For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தைகள் எப்போது தூங்குகிறார்கள் ?

|

சமீபத்திய ஆய்வு ஒன்று குழந்தைகள் 9 மணிக்கு முன்னதாக தூங்கச் சென்றால் உடல் பருமன் அதிகரிக்காது என்று கூறுகின்றது.

குழந்தைகளுக்கு தூங்கும் நேரத்தை திட்டமிட்டு சரியாக செய்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை எனவும் இந்த ஆய்வு கூறுகின்றது. உடல் பருமன் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு நோய்களையும் தருகிறது. இதனால் ஆயுள் முழுக்க நோயினால் அவதிப்படும் நிலைமையும் வந்துவிடும்.

early bed time may prevent obesity for children

எப்படி ஆரோக்கியமான உணவுகளை தர வேண்டுமோ, அதே அளவிற்கு சரியான தூக்கமும் அவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். இல்லையெனில் உடல் எடை அதிகரித்துவிடும்.

தூங்கும்போதுதான் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் நடைபெறுகின்றன. திசுக்களின் வளர்ச்சியும் ஏற்படும். இன்சுலின் அளவும் சரியாக சுரந்து குளுகோஸின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று ஒஹியோ பல்கலைக் கழ ஆராய்ச்சியாளர் சாரா ஆன்டர்ஸன் கூறுகிறார்.

இந்த ஆய்வில் சுமார் 977 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களை மூன்று பிரிவாக பிரித்தனர். 8 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாகவே தூங்கச் செல்பவர்கள் முதல் வகை. 8 மணியிலிருந்து 9 மணி வரை தூங்கச் செல்பவர்கள் இரண்டாம் வகை, 9 மணிக்கு பிறகு தூங்கச் செல்பவர்கள் மூன்றாம் வகை.

இதில் முதல் வகையினரில் ஒன்றில் பத்து குழந்தைக்குதான் உடல் பருமன் டீன் ஏஜில் ஏற்பட்டது. 16 சதவீதம் உடல் பருமன் இரண்டாம் வகையினருக்கு ஏற்பட்டது. 23 சதவீதம் உடல் பருமன் மூன்றாம் வகையினருக்கு அதிகரித்துள்ளது.

இந்த ஆய்வின் இறுதியாக, தூங்கும் நேரத்திற்கும் உடல் பருமனுக்கும் வலுவான தொடர்பு உள்ளது. ஆகவே குழந்தைகளின் தூக்க நேரத்தில் ஓழுங்குமுறையை பெற்றோர்கள் கொண்டு வந்தால், குழந்தைகளின் அறிவுத்திறன் , ஆரோக்கியம் இரண்டும் வலு பெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

English summary

early bed time may prevent obesity for children

early bed time may prevent obesity for children
Story first published: Tuesday, July 19, 2016, 18:02 [IST]
Desktop Bottom Promotion