Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இயற்கையாக உங்கள் செல்ல குழந்தையின் சருமத்தை வெள்ளையாக்குவது எப்படி?
பொதுவாக குழந்தைகள் அழகு தான். இருப்பினும் சில குழந்தைகள் வளர வளர அவர்களின் சருமம் கருமையாகும். அப்படி கருமையாகும் உங்கள் குழந்தையின் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு ஒருசில எளிய வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், சருமத்திற்கு நிறத்தை அளிக்கும் மெலனின் அளவைக் குறைக்கலாம்.
கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...
ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நிறத்தை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். சிறு வயதிலேயே குழந்தையின் பட்டுப் போன்று மென்மையான சருமத்தில் கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தினால், அவர்களின் சரும செல்கள் பாதிக்கப்படுவதோடு, அழகும் பாதிக்கப்படும்.
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று தெரிந்து கொள்ள ஆசையா?
எனவே எளிய இயற்கை வழிகளைக் கொண்டு எப்படி குழந்தையின் சருமத்தை வெள்ளையாக்குவது என்று தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி குழந்தையின் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #1
தினமும் குழந்தையின் சருமத்தை ஆலிவ் ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்து விடலாம். அதுவும் ஆலிவ் ஆயில் வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்து விட்டால், அவர்களின் சருமம் மென்மையாவதோடு, நாளடைவில் சருமத்தின் நிறமும் மேம்படும்.

டிப்ஸ் #2
உங்கள் குழந்தைக்கு ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் மற்றும் திராட்சை ஜூஸ் கொடுக்கலாம். இதனால் அவர்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.

டிப்ஸ் #3
ரோஸ் வாட்டர், பால் மற்றும் கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, உங்கள் செல்ல குழந்தையில் உடல் முழுவதும் தேய்த்து குளிப்பாட்டினால், இயற்கையாக சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

டிப்ஸ் #4
குழந்தை கருப்பாகிவிடும் என்று அவர்களை வெயிலில் காண்பிக்காமலேயே வைக்காதீர்கள். இதனால் அவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். எனவே அதிகாலையில் குழந்தையை இதமான வெயிலில் அழைத்துச் செல்வதோடு, மற்ற நேரங்களில் குழந்தையை வெயிலில் சுற்ற அனுமதிக்காதீர்கள். இதனால் அதிகப்படியான சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டு, சருமம் கருமையடையும்.

டிப்ஸ் #5
கண்ட சோப்புக்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அவர்களின் சருமத்தை சுத்தம் செய்ய பால் அல்லது ரோஸ் வாட்டர் பயன்படுத்துங்கள். வேண்டுமானால், மருத்துவர் பரிந்துரைத்த மைல்டு சோப்புக்களைப் பயன்படுத்தலாம்.

டிப்ஸ் #6
1 டீஸ்பூன் சந்தனப் பொடியில், சிறிது பால் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உடல் முழுவதும் தடவி 10-15 நிமிடம் கழித்து குளிப்பாட்டவும். இப்படி செய்வதன் மூலம், மஞ்சள் தூள் நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும், பால் சருமத்தை ஈரப்பசையுடன் வைக்கும் மற்றும் சந்தனப் பொடி சருமத்தை மென்மையாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

டிப்ஸ் #7
குழந்தையை எப்போதும் சுடுநீரில் குளிப்பாட்டாதீர்கள். இதனால் அவர்களது சருமம் மிகுந்த வறட்சிக்கு உள்ளாகும். வேண்டுமானால், வெதுவெதுப்பான நிலையில் உள்ள நீரில் குளிப்பாட்டுங்கள்.



Click it and Unblock the Notifications
