For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயதிற்குள் தந்தையாகப் போகின்றவர்களுக்கான சில அறிவுரை!

By Batri Krishnan
|

இன்றைய சமூக சூழ்நிலைகளில் உங்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். சில ஆண்டுகள் கழித்து நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினரை கூடுதலாக எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் உற்சாகமாகவும் ஆனால் படபடப்புடனும் காணப்படுவீர்கள். ஏனெனில் உங்களுக்கு குழந்தையை வளர்க்கும் அனுபவம் கிடையாது.

எனவே நீங்கள் அந்த நேரத்தில் ஒரு தவறும் செய்யக்கூடாது என நினைத்து கவலைப்படலாம். இதைத் தவிர உங்களுக்கு ஒரு பிறந்த குழந்தையை வளர்க்க ஆகும் செலவைப் பற்றியும் கவலைகள் இருக்கலாம். பெற்றோரான பின்னர் நீங்கள் விரும்பும் விஷயங்களை செய்ய போதுமான நேரம் கிடைக்குமோ என்றும் உங்களுக்கு கவலை இருக்கலாம். உங்களுக்காகவே நாங்கள் சில செய்திகளை பகிர்ந்து கொள்கின்றோம்.

Parenting Advice For Fathers Below The Age Of 30

அனைத்து பெற்றோர்களும் குழந்தையை வளர்க்கும் போது, சில பல தவறுகளைச் செய்கின்றார்கள். அவற்றில் சில அபத்தமானது மற்றும் சில மன்னிக்க முடியாதது. ஆனால், எல்லா பெற்றோர்களும் தவறு செய்கிறார்கள். அதில் எள் அளவும் சந்தேகமில்லை. பெற்றோராக இருப்பது ஒரு நீண்ட கால நடைமுறை.

நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் ஒரு சிறந்த மனிதர்களாக மாறுகின்றார்கள் மற்றும் அவர்களால் மாசற்ற அன்பை பொழிய முடிகின்றது. இங்கே அடங்கியுள்ள ஒரு தந்திரம் என்னவெனில், உங்களுடைய குழந்தைக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் தவறுகளைக் கண்டுபிடித்து அதை தவிர்க்கப் பாருங்கள்.

நீங்கள் இங்கே இந்த கட்டுரையை படிக்க ஆரம்பிக்கின்றீர்கள். இது ஒரு நல்ல தொடக்கம். இது உங்களின் கற்றுக் கொள்ளும் விருப்பத்தை காட்டுகின்றது. மேழும் நீங்கள் ஒரு சரியான பாதையில் செல்கின்றீர்கள். நாங்கள் உங்களுக்காக கீழே மூன்று முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளோம்.

கவனமாக ஒரு வழிகாட்டியை தேர்வு செய்யுங்கள்:

உங்கள் தந்தை, தாத்தா, மாமா அல்லது சகோதரர்கள் ஒருவேளை இந்த விஷயத்தில் உங்களை விட அதிக அனுபவம் கொண்டவர்களாக இருக்கலாம். எனவே அவர்களின் வழிகாட்டுதலைக் கேட்டுப் பெறுங்கள். நீங்கள் உங்களுடைய வழிகாட்டியை தேர்வு செய்யும் பொழுது, உங்களுடைய வசதியை மட்டும் கருதாமல், உங்களின் குழந்தையுடைய எதிர்காலத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான குழந்தையை கொண்டவர்களை மட்டுமே உங்களுடைய வழிகாட்டியாக தேர்வு செய்யுங்கள். ஒரு நல்ல வழிகாட்டியின் அறிகுறிகள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். உங்களுடைய வழிகாட்டி தனது குழந்தையின் முன் புகைப்பிடிக்கின்றாரா? அல்லது தனது குழந்தையின் அருகிலேயே மது அருந்துகின்றாரா? தனது குழந்தையின் முன்பாகவே அவரது மனைவியுடன் சண்டையிடுகின்றாரா? அவர் தனது குழந்தையின் நலனை விட தன்னுடைய சொந்த மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கின்றாரா?

நீங்களே இந்த கேள்விகளை கேட்டு, உங்களின் பெற்றோர் முன்மாதிரியாக யாரை தேர்வு செய்யப் போகின்றீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

போதுமான நேரம் ஒதுக்குங்கள்:

ஆமாம், அனைத்து பெற்றோர்களும் தங்களின் சொந்த வேலைகளை சிறிது தள்ளி வைத்து விட்டு தங்களின் குழந்தையின் தேவைகளை கவனிக்க வேண்டும். எனினும், பெற்றோர்கள் எப்போதாவது தளர்ந்து போனால் அவர்கள் இறுதியில் தங்களுடைய குழந்தையை அடித்து விடுகின்றார்கள். அது குழந்தைக்கு பயங்கரமான அனுபவமாக இருக்கும்.

அதன் பின் குழந்தைகள் உங்களை நோக்கி வரமால் எங்கோ ஒடி ஒளிந்து கொள்வார்கள். எனவே நீங்கள் போதுமான அளவிற்கு உறங்குங்கள். சத்தான உணவை சாப்பிட மறவாதீர்கள். மற்றும் நீங்கள் விரும்பும் விஷயங்களை செய்ய ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஒதுக்குங்கள்.

நீங்கள் யார் என்பதை மறவாதீர்கள். உங்களை ஆரோக்கியமாகவும் மற்றும் விவேகத்துடனும் வைத்துக் கொண்டு உங்களை மேம்படுத்தப் பாருங்கள். அதற்கு பிறகு உங்கள் குழந்தை உங்களை ஒரு முன்மாதிரியாக பார்க்கத் தொடங்கும்.

நிதித் தேவையை சரியாக திட்டமிடுங்கள்:

பெற்றோராக இருப்பது ஒரு செலவு பிடிக்கும் விஷயம் என்பதை நீங்கள் ஏற்கனவே யூகித்திருப்பீர்கள். எனினும் ஒரு சரியான அப்பாவாக இருப்பது வெகுமதி நிறைந்த மற்றும் இன்பமயமான வாழ்க்கை அனுபவமாக இருக்கும்.

முன்னதாகவே அடுத்த 7 நாட்கள், வாரங்கள் மற்றும் வரப்போகும் ஆண்டுகளுக்கான உங்கள் நிதித் தேவையை சரியாக திட்டமிடுங்கள். மாதந்தோறும் ஒரு சிறிய அளவு பணத்தை சேமித்து வந்தால் அது எதிர்பாராத செலவுகளை சமாளிக்க உங்களுக்கு கைகொடுக்கும். அவசரத் தேவைக்கான பணத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுக்கு அதைத் தொடும் ஆசை வந்தாலும் அதிலிருந்து தள்ளியே இருங்கள். ஏனெனில் அது உங்களின் அவசரத் தேவைக்கானது.

உங்கள் குழந்தையின் அனைத்து விதமன தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டாம். எது அவசியமானது மற்றும் எது அற்பமானது என்பதை அறிந்து உங்களுடைய குழந்தையின் தேவைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் தீர்த்து வையுங்கள். உங்கள் குழந்தையின் அனைத்து விதமான தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால், அது உங்களுடைய குழந்தை செல்லக் குழந்தையாக வழிவகுக்கும். நீங்கள் அவ்வாறு செய்தால் அது உங்களின் பர்ஸை பதம் பார்த்து விடும். இறுதியாக குறைந்தது சில நூறு ருபாயகளையாவது தினந்தோறும் சேமிக்க மறவாதீர்கள்.

ஒரு சில நூறு ரூபாய்கள் இன்று அற்பமாகத் தெரியும். ஆனால் பல நூறு ருபாய்கள் சேர்ந்து தான் ஒரு பெரிய அளவிலான தொகையை உருவாக்குகின்றது என்பதை நீங்கள் மறவாதீர்கள்.

English summary

Parenting Advice For Fathers Below The Age Of 30

Take a look at the best parenting advise to be given to fathers who are below the age of 30. Read on to know more.
Desktop Bottom Promotion