உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பாதுகாப்பாக பயணிக்கிறார்களா?

By: SATEESH KUMAR S
Subscribe to Boldsky

பள்ளியிலிருந்து திரும்பிய தனது 7 வயது மகன் பேசிய வார்த்தைகளை கேட்டு பாகி ஜெயின் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்தார்.இதை போன்ற வார்த்தைகளை யாரிடம் கற்றாய் என்ற வினா எழுப்பப்பட்ட போது,தனது பள்ளி பேருந்தில் அனைவரும் அதை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், தானும் தனது பள்ளியின் மூத்த சிறுவர்களை பின்பற்றி அதே போன்றே இருக்க விரும்புவதாகவும் கூறினான் என்கிறார் பாகி ஜெயின். அந்த நேரத்தில் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்று அவர் அறிந்திருக்கவில்லை.

பாகி ஜெயின் ஒருவர் மட்டுமல்ல பெரும்பாலான பெற்றோர்களும் பள்ளி அதிகாரிகளும் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் ஒழுக்கத்தை கற்பித்து கவர முயற்சிகின்றனரே தவிர பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் அதை பின்பற்றுகின்றனரா என்று கவனிப்பதில்லை. சமீப கால கட்டங்களில் குழந்தைகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டு ஒரு ரவுடியை போல நடந்து கொள்ளும் பல சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்படுகிறோம்.

Is Your Kid Travelling To School Safely?

உங்கள் குழந்தை ரவுடியாக மாறுவது எப்போது?

நீங்கள் உங்கள் குழந்தை தனது பள்ளி பேருந்திலிருந்து கெட்ட பழக்க வழக்கங்களை கற்று கொள்வதாக எண்ணுகிறீர்களா? உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்பியுங்கள், முறைகேடான மொழிநடையை பொறுத்து கொள்ள முடியாது என்று உறுதியாக கூறுங்கள். வளர்ந்த குழந்தைகளை போல நடித்து கொள்வதிலும்,தவறுகள் புரிவதும் அவ்வளவு சிறப்பானது அல்ல என்பதை விளக்கி கூறுங்கள். அடிக்கடி பேருந்தில் சண்டையில் ஈடுபடும் குழந்தையை பற்றிய விஷயம் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது, அவர்கள் ஓட்டுநரிடமோ அல்லது பள்ளி அதிகாரிகளிடமோ தகராறில் ஈடுபட்டு தவறான முன்னுதாரணம் ஆகின்றனர் என்கிறார் சவ்நாணி.

இவ்வாறு நடந்து கொள்வதற்கு பதிலாக, இரு தரப்புகளையும் கேட்டு அறிந்து தங்கள் குழந்தை தவறு செய்திருப்பதாக அறிந்தால், கடினத்தன்மை காட்டுவதற்கு பதில் அக்கறையுடன் செயல் பட வேண்டும். தங்கள் குழந்தையை அடுத்த குழந்தையை மிரட்டுவது தவறு என்பதை புரிந்து கொள்ள செய்ய வேண்டும். குழந்தைகள் அடிக்கடி மிரட்டுவது சம்பந்தமாக புகார் தெரிவிப்பதில்லை. எனவே அது போன்ற புகார்களை உங்களிடமோ அல்லது பேருந்து மேற்பார்வையாளரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ தெரியப்படுத்த பழக்கப்படுத்துங்கள் என்கிறார் டாக்டர் சோனார்.

பள்ளி அதிகாரிகளின் பங்கு

பள்ளி பேருந்துகளில் பாதுகாப்பும், ஒழுக்கமும் கவலை தர கூடிய விஷயங்களாக மாறிவிட்ட நிலையில் அதனை பராமரிக்க தற்போது பள்ளி அதிகாரிகள் சில கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசில நகர பள்ளிகளில் பேருந்துகளுக்கான மாணவர் கண்காணிப்பாளரை நியமிக்கின்றனர். அவர்கள் பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை பராமரிப்பதோடு பேருந்து ஊழியர்களின் மீதும் ஒரு கண் வைத்து கவனிக்கின்றனர். சில பள்ளிகள் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சுவரசியல் அளிக்கும் விதமாக சந்திவாலியில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில், மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை ஸ்வைப் செய்து பேருந்திலும் ஏறும்போது பெற்றோர்களுக்கு மொபைலுக்கு உரைசெய்தி அனுப்படும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிகள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள வழிமுறைகளுக்கு இணங்கி பெண் உதவியாளராய் பேருந்தில் பணிக்கு அமர்த்தியுள்ளன. அனுபவம் வாய்ந்த உதவியாளரை நியமிப்பது அவசியமான ஒன்றாகும்.பள்ளி பேருந்துகளில் மூத்த பெரிய குழந்தைகளும் இளைய சிறிய குழந்தைகளும் ஒன்றாக பயணிக்க நேர்கையில், பெரிய குழந்தைகளை பின் இருக்கைகளிலும்,சிறிய குழந்தைகளை முன் இருக்கைகளில் அமர செய்வது இந்த உதவியாளர்களின் பொறுப்பாகும் என்கிறார் சாவ்நாணி.

பள்ளி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

* பள்ளி பேருந்து பாதுகாப்பு குறித்து வகுப்பறைகளில் அறிவுரைகள் வழங்க வேண்டும்.

* பேருந்துகளில் ஏறுவதற்கு அவர்களை குறித்த நேரத்திற்கு அனுப்ப வேண்டும் இதன் மூலம் பேருந்தில் ஏற மாணவர்கள் ஓடுவதை தவிர்க்க முடியும்.

* பேருந்துக்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகளை சந்தித்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* பேருந்தில் தேவையான ஊழியர்களும் பெண் உதவியாளரும் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குழந்தைகளின் நடத்தையை கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

* பள்ளி பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ள நிறுவனம் குறித்த தகவல்களை ஆய்ந்து அறிதல் வேண்டும்.

* குழந்தைகளுக்கு பேருந்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் எவ்வாறு பேருந்தில் ஏறுவது,மற்றும் பேருந்துக்காக காத்திருப்பது குறித்தும் கற்று தர வேண்டும்.

* மாணவர்களோ அல்லது பேருந்து ஊழியர்களோ இவர்களின் தவறான அணுகுமுறை உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

* பள்ளி பேருந்தை தூய்மையாக வைத்திருக்க தங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

English summary

Is Your Kid Travelling To School Safely?

Pakhi Jain was in for a shock when she heard her seven-year old return from school one day and mouth expletives.
Subscribe Newsletter