்பிடும் படி கொடுங்கள். ஆனால் சரியான அளவு ஊட்டசத்துகளில் கொடுங்கள். உங்கள் குழந்தை நன்றாக சாப்பிட நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நிம்மதியான மனநிலையுடன் இருங்கள், அதனால் உங்கள் பிள்ளை ஓய்வெடுக்கவும் வசதியாக உண்ணவும் முடியும்.

ஒன்றாக சாப்பிடுதல்

ஒன்றாக சாப்பிடுதல்

வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சாப்பிடுவதை குழந்தைகள் விரும்புகிறார்கள். நீங்கள் பிஸியாக இருந்தாலும்கூட, ஒரு குறிப்பிட்ட உணவு நேரத்தை அமைத்துக்கொள்வதால், உங்கள் பிள்ளையுடன் தினமும் ஒரு நேரமாவது உட்கார்ந்து சாப்பிடலாம்.

குழந்தைகளோடு அமர்ந்து உணவு உண்பது, பெற்றோர்களின் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

புதிய உணவுகள்

புதிய உணவுகள்

பிள்ளைகளின் உணவுப் பழக்கம் மற்றும் விருப்பமின்மை காலப்போக்கில் மாறுபடும், பெற்றோர்கள் அவற்றை ஆரோக்கியமான முறையில் மெதுவாக மாற்ற முடியும், நீங்கள் அவர்களுக்கு நிறைய வகையான உணவுகளை கொடுத்து பழக்கலாம்.

புதிய புதிய ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், அவர்களுக்கு அதிகமான சுவைகளை உணரவைக்கும். இது அவர்கள் வளர்ந்த பின்னும் கூட எந்த ஒரு குறிப்பிட்ட சுவையுள்ள உணவுகளை வெறுக்காமல் சாப்பிட உதவுகிறது. ஜாப்பானீய வழக்கப்படி புதிய உணவுகள், ஒருவரது வாழ்நாளை நீடிக்கிறது என கூறுகின்றனர்.

தட்டுகளை மாற்றுங்கள்

தட்டுகளை மாற்றுங்கள்

பெரிய பெரிய தட்டுகளை தவிர்த்து, சிறிய தட்டுகளில் குழந்தைகளுக்கு உணவை கொடுங்கள். சாலட்டுகள், பிரட்டுகள் சாப்பிட என்று வேறு வேறு தட்டுகளை பயன்படுத்துங்கள்.

மேலும் சூப்கள் குடிப்பதற்கு பவுல்களை பயன்படுத்துங்கள். பவுல்கள் 100 மில்லி அல்லது 200 மில்லி அளவு பிடிப்பதாக இருக்கட்டும்.

துள்ளிக்குதிக்க விடுங்கள்

துள்ளிக்குதிக்க விடுங்கள்

குழந்தைகள் தங்கள் வீடியோ கேம்கள் மற்றும் பிற தொழில்நுட்ப தூண்டுதல்களில் மாட்டிகொண்டு வீட்டிலேயே அடைந்து கிடக்க வழிசெய்யாதீர்கள், குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 60 நிமிடங்களுக்கு உடல் செயல்பாடு தேவைப்படுகிறது.

அவர்களை வெளியில் ஒரு பாதுகாப்பான சூழலில் விளையாட விடுங்கள். ஜாப்பான் குழந்தைகளில் மிக அதிகமானோர் பள்ளிகளுக்கு நடந்து அல்லது சைக்கிளில் தான் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் தான் முன்னிலையில் உள்ள பல நாடுகளின் குழந்தைகளை காட்டிலும் ஜப்பான் குழந்தைகள் மிக குறைந்த அளவே அதிக உடல் எடை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளும் சமைக்கட்டும்

குழந்தைகளும் சமைக்கட்டும்

குழந்தைகள் உணவுகளை வெறுக்காமல் சாப்பிட, வார இறுதி நாட்களில் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பமாக சமையுங்கள். இது அவர்களுக்கு மன மகிழ்ச்சியையும், சுவைகளை உணரும் திறனையும், தான் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தையும் தரும். இதனால் அவர்கள் உணவை அடம்பிடித்து சாப்பிடமால், மகிழ்ச்சியாக சாப்பிட பழகிக்கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Know Health Secrets of Japanese Kids

here are the some tips for parenting a healthy child
Story first published: Friday, May 19, 2017, 12:24 [IST]
Desktop Bottom Promotion