For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட சில ஐடியாக்கள்!!!

By Ashok CR
|

ஒரு தம்பதியின் வாழ்க்கையில் குழந்தை நுழையும் போது, எண்ணிலடங்கா மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் அவர்களின் வாழ்க்கையின் கடைசி காலம் வரை நீடிக்கும். ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட விரும்புவீர்கள். அப்படி செய்வதால் அந்த அழகிய தருணங்களை பசுமையாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா? குழந்தையின் முதல் பிறந்த நாள் பார்ட்டி என்றால் அழகிய கேக், பரிசுப்பொருட்கள், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து களை கட்ட கூடிய நிகழ்வாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியை பரிமாற நாம் அனைவருமே விரும்புவோம். அதற்கு உகந்த நேரமாக இருக்கும் இதனை கண்டிப்பாக தவற விட கூடாது.

உங்கள் குழந்தைக்கு ஒரு வயது முடிவடைந்த சாதனையை கொண்டாடுவதை வித உங்களுக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்? இந்த பொன்னான நாளை கொண்டாட, பல வகையான பிறந்த நாள் பார்ட்டி ஐடியாக்களில் எதையாவது நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இன்றைய இளைஞர்கள் மத்தியில் பிறந்தால் நாள் தீம்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளது. உங்கள் குழந்தைக்கு அதனுடைய பிறந்த நாள் கொண்டாடட்டங்கள் கண்டிப்பாக நினைவில் இருக்க போவதில்லை. இருப்பினும் இந்த பிறந்த நாள் அதனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.

Ideas For Your Kid's First Birthday Party

நீங்கள் ஏற்கனவே சில பிறந்த நாள் பார்ட்டிகளை திட்டமிட்டு செயல்படுத்தியிருந்தால், உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் பார்ட்டிக்கு திட்டமிட கொஞ்சம் கடினமாக இருக்கும். அதற்கு காரணம் உங்கள் குழந்தையின் பிறந்த நாள் பார்ட்டி தனித்துவமாக இருக்க வேண்டும் அல்லவா? இருப்பினும் உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் பார்ட்டியை கோலாகலமாக கொண்டாட சில எளிய உத்தியும் டிப்ஸும் உள்ளது. இவைகளை பின்பற்றினால் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாயங்களை ஏற்படுத்தலாம்.

உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற சில சிறந்த பிறந்த நாள் பார்ட்டிக்கான ஐடியாக்களை பற்றி பார்க்கலாமா...

பார்ட்டி எங்கே?

முதல் பிறந்த நாள் பார்ட்டி என்றாலே அது கோலாகலமான விழாவாக இருக்கும். அதனை உங்கள் வீட்டிலேயே எளிய பார்ட்டியாக கொண்டாடலாம் அல்லது பார்ட்டி ஹால் மற்றும் ஹோட்டல்களில் பிரம்மாண்டமாகவும் கொண்டாடலாம். ஒரு வேளை பார்ட்டி வீட்டில் நடக்கவில்லை என்றால், பரிசுப்பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்ய மறந்து விடாதீர்கள்.

விசேஷ கேக்

இது உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் பார்ட்டி. அசத்தலான கேக் இல்லாமல் இந்த பார்ட்டி கண்டிப்பாக முழுமை பெறாது. வீட்டிலேயே நீங்கள் கேக் செய்யலாம் அல்லது நல்ல ஒரு பேக்கரியிலிருந்து உங்கள் பிறந்த நாள் தீம்மை பொறுத்து அதற்கேற்ப ஒரு கேக்கை வாங்கிக் கொள்ளுங்கள்.

தீம்மை தேர்ந்தெடுங்கள்

குழந்தைகளுக்கு கார்ட்டூன் என்றால் கொள்ளை பிரியம் என்பது அனைவருமே அறிந்தது தான். அதனால் கார்ட்டூன் தீம்மை தேர்ந்தெடுக்கலாம் அல்லது குழந்தைக்கு எதன் மீது நாட்டம் அதிகமாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் தீம்மை தேர்ந்தெடுக்கலாம். விலங்குகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் உணவுகளை மையப்படுத்தி கூட தீம்மை தேந்தேடுக்கலாம்.

விருந்தாளிகளின் பெயர்களை பட்டியலிடுதல்

பிறந்த நாள் பார்ட்டியில் அதிக அளவு கூட்டம் சேர்ந்தால் அது உங்கள் குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் உங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களை மட்டுமே பார்ட்டிக்கு அழையுங்கள். உங்கள் விருந்தாளிகளின் பட்டியலில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

விளையாட்டுக்கள்

பார்ட்டி சூழலை குதூகலமாக வைத்திட, அங்கு வந்திருக்கும் குழந்தைகளுக்காக சில விளையாட்டுக்களை ஏற்பாடு செய்யலாம். இது உங்கள் குழந்தையை மட்டுமல்லாது வந்திருக்கும் குழந்தைகளையும் சந்தோஷப்படுத்தும்.

புகைப்படம் எடுத்தல்

பிறந்த நாள் பார்ட்டியின் போது உங்கள் குழந்தை மற்றும் உங்களுக்கு இடையே நடக்கும் விசேஷ தருணங்களை பதிவு செய்ய புகைப்படங்கள் எடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இந்த பிறந்த நாள் பார்ட்டியை எப்போதுமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இதுவும் கூட உதவும்.

அலங்காரங்கள்

உங்கள் குழந்தையின் பிறந்த நாள் பார்ட்டியை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற, பிறந்த நாள் தீம்மின் அடிப்படையில் பட்டிகை, பலூன்கள், கைக்குட்டை மற்றும் இதர அலங்கார பொருட்களை பயன்படுத்துங்கள். உணவு உண்ணும் தட்டு மற்றும் பாத்திரங்களையும் கூட தீம்மின் அடிப்படையில் பயன்படுத்தலாம்.

உணவு பட்டியல்

உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் பார்ட்டிக்கு உணவு ஏற்பாடு செய்வதற்கு முன்பு, உங்கள் விருந்தாளிகளில் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் உண்ணுபவர்கள் எத்தனை பேர் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள். அதே போல் என்ன வகையான பானங்கள் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும் என்பதையும் தேர்ந்தெடுங்கள்.

பரிசுப்பொருட்கள்

கடைசியாக, பரிசுப்பொருட்கள் இல்லாமல் பிறந்த நாள் பார்ட்டி முழுமை அடையாது. உங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான பரிசுப்பொருட்கள் வேண்டும் என்பதை விருந்தாளிகளுக்கு முன்பே நீங்கள் தெரியப்படுத்தலாம். அல்லது பார்ட்டியின் தீம்மை அடிப்படையாக கொண்ட பரிசுப்பொருட்களை வாங்கி வரச் சொல்லாம்.

மேற்கூறிய ஐடியாக்களை பின்பற்றி உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றலாம். மிகச் சிறந்த பார்ட்டியை ஏற்பாடு செய்து அது உங்கள் குழந்தைக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும் படி செய்யுங்கள்.

English summary

Ideas For Your Kid's First Birthday Party

Planning the first birthday party for your child can turn out to be a bit complicated, unless you have already planned a few similar birthday parties. However, you can turn your kid's first birthday into a grand affair by a few simple tips, tricks and techniques that can do wonders, anytime and anywhere.
Story first published: Thursday, January 2, 2014, 19:00 [IST]
Desktop Bottom Promotion