For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகள்களுக்கு அம்மாக்கள் கற்றுக் கொண்டுக்க வேண்டிய முக்கியமான 8 விஷயங்கள்!

பெண் என்பவள் தான் ஒரு குடும்பத்தின் ஆணிவேர். அவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான 8 விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

குடும்ப தலைவன் என்பவர் ஒரு வீடு மாதிரி. அவனுள் தான் ஒரு குடும்பம் அடங்குகிறது. குடும்ப தலைவி என்பவள் அந்த வீட்டின் அஸ்திவாரம் மாதிரி, அவளால் தான் அந்த குடும்பமே வலுவாக இருக்கிறது. பெண் என்ற ஆணிவேர் தான் குடும்பத்தின் பலமே. அது வலுவிழந்து போனால் குடும்பம் சிதறிவிடும்.

அந்த வகையில் ஒரு அடுத்து குடும்பத்தை பேணி வளர்க்க போகும் மகளுக்கு அம்மாக்கள் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான எட்டு விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழக்க வழக்கம்!

பழக்க வழக்கம்!

யாருடன் எப்படி பழக வேண்டும். ஒவ்வொரு உறவிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். நல்ல பண்புகள், நற்குணங்கள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.

எப்படி பேச வேண்டும்!

எப்படி பேச வேண்டும்!

பெரியவர்களிடம் எப்படி பேச வேண்டும், சிறியவர்களிடம் எப்படி பேச வேண்டும், ஆசிரியர்களிடம் எப்படி பேச வேண்டும், வீட்டிற்கு வரும் புதிய நபர்களுடன் எப்படி பேச வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும்.

சமூக நடத்தை!

சமூக நடத்தை!

வீட்டில் எப்படி இருந்தாலும், சமூகத்தில் நால்வர் மத்தியில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். எதை செய்தால் இந்த சமூகம் எப்படி எதிரொலிக்கும், எப்படிப்பட்ட கருத்தை, செயலை இந்த சமூகம் எப்படி எடுத்துக் கொள்ளும். நல்லதை கூட எப்படி செய்ய வேண்டும், கெட்டதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும்.

காதல்!

காதல்!

முதிர்ச்சியான காதல் என்ன? காதல் என்றால் முதலில் என்ன? எல்லா உறவிலும் காதல் இருக்கிறது. பதின் வயதில் வரும் ஆசைக்கும், விருப்பத்திற்கும், இச்சைக்கும், காதலுக்கும் மத்தியிலான வேறுபாடுகள் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்.

மதிப்பு!

மதிப்பு!

சுய மதிப்பு பற்றி மகள்களுக்கு அம்மாக்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆணுக்கு இணையான, அதற்கும் மேலான மதிப்பு பெற்றவர்கள் பெண்கள் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த மதிப்பை எப்படி காப்பாற்ற வேண்டும். பெண்மைக்கான மரியாதையை எப்படி பெற வேண்டும், தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

கனவுகள்!

கனவுகள்!

கனவுகள் ஆண்களுக்கு மட்டுமானதல்ல. கனவு என்பது பொதுவுடமை, அதை யார் வேண்டுமானாலும் கையாளலாம், எட்டிப் பிடிக்கலாம் என்பதை கற்பித்து. அவர்களது சொந்த கனவுகளில் வாழ வழியமைத்து தர வேண்டும்.

உறவுகள்!

உறவுகள்!

இன்று பெரும்பாலான குடும்பங்களில் ஒரு பிள்ளை முறை தான் இருக்கிறது. ஆண் / பெண் குழந்தை தான் இருக்கிறார்கள். இதனால் உறவுகள் பற்றி புரிதல் அவர்களுக்கு பெரிதாய் இருப்பதில்லை. உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்து போவது எப்படி, உறவுகளின் மதிப்பு போன்றவை அவர்கள் அறிய வாய்ப்பு இல்லாமல் போவதால், திருமணத்திற்கு பிந்தைய உறவில் அவர்கள் சற்று தடுமாறுகின்றனர்.

எனவே, அம்மாக்கள் உறவுகளுடன் எப்படி சேர்ந்து வாழ்வது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். இது ஆண், பெண் இருவருக்கும் போது!

மேலாண்மை!

மேலாண்மை!

சமையல் என்பது மட்டுமல்ல. வீட்டு வேலைகள், மேலாண்மை, சேமிப்பு, குழந்தை வளர்ப்பு போன்ற வீட்டு மேலானை சமாச்சாரங்களை கற்று கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Mothers Should Teach Their Daughters

Things Mothers Should Teach Their Daughters
Desktop Bottom Promotion