For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளில் பளு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்!!!

By Ashok CR
|

உங்கள் குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளில் பளு அதிகரித்துள்ளதா? அவர்களுக்கும் ஒரு இடைவேளை தேவை. அவர்களுக்கும் அமைதியான வாழ்க்கை தேவை. அவர்களின் அன்றாட நடவடிக்கைளின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே போனால் அவர்கள் மூச்சு விடுவதற்கு கூட ஏங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நன்றாக யோசியுங்கள்.

கடந்த சில தினங்களாக, உங்கள் குழந்தை ஓய்வில்லாமல் இருப்பதை நீங்கள் கண்டீர்கள் என்றால், பிரச்சனை பூதாகரமாய் வெடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான அட்டவணையை அளவுக்கு அதிகமாக நிரப்பி கொண்டே இருப்பார்கள். பள்ளி முடிந்தவுடனேயே தங்கள் குழந்தைகளை ட்யூஷன் வகுப்பு, கிட்டார் வகுப்பு, ஆர்ட் வகுப்பு, யோகா வகுப்பு என பல்வேறு வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார்கள். கொஞ்சமாவது சுதந்திரமாக இருக்க வேண்டிய குழந்தைகளின் வாழ்க்கை நெருக்கடியாக மாறிவிடும்.

பள்ளி முடிந்தவுடன், குழந்தைகள் கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலை ஒன்று என்றால் அது அவர்களின் வீட்டு பாடமாகும். இந்த பட்டியலோடு மேலும் பலவற்றை சேர்ப்பது குழந்தைகளை ஓடிக்கொண்டே இருக்கச் செய்யும். உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்தால், அவர்களின் சுமையை குறைக்க முயற்சி செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That Your Child Is Over Scheduled

Is your child over scheduled? If you see any signs your kid is too busy, take action.
Desktop Bottom Promotion