குழந்தைக்கு அசைவ உணவை கொடுக்க ஆரம்பிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

அசைவ உணவு முதல் வகுப்பு புரதம் நிறைந்த ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. மேலும் இது குழந்தைகளின் தசை வளர்ச்சி மற்றும் வலிமையை ஊக்குவிக்க பெரும் பங்காற்றுகிறது. இருப்பினும் குழந்தை பிறந்த முதல் ஆண்டு வரை குழந்தையின் செரிமான அமைப்பு இதற்கு தயாராக இருக்காது.

எனவே உங்கள் குழந்தைக்கு அசைவ உணவு கொடுக்கும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டையுடன் தொடங்கவும்

முட்டையுடன் தொடங்கவும்

இது சிறந்த புரத ஆதாரமாகும் மற்றும் உங்கள் குழந்தையின் செரிமான அமைப்பிற்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் 9 மாதத்திற்கு முன்பாக முட்டை கொடுக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ளவும். ஏனெனில் உங்கள் குழந்தையின் அமைப்புகள் முதிர்ச்சி அடைந்து அசைவ உணவுகளை செரிப்பதற்கு அவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்.

ஒரு வருடத்திற்கு பின் மீன் மற்றும் கோழி கொடுக்கவும்

ஒரு வருடத்திற்கு பின் மீன் மற்றும் கோழி கொடுக்கவும்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு மீன் அல்லது கோழி கொடுக்க விரும்பினால், ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும். 13 அல்லது 14 மாதங்களில் தான் ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் அசைவ உணவுகளை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது, சூப் அல்லது குழம்பாக மட்டுமே கொடுக்க வேண்டுமே தவிர துண்டுகளைக் கொடுத்து விடக் கூடாது.

மீனுக்குப் பின் கோழி கொடுக்கவும்

மீனுக்குப் பின் கோழி கொடுக்கவும்

அசைவ உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போது, இறைச்சி கொடுப்பதற்கு முன் மீன் கொடுக்கவும். மீன் தொடங்கி பிறகு கோழிக்கு செல்வது நல்லது. நீங்கள் ஒரு அமைப்பை நினைவில் கொள்ள வேண்டும். சூப் அல்லது குழம்பில் தொடங்கி பின் வேக வைத்தததை கொடுக்க செல்ல வேண்டும்.

ஆட்டிறைச்சியை மெதுவாக ஆரம்பிக்கவும்

ஆட்டிறைச்சியை மெதுவாக ஆரம்பிக்கவும்

ஆட்டு இறைச்சியில் அதிக அளவு நைட்ரெட் உள்ளதால் இது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். எனவே இதனை உடனே கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இறைச்சியை அதிகம் வேக வைக்க வேண்டாம்

இறைச்சியை அதிகம் வேக வைக்க வேண்டாம்

இந்த விதியை மீன் மற்றும் இறைச்சி ஆகிய இரண்டிற்கும் பின்பற்றவும். மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வேக வைத்த மற்றும் வாட்டிய இறைச்சியையே தேர்வு செய்யவும்.

வரம்புடன் கொடுக்கவும்

வரம்புடன் கொடுக்கவும்

குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை வாரத்திற்கு இரு முறை என வரம்புடன் கொடுக்கவும். இறைச்சி மற்றும் மீன் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், அது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, உங்கள் குழந்தையின் வளர்சிதை மாற்ற விகிதத்தை குறைக்கும். மேலும் மீன் அல்லது இறைச்சியை இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்த்து, மதிய உணவின் போது கொடுப்பது நல்லது. உங்கள் குழந்தை அடுத்த வேலை உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக இது ஜீரணிக்க போதுமான கால அவகாசத்தை உறுதி செய்கிறது.

சரியான இறைச்சியை வாங்கவும்

சரியான இறைச்சியை வாங்கவும்

சமைப்பதற்கு முன்பாக நீங்கள் இறைச்சியை முழுவதும் நன்றாக கழுவி சுத்தம் செய்துள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் குழந்தைக்கு கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வாங்காதீர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Tips To Start Your Baby On Non-Vegetarian Food

Non-vegetarian food is an excellent source of first-class protein and contributes in a big way to promote muscle development and strength in children. However, your baby’s digestive system isn’t ready for it, at least during the first year after birth.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter