பெற்றோரின் வாக்குவாதம் எப்படி குழந்தையின் மூளையை பாதிக்கும்?

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

உங்கள் குழந்தையின் ஆளுமையும், நடத்தையும், உங்கள் எண்ணங்கள் மற்றும் உங்கள் துணையை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதை பொறுத்து தான் அமையும். நாம் நம் துணையுடன் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து தான் நம் குழந்தைகள் பொதுவாக கற்றுக் கொள்கிறார்கள். சண்டைகளும், வாக்குவாதங்களும் ஒவ்வொரு உறவின் அங்கம் என்பது நூறு சதவீத உண்மையே. அதுவும் கணவன் மனைவி என வந்துவிட்டால், இத்தகைய வாக்குவாதங்கள் அன்றாட அடிப்படையில் கூட நடைபெறலாம்.

சரி, இப்போது விஷயம் என்னவென்றால், உங்கள் வாக்குவாதத்தை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பது தான். நீங்கள் உங்கள் துணையுடன் ஆரோக்கியமான வாக்குவாதத்தில் ஈடுபட்டால், உங்கள் குழந்தையும் அதிலிருந்து நல்லதைக் கற்றுக் கொள்ளும். உங்கள் குழந்தையின் மூளைக்கு நீங்களே சிறந்த பயிற்சியாளர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். செயல்கள் மற்றும் நடத்தைகளைப் பார்த்து தான் இளம் தலைமுறையினரின் மனம் கற்றுக் கொள்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சில காரணங்களைக் காட்டி நீங்கள் உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தால், அதிலிருந்து உங்கள் குழந்தையின் மூளையும் ஒரு தீர்மானத்தை எடுக்க முயற்சி செய்யும். அதனால் எப்போதும் உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களின் மீது கவனம் தேவை. நீங்கள் உங்கள் துணையை பார்த்து கத்திக் கொண்டே மட்டும் இருந்தால், அது உங்கள் குடும்பத்திற்கு நன்மையை அளிக்க போவதில்லை. அதனால் உங்கள் வாக்குவாதத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். இதனால் புதிய விஷயங்களை நேர்மறையான வழியில் உங்கள் குழந்தை கற்றுக் கொள்ளும்.

உங்கள் துணையுடனான வாக்குவாதங்கள் உங்கள் குழந்தையின் மூளையை நல்ல விதமாகவோ அல்லது கெட்ட விதமாகவோ மாற்றி விடும். அதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாக்குவாதங்களை எப்படி கையாளுவது?

வாக்குவாதங்களை எப்படி கையாளுவது?

குழந்தையின் முன்பு வாக்குவாதம் செய்வது பிரச்சனையல்ல. ஆனால் எப்படி செய்கிறோம் என்பது தான் அவர்கள் மனதில் தங்கி, பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெற்றோர்கள் ஆரோக்கியமான வாக்குவாதத்தில் ஈடுபட்டால், குழந்தையின் மூளை விஷயங்களை ஆய்வு செய்து நல்ல தீர்மானத்தை எடுக்கும்.

குழந்தையின் மூளையை வாக்குவாதங்கள் எப்படி பாதிக்கிறது?

குழந்தையின் மூளையை வாக்குவாதங்கள் எப்படி பாதிக்கிறது?

உங்கள் துணையுடனான ஆரோக்கியமான வாக்குவாதங்களினால் உங்கள் குழந்தை புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும். நீங்கள் உங்கள் கணவனோடு வாக்குவாதத்தில் ஈடுபடும் போது உங்கள் இருவருடனும் சேர்ந்து, உங்கள் குழந்தையின் மனதும் சிந்திக்கவும், செயல்படவும் செய்யும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தையின் முன்பு எப்படி வாக்குவாதம் செய்வது?

குழந்தையின் முன்பு எப்படி வாக்குவாதம் செய்வது?

உங்கள் துணை புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற வாக்குவாதத்தில் நீங்கள் ஈடுபட்டால், புகைப்பிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை அவருக்கு புரிய வையுங்கள். அப்படி செய்யும் போது இந்த வாக்குவாதம் நல்லதற்காக தான் என உங்கள் குழந்தைப் புரிந்து கொள்ளும். அதனால் கெட்ட விஷயங்களில் இருந்து அது எப்போதுமே தள்ளி நிற்கும். மாறாக, நீங்கள் உங்கள் கணவனை பார்த்து கூச்சலிட்டு, அவருக்கு மன ரீதியான தொந்தரவை அளித்தால், உங்கள் கணவனோடு உங்கள் குழந்தையும் கூட உங்கள் பேச்சைக் கேட்காது.

உங்கள் குழந்தையின் மூளை எப்படி மாற்றமடையும்?

உங்கள் குழந்தையின் மூளை எப்படி மாற்றமடையும்?

குழந்தையின் மூளை ஒரு ஈரமான மண்ணை போன்றது. அதனை எப்படி வேண்டுமானாலும் நாம் வடிவமைக்கலாம். அது அதற்கேற்ப உருமாறும். இனி உங்கள் குழந்தையின் மூளையை உருவாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் குழந்தை உங்கள் நடவடிக்கைகளால் அல்லாமல், உங்கள் செயல்களால் தான் கற்றுக் கொள்கிறார்கள். உங்களை அவர்கள் எப்போதும் பார்த்தபடியே வளர்கிறார்கள். அதனால் தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் மூளையை நீங்கள் தான் உருமாற்றுகிறீர்கள்.

கெட்ட அல்லது ஆரோக்கியமற்ற வாக்குவாதங்கள்

கெட்ட அல்லது ஆரோக்கியமற்ற வாக்குவாதங்கள்

மோசமான ஒரு சண்டையோ அல்லது ஆரோக்கியமற்ற ஒரு வாக்குவாதமோ உங்கள் குழந்தையின் மூளையை மாற்றும். நீங்கள் நல்ல பெற்றோராக இருந்தாலும் கூட, உங்களை அறியாமலேயே அப்பழுக்கற்ற சிந்தனையோடு உள்ள உங்கள் குழந்தையின் மூளையை மிகவும் மூர்கத்தனமாக மாற்றிவிடக் கூடும். உங்கள் குழந்தையின் எண்ணங்கள் ஆரோக்கியமற்றதாகவும், நாகரீகமற்றதாகவும் உருமாறக்கூடும். அவர்கள் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திக்க தொடங்குவார்கள். அதற்கேற்ப அவர்களின் மூளை உருமாறியிருக்கும்.

பதற்றம் அல்லது மன அழுத்தம் ஏற்படக் கூடிய இடர்பாடு

பதற்றம் அல்லது மன அழுத்தம் ஏற்படக் கூடிய இடர்பாடு

பயமுறுத்தப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனாலும் கூட எப்போதுமே பதற்றம், பயம் மற்றும் மன அழுத்தம் கொண்டவனாக மாறிவிடும். ஆரோக்கியமற்ற வாக்குவாதங்கள் தலைகீழ் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். உங்கள் குழந்தை மிகவும் மூர்க்கத்தனமாக, பொறுமையற்று, எளிதில் கோபப்படக்கூடிய மற்றும் மரியாதையற்ற குழந்தையாக எளிதில் மாறக்கூடும்.

உங்கள் குழந்தைக்கு காரணங்கள் தேவை

உங்கள் குழந்தைக்கு காரணங்கள் தேவை

உங்கள் கணவன் நல்லவராக மாற அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அதை அவர் புரிந்து கொள்ளும் வகையில் சரியான வழியில் இருக்க வேண்டும். கோபப்படாமல் காரணங்களை எடுத்துக் கூறி, ஆரோக்கியமான கலந்துரையாடலாக மாற்றுங்கள். உங்களை உங்கள் குழந்தை கவனிக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் வாக்குவாதங்களுக்கான காரணங்களையும், அவர்கள் கவனிக்கிறார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

உங்கள் குழந்தையை சந்தோஷமான குழந்தையாக்குங்கள்

உங்கள் குழந்தையை சந்தோஷமான குழந்தையாக்குங்கள்

தவறாக உருமாறிய பிறகு, வளர்ந்த ஒருவரின் மூளையை மாற்றுவது எளிதல்ல. இதற்கு நாம் பெற்றோரை தான் குறைக் கூற வேண்டும். அதனால் உங்கள் துணையுடனான உங்கள் வாக்குவாதங்களை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமாகும். இதனால் உங்கள் குழந்தையின் மூளையும் நல்ல வழியில் உருமாறும். இது அவர்கள் வளர்ந்த பிறகு, அவர்களை அறிவாளியாகவும் சந்தோஷமானவர்களாகவும் மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How Parent's Argument Can Change A Child's Brain

    Argument can affect your childs brain and can be bad for your child. Read on to know how your argument with your partner can change your child's brain for the bad or for the good.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more